Posted On :  25.09.2022 03:41 am

11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு

C++ while மடக்கு

while மடக்கும் ஒரு கட்டுப்பாடு பாய்வு கூற்றாகம். இது ஒரு மடக்கினை கொடுக்கப்பட்ட நிபந்தனை சரியாக இருக்கும் வரை, மீண்டும் மீண்டும் இயக்கும்.

while மடக்கு


while மடக்கும் ஒரு கட்டுப்பாடு பாய்வு கூற்றாகம். இது ஒரு மடக்கினை கொடுக்கப்பட்ட நிபந்தனை சரியாக இருக்கும் வரை, மீண்டும் மீண்டும் இயக்கும். while மடக்கு ஒரு நுழைவு சோதனை மடக்காகும். இதில் சோதிப்பு கோவை முதலில் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே மடக்கினுள் உள்ளே நுழையும்.

while மடக்கின் தொடரியல் : 

while ( நிபந்தனை சோதிப்புக் கோவை)

{

  மடக்கின் உடற்பகுதி

}

கூற்று -x;

while மடக்கில், நிபந்தனை சோதிப்பு கோவை மதிப்பீடு செய்யப்பட்டு அதன் முடிவு சரி என வந்தால், மடக்கின் உடற்பகுதி இயக்கப்பட்டு மீண்டும் while மடக்கிற்கு கட்டுப்பாடு அனுப்பி வைக்கப்படும்.



நிபந்தனை சோதிப்பு கோவை முடிவு தவறு என வரும்போது, பாய்வுக் கட்டுப்பாடு கூற்று-X அனுப்பி வைக்கப்படும். 


எடுத்துக்காட்டு 10.10 while மடக்கை பயன்படுத்தி 1 முதல் 10 வரை உள்ள எண்களின் தொடர் கூட்டலை வெளியிடும் நிரல் எழுதுக. 

#include <iostream>

using namespace std;

int main ()

{

int i=1,sum=0;

while(i<=10)

{

      sum=sum+i;

      i++;

}

cout<<"The sum of 1 to 10 is "<<sum;

return 0;

}

வெளியீடு

The sum of 1 to 10 is 55

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள நிரலில், முழு எண் மாறி யின் மதிப்பு 1 என்றும் sum என்ற மாறியின் மதிப்பு 0 என்றும்மதிப்பிருத்தப்பட்டுள்ளது. while மடக்கு i < 10 என்ற நிபந்தனையை சோதித்து, அதன் முடிவு சரி எனில் 1 என்ற மாறியின் மதிப்பு sum மாறியுடன் கூட்டப்படும், பின்னர் யின் மதிப்பு 1 மிகுக்கப்படும். மீண்டும் நிபந்தனை i<10 சோதிக்கப்படும். இப்பொழுது 2 < 10, சரி என்பதால் sum என்ற மாறியியுடன் 2 கூட்டப்படும். இது போன்று யின் மதிப்பு 11 ஆகும் வரை நடைபெறும். இப்பொழுது 11 < 10 என்ற சோதனை தவறு என வருவதால், while மடக்கை விட்டு வெளியே செல்லும். மடக்கை விட்டு வெளியே வந்ததும், sum மாறியின் மதிப்பு வெளியிடப்படும்.


எடுத்துக்காட்டு 10.11 while மடக்கை பயன்படுத்தி 5 எண்களை உள்ளீடாகப் பெற்று அவற்றின் கூட்டுத் தொகை மற்றும் சராசரியை காணும் நிரல் எழுதுக. 

#include <iostream>

using namespace std;

int main ()

{

int i=1,num,avg,sum=0;

while(i<=5)

{

      cout<<"Enter the number : ";

      cin>>num;

      sum=sum+num;

      i++;

}

avg=sum/5;

cout<<"The sum is "<<sum<<endl;

cout<<"The average is "<<avg;

return 0;

}

வெளியீடு 

Enter the number : 1

Enter the number : 2

Enter the number : 3

Enter the number : 4

Enter the number : 5

The sum is 15

The average is 3

மேலே கொடுக்கப்பட்டுள்ள நிரலில், num, avg என்ற மாறி அறிவிக்கப்பட்டு i-ன் மதிப்பு 1 மற்றும் sum - ன் மதிப்பு 0 என தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. while மடக்கு, i <= 5 என்ற நிபந்தனையை சோதித்து, சரி என முடிவு பெறப்பட்டால், பயனரிடம் இருந்து ஒரு எண் உள்ளீடாகப் பெறப்பட்டு, Sum உடன் கூட்டப்பட்டு பின் i மதிப்பு மிகுக்கப்படும். மீணடும் i <= 5 என்ற நிபந்தனை சோதிக்கப்படுகிறது, மேலும் 2 <=5 என்ற சோதிப்பின் போது இரண்டாவது எண் பயனரிடம் பெறப்பட்டு sum உடன் கூட்டப்படும். இது போன்று i-யின் மதிப்பு 6 வரும் வரை இயக்கப்படும். இந்நிலையில் while மடக்கு மடக்கை விட்டு வெளியேறுவதும் avg கணக்கிடப்பட்டு avg மற்றும் sum வெளியிடப்படும்.

 

while மடக்கின் மாறுபட்ட வடிவங்கள் 

while மடக்கு பல்வேறு வடிவங்களை பெற்றிருக்கலாம். அது வெறுமை மடக்காகவோ அல்லது முடிவற்ற மடக்காகவோ இருக்கலாம். ஒரு வெறுமை while மடக்கின் உடற்பகுதியில் null கூற்றைத் தவிர வேறு எந்த கூற்றும் இடம் பெற்றிருக்காது. Null கூற்று என்பது அரைப்புள்ளி (;) ஆகும். எடுத்துக்காட்டு


மேலே கொடுக்கப்பட்டுள்ள குறிமுறையில், மடக்கு ஒரு தாமத மடக்காக (delay loop) கொடுக்கப்பட்டுள்ளது. நேர தாமத மடக்கு ஒரு நிரலை சில நொடிகள் இடைநிறுத்தப் பயன்படுகிறது. மடக்கின் உடற்பகுதியில் எந்த ஒரு மிகுப்பு கூற்றும் கொடுக்கப்படாத போது while மடக்கு முடிவற்ற மடக்காக செயல்படும் 

எடுத்துக்காட்டு 



11th Computer Science : Chapter 10 : Flow of Control : C++ While loop in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு : C++ while மடக்கு - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு