அமெரிக்க விடுதலைப் போர் | வரலாறு - பாஸ்டன் தேநீர் விருந்து | 9th Social Science : History: The Age of Revolutions
Posted On : 06.09.2023 01:00 am
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : புரட்சிகளின் காலம்
பாஸ்டன் தேநீர் விருந்து
குடியேற்றங்களைச் சேர்ந்தோர் பல இடங்களில் தேயிலை இறக்குமதி செய்யப்படுவதைத் தடுத்தனர். சார்ல்ஸ்டவுனில் தேயிலையை இறக்கிய அவர்கள் அதைத் துறைமுகக் கிடங்குகளிலேயே தேக்கி வைத்து பாழ்படச் செய்தனர்.
பாஸ்டன் தேநீர் விருந்து
குடியேற்றங்களைச் சேர்ந்தோர் பல இடங்களில் தேயிலை இறக்குமதி செய்யப்படுவதைத் தடுத்தனர். சார்ல்ஸ்டவுனில் தேயிலையை இறக்கிய அவர்கள் அதைத் துறைமுகக் கிடங்குகளிலேயே தேக்கி வைத்து பாழ்படச் செய்தனர். நியூயார்க்கிலும் பிலடெல்பியாவிலும் தேயிலையைச் சுமந்து வந்த கப்பல்கள் மறிக்கப்பட்டன. 1773 டிசம்பரில் அமெரிக்கப் பூர்வகுடிமக்களைப் போல் மாறுவேடம் பூண்ட சிலர் சரக்குக் கப்பல்களின் மேலேறி அதிலிருந்து தேயிலையைக் கடலில் வீசினர். பாஸ்டன் தேநீர் விருந்து (Boston Tea Party) என வர்ணிக்கப்பட்ட இந்நிகழ்வு பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்த ஆதரவாளர்களுக்கு முன்பாக நடைபெற்றது. இச்சவால் இங்கிலாந்திற்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள குடியேற்ற நாடுகளுக்குமிடையே போர் ஏற்படுவதற்கு வழிகோலியது.
Tags : American War of Independence | History அமெரிக்க விடுதலைப் போர் | வரலாறு.
9th Social Science : History: The Age of Revolutions : Boston Tea Party American War of Independence | History in Tamil : 9th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : புரட்சிகளின் காலம் : பாஸ்டன் தேநீர் விருந்து - அமெரிக்க விடுதலைப் போர் | வரலாறு : 9 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.