Posted On :  25.09.2022 03:41 am

11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு

C++ do-while மடக்கு

do-while மடக்கு வெளியேறல் சோதிப்பு மடக்காகும். do while மடக்கினில் மடக்கின் உடற்பகுதி செயல்படுத்தப்பட்ட பின் மடக்கின் இறுதியில் நிபந்தனை சரிபார்க்கப்படும்.

do-while மடக்கு


do-while மடக்கு வெளியேறல் சோதிப்பு மடக்காகும். do while மடக்கினில் மடக்கின் உடற்பகுதி செயல்படுத்தப்பட்ட பின் மடக்கின் இறுதியில் நிபந்தனை சரிபார்க்கப்படும். ஆகையால், நிபந்தனை தவறு என மதிப்பிடப்படும் போதும் மடக்கின் உடற்பகுதி ஒரு முறையேனும் நிறைவேற்றப்படும். 

do-while மடக்கின் கட்டளை அமைப்பு:

do

{

      மடக்கின் உடற்பகுதி; 

} while (நிபந்தனை சோதிப்பு கோவை);

do-while மடக்கின் பாய்வுக் கட்டுப்பாடு மற்றும் பாய்வு படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



எடுத்துக்காட்டு 10.12 do-while() மடக்கினைப் பயன்படுத்தி 10 முதல் 1 வரை உள்ள எண்களை வெளியிட நிரல் எழுதுக.

#include <iostream>

using namespace std;

int main ()

{

int n = 10;

do

{

      cout<<n<<", ";

      n--;

}while (n>0) ;

}

வெளியீடு 

10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1


மேற்கண்ட நிரலில், n என்ற முழு எண் மாறியின் தொடக்க மதிப்பு 10 என இருத்தப்படுகிறது. அடுத்து, n ன் மதிப்பு 10 என வெளியிடப்பட்டு, பின் 1 குறைக்கப்படும். இப்போது 9 > 0 என்ற நிபந்தனை சரிபார்க்கப்பட்டு ,9 என்று வெளியிடப்படும். பின் n என்பது 8 ஆக குறைக்கப்படும். nன் மதிப்பு 0 என ஆகும் வரை இந்த செயல்பாடு தொடரும். நிபந்தனை n > 0 என்பது தவறு என ஆகும் போது, do-while மடக்கு முடிவு பெறும்.


11th Computer Science : Chapter 10 : Flow of Control : C++ do-while loop in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு : C++ do-while மடக்கு - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு