புரட்சிகளின் காலம் | வரலாறு | சமூக அறிவியல் - கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி | 9th Social Science : History: The Age of Revolutions
V. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சுருக்கமான விடையளி.
1.
பியூரிட்டானியர்
என்போர்
யார்?
அவர்கள்
இங்கிலாந்தை
விட்டு
ஏன்
வெளியேறினர்?
விடை:
• இங்கிலாந்து திருச்சபையை சீர்திருத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்ட மதச்சீர்திருத்த இயக்கத்திற்குத் தலைமையேற்ற சீர்திருத்தவாதிகளே பியூரிட்டானியர் என்று அழைக்கப்பட்டனர்.
• இங்கிலாந்து திருச்சபையை சீர்திருத்த இவர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் முதலாம் ஜேம்ஸ் மற்றும் முதலாம் சார்லஸ் அரசர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை .
• எனவே அவர்கள் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பியூரிட்டானியர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேறினர்.
2.
குவேக்கர்
பற்றி
நீவிர்
அறிவதென்ன?
விடை:
• இங்கிலாந்தில் ஜார்ஜ் பாக்ஸ் என்பவரால் நிறுவப்பட்ட நண்பர்கள் குழாம் என்னும் கிறிஸ்துவ மதக்குழுவின் உறுப்பினர்கள் குவேக்கபர் எனப்பட்டனர்.
• இவர்கள் புனித ஆவிக்கு அதிக முக்கியத்துவமும் சடங்கு சம்பிரதாயங்களையும் சமயக்குருமார் அமைப்பையும் எதிர்த்தனர்.
3.
'பாஸ்டன்
தேநீர்
விருந்தின்'
முக்கியத்துவத்தைக்
குறிப்பிடுக.
விடை:
• 1773 ல் குடியேற்ற மக்கள் அமெரிக்கப் பூர்வீக குடிமக்களைக் போன்று மாறுவேடம் பூண்டு கப்பல்களில் ஏறி அதிலிருந்த தேயிலையைக் கடலில் வீசினர். இந்நிகழ்ச்சி ‘பாஸ்டன் தேநீர் விருந்து' எனப்படுகிறது.
• இந்நிகழ்ச்சி இங்கிலாந்துக்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள குடியேற்ற நாடுகளுக்குமிடையே போர் ஏற்பட வழிகோலியது.
4.
செப்டம்பர்
படுகொலை
பற்றி
ஒரு
குறிப்பு
வரைக.
விடை:
• 1792ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாரிஸ் கம்யூன் அரசருடைய அரண்மனையை தாக்க ஆணை பிறப்பித்தது.
• எனவே அரசர் தன்னுடைய சுவிட்சர்லாந்து நாட்டுக் காவலர்களை, மக்களை நோக்கிச் சுடுமாறு ஆணை பிறப்பித்தார். ஆனால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
• சுவிட்சர்லாந்து காவலர்களின் செயல்களால் ஆத்திரம் கொண்ட பொதுமக்கள் அரச ஆதரவாளர்களை மாரட் என்பவரின் தலைமையில் வேட்டையாடினர்.
• மூன்று நாட்களில் மாற்றுக் கருத்துடைய எதிரிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 1500 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
• விசாரணைக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சி செப்டம்பர் படுகொலை என அழைக்கப்படுகிறது.
5.
பிரான்சின்
மூன்று
வர்க்கங்களின்
அமைப்பு
(Three Estates) பற்றி
எழுதுக.
விடை:
முதல் வர்க்கம் : மதகுருமார்
இரண்டாவது வர்க்கம் : பிரபுக்கள்
மூன்றாம் வர்க்கம் : வழக்கறிஞர்கள், பணம் படைத்த வர்த்தகர்கள், வணிகர்கள், வங்கியாளர்கள், நிலவுடையாளர்கள் ஆகியோர் அடங்கிய பொதுமக்கள்.
இவர்கள் மூன்றாவது வர்க்கத்தினர் பிரபுக்களுக்குத் தலைவணங்கவும் அரசரின் ஆணைகளுக்கு பணியவும் மறுத்தனர்.
6.
பிரெஞ்சு
புரட்சியில்
லஃபாயட்டின்
பங்கினை
எழுதுக.
விடை:
• லஃபாயட் என்பவர் மக்களாட்சிக் கோட்பாடுகளோடு நாடு திரும்பி, பிரெஞ்சுப் படையில் முக்கியப்பங்கு வகித்தார்.
• இவர் பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரெஞ்சு தேசியப் பாதுகாவலர்கள் என்ற படைப்பரிவுக்கு தலைமையேற்றார்.
• ஜெபர்சன் உதவியோடு இவர் ‘மனிதன் மற்றும் பிரகடனம்' என்பதை எழுதினார்.
7.
பாஸ்டைல்
சிறைச்சாலை
தகர்ப்பிற்கான
பின்னணி
என்ன?
விடை:
• அரசரால் வெளியேற்றப்பட்ட சாமானியர்களின் பிரதிநிதிகள் டென்னிஸ் மைதானத்தில் ஒன்று கூடினர். அவர்களைக் கலைக்க அரசர் தனது படை வீரர்களுக்குக் கட்டளையிட்டார். ஆனால் அவர்கள் பணிய மறுத்தனர்.
• மக்களைச் சுட்டுத்தள்ளுவதற்காக அரசர் அயல் நாட்டுப் படையினரை அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
• இதை அறிந்தமக்கள் கிளர்ச்சியில் இறங்கி, பாஸ்டில் சிறையைத் தகர்த்தி அங்கே சிறை வைக்கபட்டிருந்தவர்களை விடுதலை செய்தனர்.
8. பிரெஞ்சுப் புரட்சியின் போது விவசாயிகள் செலுத்த வேண்டிய வரிகள் யாவை ?
விடை:
• டித் (தசமபாகம்)
• டெய்லே (நிலவரி)
• காபெல்லே (உப்புவரி)