பாய்வுக் கட்டுப்பாடு | C++ - C++ if கூற்று | 11th Computer Science : Chapter 10 : Flow of Control
if கூற்று
if கூற்று என்பது ஒரு தீர்மானிப்புக் கூற்றாகும். if கூற்று நிபந்தனையை சோதித்து, நிபந்தனை சரி எனில் சரித்தொகுதி கூற்று அல்லது கட்டளைத்தொகுதி இயக்கப்படும். இல்லையெனில் சரித் தொகுதி தவிர்க்கப்படும். if கூற்றின் தொடரியல்.
if (நிபந்தனை கோவை)
மெய் தொகுதி;
x-கூற்று
மேற்கண்ட கட்டளை அமைப்பில், if என்ற சிறப்புச்சொல் கோவை அல்லது நிபந்தனையை அடைப்புக்குறிக்குள் கொண்டிருக்க வேண்டும். கொடுக்கப்பட்ட கோவையின் மதிப்பு சரி எனில் (0 சுழியம் அல்லாத) சரித்தொகுதி இயக்கப்படும். அதைத் தொடர்ந்து X-கூற்று எடுத்துச் செல்லும். ஒரு சரித் தொகுதி ஒற்றை கூற்று, கலவை கூற்று அல்லது வெற்று கூற்றினை கொண்டிருக்கலாம்.
எடுத்துக்காட்டு 10.1 if கூற்றைப் பயன்படுத்தி ஒரு நபர் வாக்களிக்க தகுதியானவரா என சோதிக்க C++ நிரல் ஒன்று எழுதுக.
#include <iostream>
using namespace std;
int main()
{
int age;
cout<< "\n Enter your age: ";
cin>> age; if(age>=18)
cout<< "\n You are eligible for voting ....";
cout<< "This statement is always executed.";
return 0;
}
if கூற்று, அதற்கு கீழே கொடுக்கப்படும் ஒரே ஒரு நிரல் கூற்றை மட்டுமே இயக்கும். எனவே, நெளிவு அடைப்புக் குறியீடு பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
வெளியீடு
Enter your age: 23
You are eligible for voting….
This statement is always executed.