பாய்வுக் கட்டுப்பாடு | C++ - C++ if -else-if அடுக்கு | 11th Computer Science : Chapter 10 : Flow of Control

   Posted On :  25.09.2022 03:09 am

11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு

C++ if -else-if அடுக்கு

if-else அடுக்கு என்பது பல வழி தீர்மானிப்பு கூற்றாகும்.

if -else-if அடுக்கு


if-else அடுக்கு என்பது பல வழி தீர்மானிப்பு கூற்றாகும். இந்த வகையான கூற்றில், if என்னும் சிறப்புச் சொல்லைத் தொடர்ந்து ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட else if கூற்றுகள் இடம் பெற்றிருக்கும். இறுதியாக else கூற்றுடன் முடிவு பெறும். 

if-else அடுக்கின் தொடரியல் :

if (கோவை-1)

{

      கூற்று -1

}

else

      if( கோவை - 2)

      {

           கூற்று -2

      }

      else

           if (கோவை - 3)

           {

           கூற்று -3

 

           }

           else

           {

                   கூற்று -4

           }

கொடுக்கப்பட்டுள்ள கோவை (Expressions) சரி எனில், அந்த தொகுதியுடன் தொடர்புடைய கூற்று நிறைவேற்றப்படும், அந்த அடுக்கில் இடம் பெற்றிருக்கும் மற்ற கூற்றுகள் தவிர்க்கப்பட்டு விடும். எல்லா கோவையும் தவறு எனில் இறுதியான else கூற்று நிறைவேற்றப்படும்



எடுத்துக்காட்டு 10.4 if-else அடுக்கினை பயன்படுத்தி உன்னுடைய தரநிலைக் கண்டறியும் C++ நிரல் எழுதுக. 

#include <iostream>

using namespace std;

int main ()

{

int marks;

cout<<" Enter the Marks :";

cin>>marks;

if( marks >= 60 )

      cout<< "Your grade is 1st class !!" <<endl;

           else if( marks >= 50 && marks < 60)

                   cout<< "your grade is 2nd class !!" <<endl;

                             else if( marks >= 40 && marks < 50)

                                      cout<< "your grade is 3rd class !!" <<endl;

else

      cout<< "You are fail !!" <<endl;

return 0;

}

வெளியீடு

Enter the Marks :60

Your grade is 1st class !!

மதிப்பெண்கள் 60ஐ விட அதிகமானதாகவோ அல்லது சமமானதாகவோ இருப்பின் "Your grade is 1st class !!" என்ற செய்தி வெளியிடப்படும். அடுக்கில் இடம் பெற்ற மற்றவை தவிர்க்கப்பட்டு விடும். மதிப்பெண்கள் 50க்கும், 59க்கும் இடையே இருக்குமானால் "Your grade is 2nd class !!" என்று வெளியிடப்படும், மற்ற அடுக்கு தவிர்க்கப்பட்டு விடும். மதிப்பெண்கள் 40 க்கும் 49க்கும் இடையில் இருந்தால் செய்தி "Your grade is 3rd class !!" என்று வெளியிடப்படும் இல்லையெனில் "You are fail !!" என்ற செய்தி காண்பிக்கப்படும்.

Tags : Flow of Control | C++ பாய்வுக் கட்டுப்பாடு | C++.
11th Computer Science : Chapter 10 : Flow of Control : C++ if -else-if ladder Flow of Control | C++ in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு : C++ if -else-if அடுக்கு - பாய்வுக் கட்டுப்பாடு | C++ : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு