பாய்வுக் கட்டுப்பாடு | C++ - C++ பன்முறைச் செயல் | 11th Computer Science : Chapter 10 : Flow of Control

   Posted On :  25.09.2022 03:34 am

11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு

C++ பன்முறைச் செயல்

பன்முறைச் செயல் அல்லது மடக்கு என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கூற்றுகள், நிபந்தனை நிறைவேறும் வரை திரும்பத் திரும்ப இயக்கப்படுவதை குறிக்கும்

பன்முறைச் செயல் (அல்லது) மடக்கு

 

பன்முறைச் செயல் அல்லது மடக்கு என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கூற்றுகள், நிபந்தனை நிறைவேறும் வரை திரும்பத் திரும்ப இயக்கப்படுவதை குறிக்கும். இந்த கூற்றுகளை பாய்வுக் கட்டுப்பாட்டு கூற்றுகள் எனவும் கூறலாம். இது நிரலின் நீளத்தை குறைக்கவும், நேரத்தை குறைக்கவும், நிரல் இயக்கவும், குறைவான நினைவக இடத்தை எடுத்துக் கொள்ளவும் பயன்படுகிறது. C++ மூன்று வகையான மடக்கு கூற்றுகளை ஏற்கிறது. 

• for கூற்று 

• while கூற்று 

• do-while கூற்று 

அனைத்து மடக்கு கூற்றுகளும் குறிப்பிட்ட நிபந்தனை சரி என இருக்கும் வரையில் கட்டளைத் தொகுதியை மீண்டும் மீண்டும் நிறைவேற்றுகிறது. குறிப்பிட்ட நிபந்தனை மடக்கு கட்டுப்பாடு எனப்படுகின்றது. மூன்று மடக்கு கூற்றுகளுக்கும், சுழியம் அல்லாத எந்தவோர் எண்ணும் சரி என எடுத்துக் கொள்ளப்படும் மற்றும் சுழியம் என்பது தவறு என எடுத்துக்கொள்ளலாம். 


மடக்கின் பகுதிகள் 


ஒவ்வொரு மடக்கும் பல்வேறு பயன் பாடுகளுக்கான நான்கு கூறுகளை கொண்டுள்ளது. 

• தொடக்க மதிப்பிருத்தும் கோவை 

• சோதிப்பு நிபந்தனை கோவை 

• புதுப்பித்தல் / மிகுத்தல் கோவை 

• மடக்கின் உடற்பகுதி 

தொடக்க மதிப்பிருத்தும் கோவைகள் : நிரலின் கட்டுப்பாடு மடக்கினுள் நுழையும் முன் கட்டுப்பாட்டு மாறிகள் தொடக்க மதிப்பிருத்தல் வேண்டும். ஒரு கட்டுப்பாட்டு மாறிக்கு தொடக்க மதிப்பிருத்தும் செயல்பாடு தொடக்க மதிப்பிருத்தும் கோவையின் கீழ் இடம் பெறும். கட்டுப்பாட்டு மாறியில் தொடக்க மதிப்பிருத்தல் மடக்கு செயல்படும் முன்பாக, ஒரே ஒரு முறை தான் செயல்படுத்தப்படும்.

பரிசோதிப்பு நிபந்தனை கோவை: பரிசோதிப்பு நிபந்தனை கோவை என்பது ஒரு மடக்கின் உள்ளே அமைந்துள்ள உடற்பகுதியிலிருக்கும் கட்டளைத் தொகுதி நிறைவேற்றப்பட வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்கும். 

கொடுக்கப்பட்ட நிபந்தனை சரி (அதாவது 1) எனில், மடக்கின் உடற்பகுதி செயல்படுத்தப்படும் இல்லையேல், மடக்கை விட்டு வெளியேறும். 

பரிசோதிப்பு நிபந்தனை கோவையின் சோதிப்பு நிலையை அடிப்படையாகக் கொண்டு, மடக்குகளை நுழைவு சோதிப்பு மடக்கு மற்றும் வெளியேறல் சோதிப்பு மடக்கு என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. 

நுழைவு சோதிப்பு மடக்கில், நிபந்தனை கோவை மடக்கினுள் நுழையும் முன் சோதிக்கப்படுகிறது. அவ்வாறின்றி வெளியேறல் சோதிப்பு மடக்கில் நிபந்தனைக் கோவை மடக்கினை விட்டு வெளியேறும் முன்பாக சோதிக்கப்படுகிறது. 

புதுபித்தல் / மிகுத்தல் கோவை: இது மடக்கு கட்டுப்பாட்டு மாறியின் மதிப்பை மாற்றம் செய்வதற்கு பயன்படுகிறது. இந்த கூற்று, மடக்கின் உடற்பகுதி செயல்பட்டு முடிந்த பின், மடக்கின் இறுதியில் செயல்படுத்தப்படுகிறது. 

மடக்கின் உடற்பகுதி: மடக்கின் உடற்பகுதி என்பது மீண்டும் மீண்டும் நிறைவேற்றப்பட வேண்டிய கூற்று அல்லது கட்டளைத் தொகுதியை குறிக்கும். நுழைவு சோதிப்பு மடக்கில், முதலில் நிபந்தனை கோவை செயல்படுத்தப்பட்டு, சுழியம் அல்லாத எண்ணாக இருப்பின், மடக்கின் உடற்பகுதி செயல்படுத்தப்படும் இல்லையெனில் மடக்கு முடிவு பெறும். வெளியேறல் சோதிப்பு மடக்கில், முதலில் மடக்கின் உடற்பகுதி மடக்கின் உடற்பகுதி செயல்படுத்தப்பட்டு, பின் நிபந்தனைக் கோவை சரிபார்க்கப்படுகிறது. சோதிப்புக் கோவை சரி எனில், மடக்கின் உடற்பகுதி திரும்ப நிறைவேற்றப்படும் இல்லையெனில் மடக்கு முடிவுப் பெறும். 

for மடக்கு 


for மடக்கு ஓர் நுழைவு சோதிப்பு மடக்கு மற்றும் எளிய மடக்காகும். இது கூற்றுகளை மீண்டும் மீண்டும் இயக்கும். for மடக்கு மூன்று கூற்றுகளை கொண்டிருக்கும் அவை 1. தொடக்க மதிப்பிருத்தல் (Initialization), 2. சோதிப்பு நிபந்தனை அல்லது நிபந்தனை கோவை (Test - expression) மற்றும் 3. மிகுப்பு கோவைகள் (Update expressions). இவை அரைப்புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். 


தொடரியல் :

for (தொடக்க மதிப்பிருத்தல்; சோதிப்பு நிபந்தனை; மிகுப்பு கோவைகள்)

{

 நிரல் கூற்று 1;

 நிரல் கூற்று 2; 

  .............

}

நிரல் கூற்று -x;

தொடக்க மதிப்பிருத்தல் பகுதி, கட்டுப்பாட்டு மாறியை அறிவிக்க அல்லது மாறியின் மதிப்பிருத்த பயன்படுகிறது. இந்த பகுதி ஒரு முறை மட்டும் இயக்கப்படும். பின்னர் நிரல் பாய்வு, சோதிப்பு நிபந்தனை கோவைக்கு செல்லும். கட்டுப்பாட்டு கோவையின் நிபந்தனை சோதிக்கப்பட்டு, அதன் மதிப்பு தவறு என்று வந்தால் நிரல் கூற்று-x இயங்கும். மதிப்பு சரியென்று வந்தால் for மடக்கின் உடற்பகுதி இயக்கப்பட்டு, பின்னர் நிரல் பாய்வு மிகுப்பு கோவைக்கு அனுப்பி வைக்கப்படும். மிகுப்பு கோவை செயல்பட்ட பின்னர், மீண்டும் சோதிப்பு நிபந்தனை கோவைக்கு அனுப்பி வைக்கப்படும். 

for மடக்கு இயக்கும் முறை மற்றும் பாய்வு படம் 10.6 ல் விளக்கப்பட்டுள்ளது.


