Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | வேறுபட்ட காரணிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களின் தகவமைப்புகள்

பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் - தாவரவியல் செய்முறைகள் - வேறுபட்ட காரணிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களின் தகவமைப்புகள் | 12th Botany : Practicals

   Posted On :  10.08.2022 02:06 am

12 வது தாவரவியல் : செய்முறைகள்

வேறுபட்ட காரணிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களின் தகவமைப்புகள்

நோக்கம் : வேறுபட்ட காரணிகள் (காற்று மற்றும் பூச்சிகள்) மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களின் தகவமைப்புகளை அறிதல்.

பதப்படுத்தப்பட்ட மாதிரிகள்


சோதனை எண் 5: வேறுபட்ட காரணிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களின் தகவமைப்புகள்

நோக்கம் : வேறுபட்ட காரணிகள் (காற்று மற்றும் பூச்சிகள்) மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களின் தகவமைப்புகளை அறிதல்.

கொள்கை : மகரந்தப்பையிலிருந்து மகரந்தத்துகள் சூலக முடியைச் சென்றடையும் நிகழ்வு மகரந்தச்சேர்க்கை என அழைக்கப்படும்.

தேவையானவை : மக்காச்சோள மலர்கள் அல்லது மற்ற தானிய மலர்கள், பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கையுறும் (பயறு வகை) மலர்கள் - சால்வியா, கலோட்ராபிஸ், ஆஸிமம் ஆஸ்டிரேசி குடும்ப மலர்கள்.

கொடுக்கப்பட்டுள்ள மலரைக் கண்ணாடித் தகட்டின் மேல் வைத்துக் கை லென்ஸ் உதவியுடன் உற்று நோக்கவும். வெளிக் காரணிகளால் மகரந்தச்சேர்க்கையுறும் மலர்களின் தகவமைப்புகளைக் குறித்துக் கொள்ளவும்.


அ. காற்று மகரந்தச்சேர்க்கையுறும் மலர்கள் - அனிமோஃபில்லி

கண்டறியும் பண்புகள்

• மலர்கள் சிறியவை, தெளிவற்றவை, வண்ணமற்றவை, மணமற்றவை மற்றும் பூந்தேன் அற்றவை.

• வெளிநோக்கிய மகரந்தப்பையையும், சூலக முடியையும் கொண்டவை.

• மகரந்தத்துகள் இலகுவானவை, சிறிய துகள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

• சூலகமுடி பெரியது. சில சமயங்களில் மகரந்தத்துகள் களைப் பிடிக்கக் கிளைத்து இறகு போன்று காணப்படும்



ஆ. பூச்சிமகரந்தச்சேர்க்கையுறும்மலர்கள்-எண்டமோஃபில்லி

கண்டறியும் பண்புகள்

• மலர்கள் பகட்டானவை அல்லது பிரகாசமான வண்ணமுடையவை மற்றும் நறுமணமுடையவை.

• மலர்கள் பூந்தேன், உண்ணத்தக்க மகரந்தத் துகள்களை உருவாக்குபவை.

• பொதுவாக மகரந்தத்தாள்களும், சூலக முடியும் உள்நோக்கியவை

• வழக்கமாகச் சூலகமுடி கிளைகளற்றது, தட்டையாகவோ அல்லது மடல்களை உடையதாகவோ காணப்படலாம்.


Tags : Fresh or Preserved Specimens - Botany Practicals பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் - தாவரவியல் செய்முறைகள்.
12th Botany : Practicals : Adaptations of flowers for pollination by different agents Fresh or Preserved Specimens - Botany Practicals in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : செய்முறைகள் : வேறுபட்ட காரணிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களின் தகவமைப்புகள் - பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் - தாவரவியல் செய்முறைகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : செய்முறைகள்