கணிதச் செயல்பாடு - தாவரவியல் செய்முறைகள் - குரோமோசோம்களின் பிறழ்ச்சி - நீக்கம், இரட்டிப்படைதல் மற்றும் தலைகீழ்த் திருப்பம் | 12th Botany : Practicals
கணிதச் செயல்பாடு
சோதனை எண் 17: குரோமோசோம்களின் பிறழ்ச்சி - நீக்கம், இரட்டிப்படைதல் மற்றும்
தலைகீழ்த் திருப்பம்
கீழ்கண்டவற்றில் குரோமோசோம் பிறழ்ச்சி வகைகளான
நீக்கம், இரட்டிப்பாதல் மற்றும் தலைகீழ்த் திருப்பம் ஆகியனவற்றைக் கண்டறிக. மேலும்
அதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.
குரோமோசோமின் அசாதாரண அமைப்புகளைப் பற்றி புரிந்து
கொள்ளுதல்.
குரோமோசோம்களின் பிறழ்ச்சிகள் அயனியாக்கக்
கதிர்வீச்சு மற்றும் வேதி பொருட்களால் நிகழ்கின்றன. குரோமோசோம்களின் துண்டு பிளவுறுதலும்
சேர்தலும் பல்வேறு வகை பிறழ்ச்சிகளைப் பற்றி அறிய உதவுகின்றன.
தாமிரக்கம்பி , A முதல் H வரை குறிக்கப்பட்ட
ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய மஞ்சள் நிற மணிகள் மரபணுக்களையும், சிவப்பு நிற மணி ஆங்கில
எழுத்தற்ற நிலையில் சென்ட்ரோமியரையும் குறிக்கும். மேற்கண்ட பொருட்களைப் பயன்படுத்திப்
பல்வேறு வகை குரோமோசோம் துண்டுகளிலுள்ள மரபணுத் தொடரில் எற்படும் பிறழ்ச்சிகளை மாணவர்களிடம்
கேட்கவும், பகுத்தறிந்திடவும் முடியும்.
1. தாமிரக்கம்பியையும், மஞ்சள் மணிகளை A முதல்
H வரை மரபணு தொடராகவும், சிவப்பு நிற மணி சென்ட்ரோமியராகவும் கொண்டு ஒரு இயல்பான குளோரோசோம்
மாதிரியைச் செய்து மேசையின் மேல் வைக்கவும்.
2 நீக்கத்திற்கு மஞ்சள் நிற மணிகளில் A முதல்
H வரையான, ஏதேனும் ஒரு ஆங்கில எழுத்து இல்லாமலிருப்பது குரோமோசோம் பிறழ்ச்சியில் நீக்கத்தைக்
குறிக்கும்.
3.இரட்டிப்படைதலுக்கு மஞ்சள் நிற மணிகளுடன்
கூடுதலாக ஆங்கில எழுத்து A முதல் H வரை காணப்படுதல் (ஏதாவது எழுத்து ஒன்றிற்கு மேல்
காணப்படும் மணிகள்) குரோமோசோம் பிறழ்ச்சியில் இரட்டிப்பாதலைக் குறிக்கும்.
4. தலைகீழ்த் திருப்பத்திற்கு ஒரு சாதாரண மாதிரி
குரோமோசோமில் A முதல் H வரை குறிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற மணிகளைக் கொடுக்க வேண்டும்.
(இதில் A முதல் H வரை மணிகளில் சேர்த்தலோ அல்லது நீக்கமோ இல்லை. ஆகையினால் மாணவர்கள்
இம்மணிகளைப் பயன்படுத்தித் தலைகீழ்த் திருப்பமுடைய குரோமோசோமை வடிவமைக்க வேண்டும்)
கொடுக்கப்பட்ட மணி வகைகளின் அடிப்படையில் மாணவர்கள் தகுந்த குரோமோசோம்களின் பிறழ்சியைக்
கண்டறிந்து வடிவமைக்கவும்.
அ. குரோமோசோம் பிறழ்ச்சி - நீக்கம்
1. குரோமோசோம் துண்டங்கள் A மற்றும் B நீக்கம், படம் 17 அ பார்க்கவும்.
2. ஒரு குரோமோசோமிலுள்ள மரபணுத் துண்டம் நீக்கப்படும் போது
அது நீக்கம் என அழைக்கப்படுகிறது.
பெரும்பாலான நீக்கங்களால் உயிரினங்கள் இறந்து
விடுகின்றன.
ஆ. குரோமோசோம் பிறழ்ச்சி - இரட்டிப்படைதல்
1.ஒரு குரோமோசோமில் காணப்படும் குரோமோசோம்
துண்டங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட துண்டங்களாகக் காணப்பட்டால் அது இரட்டிப்படைதல் என அழைக்கப்படுகிறது
2. ஒரு குரோமோசோமில் மரபணு A, B, C, D, E,
F, G, H மற்றும் என்ற வரிசையில் அமைந்துள்ளது. பிறழ்ச்சியின் காரணமாக மரபணு B மற்றும்
C இரட்டிப்படைந்து, மரபணுவின் வரிசை A, B, C, B, C, D, E, F, G, H மற்றும் என அமைகிறது
படம் 17 ஆ பார்க்கவும்)
சில இரட்டிப்படைதல் நிகழ்வுகள் உயிரியின் பரிணாம
வளர்ச்சிக்கு உதவுகின்றன.
இ. குரோமோசோம் பிறழ்ச்சி - தலைகீழ்த் திருப்பம்
கொடுக்கப்பட்டுள்ள மரபியல் கணிதச் செயல்பாடு
தலைகீழ்த் திருப்ப வகை குரோமோசோம் பிறழ்ச்சி ஆகும்.
1. ஒரு குரோமோசோம் துண்டத்தில் மரபணு வரிசை
180° கோணத்தில் சுழற்சி அடைந்து தலைகீழாய் அமைதல் தலைகீழ்த் திருப்பம் என அழைக்கப்படுகிறது.
2
ஒரு குரோமோசோமில் மரபணு வரிசை A, B, C, D, E, F, G, H மற்றும் I. பிறழ்ச்சியின் காரணமாக
மரபணு வரிசை A, D, C, B, E, F, G,H மற்றும் ஆக மாறுகிறது (படம் 17 இ பார்க்கவும்
சில வேளைகளில் உயிரியின் பரிணாம வளர்ச்சியில்
தலைகீழ்த் திருப்பம் முக்கியப் பங்காற்றுகிறது
குறிப்பு: ஆசிரியர் பல்வேறு வகை குரோமோசோம் பிறழ்ச்சியை வெவ்வேறான
மரபணு வரிசைகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும். புறத் தேர்வாளர்களும்
வெவ்வேறான மரபணு வரிசைளைப் பயன்படுத்தி இந்தக் கணிதச் செயல்பாட்டைச் கொடுக்கலாம்.