மேலே கொடுக்கப்பட்டுள்ள நிரலில், முதலில் கட்டுப்பாட்டு மாறி i க்கு தொடக்க மதிப்பிருத்தப்படும், பின்னர் i மாறியின் தொடக்க மதிப்பு 10 என்ற எண்ணுடன் ஒப்பிடப்படும். ஒப்பீட்டின் முடிவு சரி என இருந்தால், நிரல் கட்டுப்பாட்டு பாய்வு, இயக்கப்பட வேண்டிய நிரல் கூற்று cout<< "value of i : " <<i<<endl;


எடுத்துக்காட்டு 10.7: சுழியம் (0) முதல் ஒன்பது (9) வரை உள்ள எண்களை வெளியிட for மடக்கை பயன்படுத்தி நிரல் ஒன்று எழுதுக. 

#include <iostream>

using namespace std;

int main ()

{

int i;

for(i = 0; i< 10; i ++ )

      cout<< "value of i : " <<i<<endl;

return 0;

}

வெளியீடு

value of i : 0

value of i : 1

value of i : 2

value of i : 3

value of i : 4

value of i : 5

value of i : 6

value of i : 7

value of i : 8

value of i : 9


மேலே கொடுக்கப்பட்டுள்ள நிரலில் for மடக்கு இயங்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


மேலே கொடுக்கப்பட்டுள்ள நிரலில், முதலில் கட்டுப்பாட்டு மாறி i க்கு தொடக்க மதிப்பிருத்தப்படும், பின்னர் மாறியின் தொடக்க மதிப்பு 10 என்ற எண்ணுடன் ஒப்பிடப்படும். ஒப்பீட்டின் முடிவு சரி என இருந்தால், நிரல் கட்டுப்பாட்டு பாய்வு, இயக்கப்பட வேண்டிய நிரல் கூற்று cout<< "value of i : " <<i<<endl; என்பதை இயக்கும். பின்னர், நிரல் கட்டுப்பாட்டு பாய்வு for மடக்கின் மிகுப்பு கோவைக்கு செல்லும். அங்கு ன் மதிப்பு மிகுக்கப்படும். இதைப்போல 0 முதல் 9 வரை மடக்கு இயக்கப்பட்டு எண்கள் வெளியிடப்படும். நிபந்தனை சோதிப்பு தவறாகும்போது, கட்டுப்பாட்டு பாய்வு மடக்கை விட்டு வெளியேறும்.


எடுத்துக்காட்டு 10.8 for மடக்கை கொண்டு 1 முதல் 10 வரை உள்ள எண்களின் தொடர் கூட்டலை வெளியிடும் நிரல் எழுதுக. 

#include <iostream>

using namespace std;

int main ()

{

int i,sum=0;

for(i=1; i<=10;i++)

{

      sum=sum+i;

}

cout<<"The sum of 1 to 10 is "<<sum;

return 0;

}

வெளியீடு

The sum of 1 to 10 is 55

 

for மடக்கின் மாறுபட்ட வடிவங்கள்

for கூற்று C++ மொழியில் ஓர் முக்கிய மடக்கு கூற்றாகும். ஏனெனில், இதனை வேறுபட்ட பல வடிவங்களில் பயன்படுத்தலாம். இவ்வகை வடிவங்கள் நெகிழ்வு மற்றும் பொருந்தும் தன்மையை மடக்கிற்கு வழங்குகிறது. for மடக்கின் பல்வேறு வடிவங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 


ஒன்றுக்கும் மேற்பட்ட தொடக்க மதிப்பு மற்றும் மிகுப்புகள்:

for மடக்கில் தொடக்க மதிப்பிருத்த மற்றும் மிகுப்பு கோவையை அறிவிக்க ஒன்றுக்கும் மேற்பட்ட கூற்றுகளை பயன்படுத்தலாம். தொடக்க மதிப்பிருத்தல் மற்றும் மிகுப்பு கோவைகளை ஒன்றுக்கும் மேற்பட்ட கூற்றுகளைக் கொண்டு நிறைவேற்றும் போது அவை காற்புள்ளியில் (,) பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். எடுத்துக்காட்டு :


வெளியீடு

The value of i is 0 The value of j is 10

The value of i is 1 The value of j is 9

The value of i is 2 The value of j is 8

The value of i is 3 The value of j is 7

The value of i is 4 The value of j is 6

மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டில் தொடக்க மதிப்பிருத்தலின், i மற்றும் j என்ற இரு வேறு மாறிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று, i++ மற்றும் j++ என்ற இரண்டு மிகுப்புக் கோவைகளை கொண்டுள்ளது. இவ்விரு மாறிகளும் காற்புள்ளியால் பிரிக்கப்பட்டு வரிசை முறையில் வைக்கப்பட்டுள்ளது. அதாவது தொடக்க மதிப்பு இருக்கும் போது i ன் மதிப்பு 0 எனவும் j ன் மதிப்பு 10 எனவும் கருதப்படுகிறது. மிகுப்பு கோவை i++ முதலில் மிகுக்கப்படும், பின்னர் j-- மிகுக்கப்படும். 


பின்னொட்டு மற்றும் முன்னொட்டு செயற்குறிகள்: 

பொதுவாக மிகுப்பு கோவை, மிகுப்பு (++) மற்றும் குறைப்பு (--) செயற்குறியை கொண்டிருக்கும். மிகுப்பு கோவை தனியாக பயன்படுத்தப்படும் போது முன்னொட்டு மிகுப்பு அல்லது குறைப்பு செயற்குறியை விட பின்னொட்டை அதிகம் பொருத்தமானதாக அமையும். முன்னொட்டு செயற்குறி, பின்னொட்டு செயற்குறியை விட விரைவாக இயக்கப்படுவது இம்முறையை விரும்பக் காரணம் ஆகும். 


விருப்ப கோவைகள் (Optional expressions)

பொதுவாக, for மடக்கில் மூன்று பகுதிகள் உள்ளது, அவை தொடக்க மதிப்பு, நிபந்தனை கோவைகள் மற்றும் மிகுப்பு கோவை. இந்த மூன்று கோவைகளும், ஓர் மடக்கில் விருப்பகோவைகளாக பயன்படுத்தப்படலாம். 

எடுத்துக்காட்டு 10.9 1 முதல் 10 வரையான எண்களின் கூட்டுத்தொகையை காணும் C++ நிரல்

#include <iostream>

using namespace std;

int main ()

{

int i, sum=0, n;

cout<<"\n Enter The value of n";

cin>>n;

i =1;

for ( ; i<=10;i++)

      {

      sum += i;

     }

cout<<"\n The sum of 1 to " <<n<<"is "<<sum;

return 0;

}

வெளியீடு

Enter the value of n 5

The sum of 1 to 5 is 15


மேலே கொடுக்கப்பட்டுள்ள நிரலில், தொடக்க மதிப்பிருத்தம் மற்றும் மிகுப்பு கோவை தரப்படவில்லை. ஆனால், இரண்டு பகுதிகளையும் குறிக்க அரைப்புள்ளி மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 


ஒன்று அல்லது இரண்டு கோவைகள் கொடுக்கப்படாதபோது, நிரல் பாய்வுக் கட்டுப்பாடு சோதிப்பு நிபந்தனைக்கு அனுப்பி வைக்கப்படும். 


சூழல் - 3 

for மடக்கில் நிபந்தனை சோதிப்பு கோவை கொடுக்கப்படாத போது மடக்கு முடிவற்றதாக இயக்கப்படும்.



வெற்று மடக்கு (Empty loop)

ஒரு மடக்கில் எந்த கூற்றும் இடம்பெறவில்லை என்றால் அது வெற்று மடக்கு எனப்படும்: பின்வரும் மடக்கு ஒரு வெற்று மடக்கு ஆகும்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள மடக்கு வெற்றுக் கூற்றைகொண்டுள்ளதால், இது ஒரு காலி மடக்கு எனப்படும். 


மேலே கொடுக்கப்பட்டுள்ள நிரலில் for மடக்கின் இறுதியில் அரைப்புள்ளி இடம்பெற்றுள்ளதால், நெளிவு அடைப்புக்குறியில் இடம்பெற்றுள்ள மடக்கின் உடற்பகுதி இயக்கப்படாது. 


for மடக்கில் மாறி அறிவிப்பு (Declaration of variable in a for loop)

C++ மொழியில், மாறிகள் for மடக்குக்கு உள்ளும் அறிவிக்கப்படலாம். எடுத்துக்காட்டு,


குறிப்பு

main() உள்ளே எதாவது ஒரு தொகுதிக்குள் அறிவிக்கப்படும் மாறிகள், main() தொகுதிக்குள் எங்கு வேண்டுமென்றாலும் அணுகலாம். 


while மடக்கு


while மடக்கும் ஒரு கட்டுப்பாடு பாய்வு கூற்றாகம். இது ஒரு மடக்கினை கொடுக்கப்பட்ட நிபந்தனை சரியாக இருக்கும் வரை, மீண்டும் மீண்டும் இயக்கும். while மடக்கு ஒரு நுழைவு சோதனை மடக்காகும். இதில் சோதிப்பு கோவை முதலில் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே மடக்கினுள் உள்ளே நுழையும்.

while மடக்கின் தொடரியல் : 

while ( நிபந்தனை சோதிப்புக் கோவை)

{

  மடக்கின் உடற்பகுதி

}

கூற்று -x;

while மடக்கில், நிபந்தனை சோதிப்பு கோவை மதிப்பீடு செய்யப்பட்டு அதன் முடிவு சரி என வந்தால், மடக்கின் உடற்பகுதி இயக்கப்பட்டு மீண்டும் while மடக்கிற்கு கட்டுப்பாடு அனுப்பி வைக்கப்படும்.


நிபந்தனை சோதிப்பு கோவை முடிவு தவறு என வரும்போது, பாய்வுக் கட்டுப்பாடு கூற்று-X அனுப்பி வைக்கப்படும். 


எடுத்துக்காட்டு 10.10 while மடக்கை பயன்படுத்தி 1 முதல் 10 வரை உள்ள எண்களின் தொடர் கூட்டலை வெளியிடும் நிரல் எழுதுக. 

#include <iostream>

using namespace std;

int main ()

{

int i=1,sum=0;

while(i<=10)

{

      sum=sum+i;

      i++;

}

cout<<"The sum of 1 to 10 is "<<sum;

return 0;

}

வெளியீடு

The sum of 1 to 10 is 55

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள நிரலில், முழு எண் மாறி யின் மதிப்பு 1 என்றும் sum என்ற மாறியின் மதிப்பு 0 என்றும்மதிப்பிருத்தப்பட்டுள்ளது. while மடக்கு i < 10 என்ற நிபந்தனையை சோதித்து, அதன் முடிவு சரி எனில் 1 என்ற மாறியின் மதிப்பு sum மாறியுடன் கூட்டப்படும், பின்னர் யின் மதிப்பு 1 மிகுக்கப்படும். மீண்டும் நிபந்தனை i<10 சோதிக்கப்படும். இப்பொழுது 2 < 10, சரி என்பதால் sum என்ற மாறியியுடன் 2 கூட்டப்படும். இது போன்று யின் மதிப்பு 11 ஆகும் வரை நடைபெறும். இப்பொழுது 11 < 10 என்ற சோதனை தவறு என வருவதால், while மடக்கை விட்டு வெளியே செல்லும். மடக்கை விட்டு வெளியே வந்ததும், sum மாறியின் மதிப்பு வெளியிடப்படும்.


