பாய்வுக் கட்டுப்பாடு | C++ - C++ பின்னலான if கூற்று | 11th Computer Science : Chapter 10 : Flow of Control
பின்னலான if கூற்று:
ஒரு if கூற்று, மற்றொரு if கூற்றை கொண்டிருந்தால் அது பின்னலான if கூற்று என்று அழைக்கப்படுகிறது. பின்னலான if கூற்றுகள், பின்வரும் மூன்று வடிவங்களில் அமைக்கப்படும். அவையாவன
(1) ஒரு if கூற்றுக்கு உள்ளே மற்றொரு if கூற்றை அமைத்தல்
(2) ஒரு if கூற்றின் else கூற்றுக்குள் மற்றொரு if கூற்றை அமைத்தல்
(3) ஒரு if கூற்றுக்கு உள்ளே ஒரு if கூற்றும், else கூற்றுக்கு உள்ளே மற்றொரு if கூற்றும் அமைத்தல்.
இந்த மூன்று வடிவங்களின் தொடரியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு if கூற்றுக்கு உள்ளே மற்றொரு if கூற்றை அமைத்தல்
if (கோவை-1)
{
if (கோவை - 2)
{
மெய் பகுதி கூற்றுகள்;
}
else
{
மெய்யற்ற பகுதி கூற்றுகள்;
}
else பகுதியின் உடற்பகுதி;
ஒரு if கூற்றின் else கூற்றுக்குள் மற்றொரு if கூற்றை அமைத்தல்
if (கோவை-1)
{
மெய் பகுதியின் உடற்பகுதி;
}
else
{
if (கோவை - 2)
{
மெய் பகுதி கூற்றுகள்;
}
Else
{
மெய்யற்ற பகுதி கூற்றுகள்;
}
}
ஒரு if கூற்றுக்கு உள்ளே ஒரு if கூற்றும், else - கூற்றுக்கு உள்ளே மற்றொரு if கூற்றும் அமைத்தல்.
if (கோவை)
{
if (கோவை)
{
மெய் பகுதி கூற்றுகள்;
}
else
{
மெய்யற்ற பகுதி கூற்றுகள்;
}
}
else
{
if (கோவை)
{
மெய் பகுதி கூற்றுகள்;
}
else
{
மெய்யற்ற பகுதி கூற்றுகள்;
}
மேலே கொடுக்கப்பட்டுள்ள முதலாவது தொடரியல், முதன்மை if கூற்றுக்குள் கொடுக்கப்பட்டுள்ள கோவை-1 முதலில் மதிப்பிடப்படும். அதன் மதிப்பு சரி எனில், அதனுள் கொடுக்கப்பட்டுள்ள பின்னலான if கூற்றுக்கு கட்டுபாட்டு பாய்வு செல்லும். பின்னலான if கூற்றின் நிபந்தனை சரி எனின், அதனுள் கொடுக்கப்பட்ட சரி தொகுதியின் கூற்றும், தவறு எனில் else கூற்றினுள் கொடுக்கப்பட்டுள்ள தவறு தொகுதியின் கூற்றும் இயக்கப்படும். முதன்மை if கூற்றின் நிபந்தனை கோவை மதிப்பு தவறு எனில், முதன்மை else தொகுதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள நிரல் கூற்றுகள் இயங்கும். மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று வகையான பின்னல் if கூற்றுகளின் பாய்வுப் படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டு 10.3 பின்னலான if கூற்றினை பயன்படுத்தி தரநிலைக்கு ஏற்ப விற்பனை தரகை (Commission) கணக்கிட நிரல் ஒன்று எழுது.
#include <iostream>
using namespace std;
int main()
{
int sales, commission;
char grade;
cout << "\n Enter Sales amount: ";
cin >> sales;
cout << "\n Enter Grade: ";
cin >> grade;
if (sales > 5000)
{
commission = sales * 0.10;
cout << "\n Commission: " << commission;
}
else
{
commission = sales * 0.05;
cout << "\n Commission: " << commission;
}
cout << "\n Good Job ..... ";
return 0;
}
வெளியீடு:
Enter Sales amount: 6000
Enter Grade: A
Commission: 600
Good Job .....