தாவுதல் கூற்றுகள் (Jump statements)
தாவுதல் கூற்று நிரலின் ஓட்டத்தை குறுக்கிட உதவுகிறது. தாவுதல் கூற்றின் வகைகள்
• goto கூற்று
• break கூற்று
• continue கூற்று
goto கூற்று
goto கூற்று நிபந்தனையில்லா கட்டுப்பாட்டு கூற்றாகும். இது நிரலில் ஒரு கூற்றிலிருந்து மற்றொரு கூற்றிற்கு எந்த வித நிபந்தனையும் இன்றி தாவச் செய்யும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டளை அமைப்பில், முகவரி என்பது குறிப்பெயராகும்- goto label; என்ற கூற்று இயக்கப்படும் போது கட்டுப்பாடு label: என்ற கூற்றினுக்கு தாவும் பின் அதற்கு கீழ் வரும் இடம் பெற்றுள்ள கூற்றுகள் இயக்கப்படும்.
எடுத்துக்காட்டு : 10.14 goto கூற்றை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட எண்களின் முதல் ஐந்து ஒற்றைப்படை எண்களைக் காண்பிக்கும் நிரல்
#include <iostream>
using namespace std;
int main()
{
int n=1;
jump:
{
if(n<10)
{ // Control of the program move to jump: goto jump;
cout<<n<<'\t';
n+=2;
goto jump;
}
else
return 0;
}
}
வெளியீடு
1 2 5 7 9
மேலேயுள்ள நிரலில் முதல் ஐந்து தாவுதல் ஒற்றைப்படை எண்கள் காண்பிக்கப்படுகின்றன. n என்பது 10 க்கும் குறைவானதாக இருந்தால், அறிக்கையை jump கூற்றிற்கு மாற்றுகிறது. n 10 ஐ விட அதிகமாக இருந்தால் கட்டுப்பாடு வளையிலிருந்து வெளியேறும்.
break கூற்று
break கூற்று ஒரு தவுதல் கூற்று. இது மடக்கின் இயக்கத்தை நிறுத்தி கட்டுபாட்டை மடக்கின் உடற்பகுதிக்கு வெளியே எடுத்துச் சென்று மற்ற கூற்றுகளை இயக்குகிறது
கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் ஓர் மடக்கில் break கூற்று இயங்கும் முறையை காட்டுகிறது.
எடுத்துக்காட்டு 10.15 break கூற்றை பயன்படுத்தி எண்ணிக்கையை காணும் நிரல்
#include <iostream>
Using namespace std;
int main ()
{
int count = 0;
do
{
cout<< "Count : " << count <<endl;
count++;
if( count > 5)
{
break;
}
}while( count < 20 );
return 0;
}
வெளியீடு
Count : 0
Count : 1
Count : 2
Count : 3
Count : 4
Count : 5
மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டில், while மடக்கு 20 முறை இயக்கப்படும் ஆனால் countன் மதிப்பு 5 ஆகிய பின் break கூற்று மடக்கை முடித்து வைக்கும்.
continue கூற்று
Continue கூற்று break கூற்றைப்போல் செயல்படுகிறது. ஆனால், மடக்கை முடித்து வைப்பதற்கு பதிலாக, மடக்கை அடுத்து சுழற்சிக்கு இட்டுச்செல்லும். ஓர் மடக்கினுள் Continue கூற்று இயக்கப்படும் பொழுது, continue கூற்றை தொடர்ந்து வரும் கூற்றுகள் தவிர்க்கப்பட்டு, மடக்கின் அடுத்த சுழற்சியை தொடங்க செய்யும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் continue கூற்று இயங்கும் முறையை விளக்குகிறது.
எடுத்துக்காட்டு 10.16 continue கூற்றை பயன்படுத்தி 6 - ஐதவிர ஒன்று முதல் பத்து வரையான எண்களை அச்சிடும் C++ நிரல் எழுதுக.
#include <iostream>
using namespace std;
int main()
{
for (int i = 1; i<= 10; i++) {
if (i == 6)
continue;
else
cout<<i<< " ";
}
return 0;
}
வெளியீடு
1 2 3 4 5 7 8 9 10
மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டில் for மடக்கு 10 முறை இயக்கப்படும், ஆனால் i மாறி 6 ஆகும் போது continue கூற்றால் கட்டுப்பாடு for மடக்கிற்கு அனுப்பி வைக்கப்படும்.
break மற்றும் continue ஒப்பீடு