எடுத்துக்காட்டு 10.11 while மடக்கை பயன்படுத்தி 5 எண்களை உள்ளீடாகப் பெற்று அவற்றின் கூட்டுத் தொகை மற்றும் சராசரியை காணும் நிரல் எழுதுக. 

#include <iostream>

using namespace std;

int main ()

{

int i=1,num,avg,sum=0;

while(i<=5)

{

      cout<<"Enter the number : ";

      cin>>num;

      sum=sum+num;

      i++;

}

avg=sum/5;

cout<<"The sum is "<<sum<<endl;

cout<<"The average is "<<avg;

return 0;

}

வெளியீடு 

Enter the number : 1

Enter the number : 2

Enter the number : 3

Enter the number : 4

Enter the number : 5

The sum is 15

The average is 3

மேலே கொடுக்கப்பட்டுள்ள நிரலில், num, avg என்ற மாறி அறிவிக்கப்பட்டு i-ன் மதிப்பு 1 மற்றும் sum - ன் மதிப்பு 0 என தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. while மடக்கு, i <= 5 என்ற நிபந்தனையை சோதித்து, சரி என முடிவு பெறப்பட்டால், பயனரிடம் இருந்து ஒரு எண் உள்ளீடாகப் பெறப்பட்டு, Sum உடன் கூட்டப்பட்டு பின் i மதிப்பு மிகுக்கப்படும். மீணடும் i <= 5 என்ற நிபந்தனை சோதிக்கப்படுகிறது, மேலும் 2 <=5 என்ற சோதிப்பின் போது இரண்டாவது எண் பயனரிடம் பெறப்பட்டு sum உடன் கூட்டப்படும். இது போன்று i-யின் மதிப்பு 6 வரும் வரை இயக்கப்படும். இந்நிலையில் while மடக்கு மடக்கை விட்டு வெளியேறுவதும் avg கணக்கிடப்பட்டு avg மற்றும் sum வெளியிடப்படும்.

 

while மடக்கின் மாறுபட்ட வடிவங்கள் 

while மடக்கு பல்வேறு வடிவங்களை பெற்றிருக்கலாம். அது வெறுமை மடக்காகவோ அல்லது முடிவற்ற மடக்காகவோ இருக்கலாம். ஒரு வெறுமை while மடக்கின் உடற்பகுதியில் null கூற்றைத் தவிர வேறு எந்த கூற்றும் இடம் பெற்றிருக்காது. Null கூற்று என்பது அரைப்புள்ளி (;) ஆகும். எடுத்துக்காட்டு


மேலே கொடுக்கப்பட்டுள்ள குறிமுறையில், மடக்கு ஒரு தாமத மடக்காக (delay loop) கொடுக்கப்பட்டுள்ளது. நேர தாமத மடக்கு ஒரு நிரலை சில நொடிகள் இடைநிறுத்தப் பயன்படுகிறது. மடக்கின் உடற்பகுதியில் எந்த ஒரு மிகுப்பு கூற்றும் கொடுக்கப்படாத போது while மடக்கு முடிவற்ற மடக்காக செயல்படும் 

எடுத்துக்காட்டு 



do-while மடக்கு

do-while மடக்கு வெளியேறல் சோதிப்பு மடக்காகும். do while மடக்கினில் மடக்கின் உடற்பகுதி செயல்படுத்தப்பட்ட பின் மடக்கின் இறுதியில் நிபந்தனை சரிபார்க்கப்படும். ஆகையால், நிபந்தனை தவறு என மதிப்பிடப்படும் போதும் மடக்கின் உடற்பகுதி ஒரு முறையேனும் நிறைவேற்றப்படும். 

