பாய்வுக் கட்டுப்பாடு | C++ - கூற்றுகள் | 11th Computer Science : Chapter 10 : Flow of Control

11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு

கூற்றுகள்

கணிப்பொறி நிரல் என்பது ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற கொடுக்கப்படும் கூற்றுகள் அல்லது கட்டளைகளின் தொகுப்பாகும்.

கூற்றுகள் (Statements)


கணிப்பொறி நிரல் என்பது ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற கொடுக்கப்படும் கூற்றுகள் அல்லது கட்டளைகளின் தொகுப்பாகும். இவ்வகை கூற்றுகள், ஒரு குறிப்பிட்ட செயலை நிறைவேற்ற பயன்படுகிறது. செயல் எனப்படுவது, ஒரு மாறி அறிவித்தல், கோவைகளின் மதிப்பீடு, மதிப்பிருத்தல், தீர்மானிப்பு, மடக்கு போன்ற செயல்பாடுகளாக இருக்கலாம். 

c++ நிரலில் இரு வகையான கூற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன. 

(i) வெற்று கூற்று (Null Statements) 

(ii) கலவை கூற்று (compound Statements) 


1. வெற்று கூற்று 


அரைப்புள்ளியை மட்டுமே கொண்டிருக்கும் கூற்று "வெற்று அல்லது வெறுமைக் கூற்று" எனப்படும். இதன் பொது வடிவம் பின்வருமாறு:

; // இது ஒரு வெற்றுக் கூற்று

வெற்றுக் கூற்றுகளை, மடக்கில் இட உணர்த்திகளாக பயன்படுத்தலாம் அல்லது கலவை கூற்றுகள் அல்லது செயற்கூறுகளின் முடிவில் இடம் பெறச்செய்யலாம். 


2. கலவை (தொகுதி) கூற்று


c++ கூற்றுகளின் தொகுப்பினை நெளிவு அடைப்புக்குறிகளுக்குள் உள்ளடக்க அனுமதிக்கிறது. இந்த கூற்றுகளின் தொகுப்பினை கலவை கூற்று அல்லது தொகுதி என்கிறோம். 

கலவை கூற்றின் பொது வடிவம்

{

கூற்று1; 

கூற்று 2; 

கூற்று 3;

}


எடுத்துக்காட்டு

{

int x, y;

x = 10;

y = x + 10;

}

 

கலவை கூற்று அல்லது தொகுதி ஒற்றை அலகாக கருதப்படுகிறது. இவை நிரலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் இடம் பெறலாம்.


Tags : Flow of Control | C++ பாய்வுக் கட்டுப்பாடு | C++.
11th Computer Science : Chapter 10 : Flow of Control : Statements Flow of Control | C++ in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு : கூற்றுகள் - பாய்வுக் கட்டுப்பாடு | C++ : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு