Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | p தொகுதி தனிமங்கள் - II : சரியான விடையைத் தேர்வு செய்க

வேதியியல் - p தொகுதி தனிமங்கள் - II : சரியான விடையைத் தேர்வு செய்க | 12th Chemistry : UNIT 3 : p-Block Elements-II

   Posted On :  18.08.2022 10:58 pm

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : p தொகுதி தனிமங்கள் - II

p தொகுதி தனிமங்கள் - II : சரியான விடையைத் தேர்வு செய்க

வேதியியல் : p தொகுதி தனிமங்கள் - II : சரியான விடைகளுக்கான பதில்கள், தீர்வு மற்றும் விளக்கம்

வேதியியல் : p தொகுதி தனிமங்கள் -  II

I. சரியான விடையைத் தேர்வு செய்க 


1. பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப் படவில்லை

) நெஸ்லர் காரணி  

) IV ம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு 

) III ம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு 

) டாலன்ஸ் வினைப்பொருள்

விடை: ) நெஸ்லர் காரணி


2. நைட்ரஜனைப் பொருத்து சரியானது எது

) குறைந்த எலக்ட்ரான் கவர்தன்மை உடைய தனிமம் 

) ஆக்சிஜனைக் காட்டிலும் குறைவான அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது

) d - ஆர்பிட்டால்கள் உள்ளன

) தன்னுடன் pπ – pπ பிணைப்பை உருவாக்கும் தன்மையைப் பெற்றுள்ளது

விடை: ) தன்னுடன் pπ – pπ பிணைப்பை உருவாக்கும் தன்மையைப் பெற்றுள்ளது


3. தனிம வரிசை அட்டவணையில், 15 ம் தொகுதி 3 -ம் வரிசையில் உள்ள ஒரு தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு 

) 1s2 2s2 2p4 

) 1S2 2S2 2p3 

) 1s2 2s2 2p6 3s2 3p2 

) 1S2 2S2 2p63S2 3p3

விடை : ) 1s2 2s2 2p6 3s2 3p3 


4. (A) என்ற திண்மம் நீர்த்த வலிமைமிகு NaOH கரைசலுடன் வினைபுரிந்து அருவருக்கத்தக்க மணமுடைய வாயு B ஐத் தருகிறது (B) யானது காற்றில் தன்னிச்சையாக எரிந்து புகை வளையங்களை உருவாக்குகிறது. (A) மற்றும் (B) முறையே 

) P4 (சிவப்பு) மற்றும் PH3 

) P4 (வெண்மை ) மற்றும் PH3

) S8 மற்றும் H2

) P4(வெண்மை ) மற்றும் H2S

விடை: ) P4(வெண்மை ) மற்றும் H2S


5. பழுப்பு வளையச் சோதனையில் உருவாகும் வளையத்தில் பழுப்பு நிறத்திற்கு காரணமாக அமைவது 

) NO மற்றும் NO2 கலவை 

) நைட்ரசோ ஃபெர்ரஸ் சல்பேட் 

) பெர்ரஸ் நைட்ரேட் 

) பெர்ரிக் நைட்ரேட்

விடை: ) நைட்ரசோ ஃபெர்ரஸ் சல்பேட் 


6. PCl3, ன் நீராற்பகுப்பினால் உருவாவது 

) H3PO3

) PH3

) H3PO4 

) POCI3

விடை : ) H3PO3


7. P4O6ஆனது குளிர்ந்த நீருடன் வினைபுரிந்து தருவது 

) H3PO3

) H4P2O7 

) HPO3 

) H3PO4

விடை : ) H3PO3


8. பைரோபாஸ்பரஸ் அமிலத்தின் (H4P2O5) காரத்துவம் 

) 4 

) 2 

) 3 

) 5 

விடை : ) 2


9. ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி 

) 6N 

) 4N 

) 2N 

) இவை எதுவுமில்லை 

விடை: ) 6N 

நார்மாலிட்டி = M x காரத்துவம் = 2x 3 = 6


10. கூற்று : குளோரின் வாயுவைக் காட்டிலும் ஃபுளுரினின் பிணைப்பு பிளவு ஆற்றல் அதிகம். காரணம் : குளோரினானது, புளுரினைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் விலக்கு விசையினைப் பெற்றுள்ளது

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல

) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விடை: ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு


11.  பின்வருவனவற்றுள் வலிமையான ஆக்சிஜனேற்றி எது

) Cl2 

) F2 

) Br2 

) I2

விடை : ) F2


12. ஹைட்ரஜன் ஹேலைடுகளின் வெப்பநிலைப்புத் தன்மையின் சரியான வரிசை எது?

) HI > HBr > HCl > HF 

) HF> HCl > HBr > HI

) HCl > HF> HBr > HI 

) HI> HCl> HF> HBr

விடை: ) HF> HCl> HBr> HI 


13.  பின்வரும் சேர்மங்களில் உருவாக வாய்ப்பில்லாத சேர்மம் எது

) XeOF

) XeO

) XeF2 

) NeF2

விடை : ) NeF2 


14. மிக எளிதாக திரவமாக்க இயலும் வாயு எது?

) Ar 

) Ne 

) He 

) Kr 

விடை : ) He


15. XeF6 ன் முழுமையான நீராற் பகுப்பினால் உருவாவது 

) XeOF4 

) XeO2F2 

) XeO3 

) XeO2

விடை: ) XeO3 


16. சல்பைட் அயனியானது அயோடினால் ஆக்சிஜ னேற்றம் அடையும் போது இவ்வாறு மாற்ற மடைகிறது

) S4O6 2– 

) S2O6 2– 

) SO42- 

) SO32-

விடை: ) SO42-


17. பின்வருவனவற்றுள் வலிமையான அமிலம் எது

) HI 

) HF 

) HBr 

) HCl

விடை: ) HI 

காரணம்: H-I பிணைப்பு வலிமை குறைந்தது. எனவே HI அமிலம் வலிமையானது


18. ஹாலஜன்களின் பிணைப்பு பிளவு என்தால்பி மதிப்பினைப் பொறுத்து சரியான வரிசை எது? (NEET) 

) Br2 >I2> F2 >Cl2 

) F2 > Cl2 > Br2>I2 

) I2> Br2> Cl2>F2 

) Cl2> Br2 > F2>I2

விடை : ) Cl2> Br2 > F2>I2


19. அமிலத் தன்மையைப் பொறுத்து, பின் வருவனவற்றுள் சரியான வரிசை எது? (NEET) 

) HClO2 <HClO < HClO3 < HClO4 

) HClO4 <HClO2 < HCIO < HClO3 

) HClO3 < HClO4 < HClO2 < HClO

) HClO < HCIO2 < HClO3 < HClO4

விடை: ) HClO < HCIO2 <HCIO3 < HCIO4


20. தாமிரத்தினை அடர் HNO3 உடன் வெப்பப்படுத்தும் போது உருவாவது,

 ) Cu (NO3)2 NO மற்றும் NO2 

) Cu (NO3)2 மற்றும் N2

) Cu (NO3) 2மற்றும் No2

) Cu (NO3) 2 மற்றும் NO

விடை: ) Cu (NO3) 2மற்றும் No2


Tags : Chemistry வேதியியல்.
12th Chemistry : UNIT 3 : p-Block Elements-II : p-Block Elements-II: Choose the best answer Chemistry in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : p தொகுதி தனிமங்கள் - II : p தொகுதி தனிமங்கள் - II : சரியான விடையைத் தேர்வு செய்க - வேதியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : p தொகுதி தனிமங்கள் - II