சோதனைகள் - தாவரவியல் செய்முறைகள் - பல்வேறு வகையான மண்ணின் ஹைட்ரஜன் அயனி (pH) அயனி செறிவினை அறிதல் | 12th Botany : Practicals
சோதனைகள்
சோதனை எண் 21: பல்வேறு வகையான
மண்ணின் ஹைட்ரஜன் அயனி (pH) அயனி செறிவினை அறிதல்
சில ஊட்டச்சத்துக்கள் அதிகச் செறிவில் நச்சுத்தன்மையுடன்
மாறுகின்றன. எனவே மண்ணின் pH அதனின் ஒரு முக்கிய வேதியியல் பண்பாகும். தாவரங்கள் நடுநிலை
அல்லது சற்றே அமில மண்ணில் நன்றாக வளரும். மண்ணின் pH மற்றும் மண்ணில் காணப்படுகின்ற
சில உயிரினங்களாலும், மேலும் பல்வேறு ஊட்டச்சத்துக்களின் வளர் திறனையும் கட்டுப்படுத்துகின்றன.
மண்ணின் pH நிலையானது - 0 முதல் 14 வரை ஆகும்.
அ. pH அளவு 7 - நடுநிலையான மண்
ஆ. pH அளவு 7க்கு கீழே - அமிலத்தன்மையுடைய
மண்
இ. pH அளவு 7க்கு மேல் - காரத்தன்மையுடைய மண்
ஈ. தாவர வளர்ச்சிக்குத் தேவையான நடுநிலையான
pH 5.5 முதல் 7 வரை மட்டுமே.
பெரும்பாலும் தாவரங்கள் செழித்து வளர்வதற்குத்
தேவையானது நடுநிலையான pH ஆகும். சற்றே அமிலத்தன்மை மர வளர்ச்சிக்கும் மற்றும் காடுகள்
உருவாவதற்கும் சாதகமானது. சற்றே காரத்தன்மை கொண்ட மண் புல் மற்றும் பயறு வகை தாவரங்கள்
வளர ஏற்றது.
பல்வேறு வகையான மண்ணின் pHக்களை அறிதல்
மண் மாதிரிகள் (வயல், தோட்டம், குளம் மற்றும்
நதிக்கரையில் போன்றவற்றில் உள்ள ஏதேனும் இரண்டு வேறுபட்ட மண் மாதிரிகள்), சோதனைக் குழாய்கள்,
புனல், வடிகட்டும் தாள்கள், வெவ்வேறு வரம்புள்ள pH தாள்கள், சாலை வடிநீர், குடுவை முதலியன.
ஒவ்வொரு மண் மாதிரியிலிருந்தும் ஒரு மேசைக்
கரண்டி அளவு மண்ணை எடுத்து வெவ்வேறு குடுவைகளில் 100 மி.லி. வாலை வடிநீரில் கரைக்க
வேண்டும். கரைசலை நன்றாகக் கலக்கி, இடை நிறுத்தப்பட்ட துகள்கள் அடியில் தங்குவதற்காகக்
கரைசலை அரைமணி நேரம் வைக்க வேண்டும். வடிகட்டிய கரைசல்களை வெவ்வேறு சோதனைக் குழாய்களில்
தனித்தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பரந்த வரம்பிலான pH தாள்களின் சிறிய துண்டுகளை
ஒவ்வொரு கரைசலிலும் அமிழ்த்தி வைக்க வேண்டும். pH தாள்களில் ஏற்படும் நிறமாற்றத்தை
pH தாள் புத்தகத்திலுள்ள வண்ண அளவீடுகளுடன் ஒப்பிட வேண்டும். இது தோராய pH மதிப்பினைத்
தருகிறது.
பல்வேறு மண் மாதிரிகளின் pH மதிப்புகளை அட்டவணையில்
பதிவு செய்ய வேண்டும் வ.எண். மண் மாதிரிகள்
பல்வேறு வகையான மண் மாதிரிகளில் தாவரங்களின்
வளர்ச்சியினை pH மதிப்பு நிர்ணயிக்கிறது என்பதை அறியலாம்.
1. சோதனைக்கு முன் கண்ணாடிப் பொருட்களை முழுமையாகச்
சுத்தம் செய்து உலர்த்த வேண்டும்.
2. வண்ணங்களை வண்ண அளவீடு ஒப்பீடு செய்வதற்கு
முன் pH மண்ணின் தாள்கள் உலர்த்தப்பட்டிருக்க வேண்டும். செறிவினை
3. வண்ணங்களைச் சரியான முறையில் ஒப்பிட வேண்டும்
மற்றும் pH அளவினைத் துல்லியமாக நிர்ணயிக்க வேண்டும்.