do-while மடக்கின் கட்டளை அமைப்பு:

do

{

      மடக்கின் உடற்பகுதி; 

} while (நிபந்தனை சோதிப்பு கோவை);

do-while மடக்கின் பாய்வுக் கட்டுப்பாடு மற்றும் பாய்வு படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



எடுத்துக்காட்டு 10.12 do-while() மடக்கினைப் பயன்படுத்தி 10 முதல் 1 வரை உள்ள எண்களை வெளியிட நிரல் எழுதுக.

#include <iostream>

using namespace std;

int main ()

{

int n = 10;

do

{

      cout<<n<<", ";

      n--;

}while (n>0) ;

}

வெளியீடு 

10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1


மேற்கண்ட நிரலில், n என்ற முழு எண் மாறியின் தொடக்க மதிப்பு 10 என இருத்தப்படுகிறது. அடுத்து, n ன் மதிப்பு 10 என வெளியிடப்பட்டு, பின் 1 குறைக்கப்படும். இப்போது 9 > 0 என்ற நிபந்தனை சரிபார்க்கப்பட்டு ,9 என்று வெளியிடப்படும். பின் n என்பது 8 ஆக குறைக்கப்படும். nன் மதிப்பு 0 என ஆகும் வரை இந்த செயல்பாடு தொடரும். நிபந்தனை n > 0 என்பது தவறு என ஆகும் போது, do-while மடக்கு முடிவு பெறும். 


பின்னலான மடக்குகள் (Nesting of loops) 


ஒரு மடக்கினுள் இன்னொரு மடக்கு இடம்பெறுமெனில் அது பின்னலான மடக்கு எனப்படும். 

தொடரியல் கீழே தரப்பட்டுள்ளது :‘ 

for (தொடக்க மதிப்பு; நிபந்தனைக் கோவை; மிகுப்பு கோவை) 

 for (தொடக்க மதிப்புதொடக்க மதிப்பு;நிபந்தனைக் கோவை; மிகுப்பு கோவை) 

{

கூற்று / கூற்றுகள்; 

}

கூற்று கூற்றுகள்;

}



எடுத்துக்காட்டு 10.13 பின்னலான for மடக்கினை கொண்டு அணிக்கோவையில் பெருக்கல் வாய்ப்பாட்டினை வெளியிட ஒரு நிரலை எழுது.

#include<iostream>

using namespace std;

int main(void)

{

      cout<< "A multiplication table:" <<endl <<" 1\t2\t3\t4\t5\t6\t7\t8\t9" <<endl<< "" <<endl;

      for(int c = 1; c < 10; c++)

      {

      cout<< c << "| ";

      for(int i = 1; i< 10; i++)

      {

      cout<<i * c << '\t';

      }

      cout<<endl;

      }

return 0;

}

வெளியீடு

A multiplication table:    

1    2   3      4        5        6        7        8        9

1| 1     2      3        4        5        6        7        8        9

2| 2     4      6        8        10      12      14      16      18

3| 3     6      9        12      15      18      21      24      27

4| 4     8      12      16      20      24      28      32      36

5| 5     10    15      20      25      30      35      40      45

6| 6     12    18      24      30      36      42      48      54

7| 7     14    21      28      35      42      49      56      63

8| 8     16    24      32      40      48      56      64      72

9| 9     18    27      36      45      54      63      72      81


Tags : Flow of Control | C++ பாய்வுக் கட்டுப்பாடு | C++.
11th Computer Science : Chapter 10 : Flow of Control : C++ Iteration statements Flow of Control | C++ in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு : C++ பன்முறைச் செயல் - பாய்வுக் கட்டுப்பாடு | C++ : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு