பாய்வுக் கட்டுப்பாடு | C++ - C++ if else க்கு மாற்றான நிபந்தனை செயற்குறி | 11th Computer Science : Chapter 10 : Flow of Control
if else க்கு மாற்றான நிபந்தனை செயற்குறி
நிபந்தனை செயற்குறி அல்லது மும்ம செயற்குறி என்பது if else கூற்றின் மாற்று வழியாகும். நிபந்தனை செயற்குறி ?: என்ற இரண்டு குறியீடுகளை கொண்டுள்ளது. இது மூன்று செயலுருப்புகளை ஏற்கும். நிபந்தனை செயற்குறியின் பாய்வுக்கட்டுப்பாடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது,
நிபந்தனை செயற்குறியின் தொடரியல்
கோவை 1? கோவை 2 : கோவை 3 ;
மேற்கண்ட தொடரியலில், கோவை 1 என்பது மதிப்பிட வேண்டிய நிபந்தனையை குறிக்கும். நிபந்தனை சரி எனில், கட்டுப்பாடு கோவை 2க்குச் செல்லும். இல்லையெனில் கட்டுப்பாடு கோவை 3க்கு எடுத்துச்செல்லப்படும்.
எடுத்துக்காட்டு 10.5 கொடுக்கப்பட்ட இரண்டு எண்களில் எது பெரியது என கண்டறிய நிபந்தனை செயற்குறியை பயன்படுத்தி ஒரு நிரல் எழுதுக.
#include <iostream>
using namespace std;
int main()
{
int a, b, largest;
cout << "\n Enter any two numbers: ";
cin >> a >> b;
largest = (a>b)? a : b;
cout << "\n Largest number : " << largest;
return 0;
}
வெளியீடு:
Enter any two numbers: 12 98
Largest number : 98