பாய்வுக் கட்டுப்பாடு
கற்றலின் நோக்கங்கள்
இந்தப் பாடப்பகுதியைக் கற்றபின் மாணவர் அறிந்து கொள்வது.
• பல விதமான கூற்றுகளைப்பற்றி தெரிந்து கொள்ளுதல்
• பல்வேறு பாய்வுக் கட்டுப்பாட்டு கூற்றுகளை உருவாக்குதல்
அறிமுகம்
c++ நிரலாக்கத்தின் மாறிகள், மாறிலிகள், செயற்குறிகள், தரவினங்கள் போன்றவற்றின் அடிப்படை கருத்துகளைப் பற்றி முந்தைய பாடப்பகுதியில் பார்த்தோம். பொதுவாக ஒரு நிரலின் கூற்றுகள் தொடக்கத்திலிருந்து இறுதி வரை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும். இருப்பினும் இத்தகைய வரிசைமுறை இயக்கம் கட்டுப்பாடுடையதாகவும் குறைந்த பயனுள்ளதாகவும் உள்ளது. பல சூழ்நிலைகளில் குறிப்பிட்ட நிபந்தனையின் 1 பி அடிப்படையில் நிரல் குறிமுறையின் தொகுதி நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்மானிப்பது அதிக பயனுள்ளதாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், பாய்வுக் கட்டுப்பாடு நிரலின் ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு தாவச் செய்கிறது. அத்தகைய தாவலுக்கு காரணமான நிரல் கூற்றுகள் கட்டுப்பாடு கூற்றுகள் எனப்படும்.
இந்த பாடப்பகுதியில் கட்டுப்பாட்டு கட்டமைப்பின் அடிப்படை செயல்பாடுகளான தேர்ந்தெடுப்பு, மடக்கு மற்றும் தாவுதல் கூற்றுகள் பற்றி காண்போம்.