அமெரிக்க விடுதலைப் போர் | வரலாறு - பாஸ்டன் தேநீர் விருந்து | 9th Social Science : History: The Age of Revolutions
பாஸ்டன் தேநீர் விருந்து
குடியேற்றங்களைச் சேர்ந்தோர் பல இடங்களில் தேயிலை இறக்குமதி செய்யப்படுவதைத் தடுத்தனர். சார்ல்ஸ்டவுனில் தேயிலையை இறக்கிய அவர்கள் அதைத் துறைமுகக் கிடங்குகளிலேயே தேக்கி வைத்து பாழ்படச் செய்தனர். நியூயார்க்கிலும் பிலடெல்பியாவிலும் தேயிலையைச் சுமந்து வந்த கப்பல்கள் மறிக்கப்பட்டன. 1773 டிசம்பரில் அமெரிக்கப் பூர்வகுடிமக்களைப் போல் மாறுவேடம் பூண்ட சிலர் சரக்குக் கப்பல்களின் மேலேறி அதிலிருந்து தேயிலையைக் கடலில் வீசினர். பாஸ்டன் தேநீர் விருந்து (Boston Tea Party) என வர்ணிக்கப்பட்ட இந்நிகழ்வு பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்த ஆதரவாளர்களுக்கு முன்பாக நடைபெற்றது. இச்சவால் இங்கிலாந்திற்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள குடியேற்ற நாடுகளுக்குமிடையே போர் ஏற்படுவதற்கு வழிகோலியது.