Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | ஆற்றல் ஓட்டம் மற்றும் பத்து விழுக்காடு விதி

கணிதச் செயல்பாடு - தாவரவியல் செய்முறைகள் - ஆற்றல் ஓட்டம் மற்றும் பத்து விழுக்காடு விதி | 12th Botany : Practicals

   Posted On :  10.08.2022 02:10 am

12 வது தாவரவியல் : செய்முறைகள்

ஆற்றல் ஓட்டம் மற்றும் பத்து விழுக்காடு விதி

நோக்கம்: சூழல்மண்டலத்தின் ஆற்றல் ஓட்டம் எப்பொழுதும் ஒரு திசைசார் ஓட்டம் என்பதையும் ஆற்றல் 10 விழுக்காடு கடத்தப்படுவதையும் புரிந்து கொள்ளுதல்.

கணிதச் செயல்பாடு


சோதனை எண் 15: ஆற்றல் ஓட்டம் மற்றும் பத்து விழுக்காடு விதி.

நோக்கம்:

சூழல்மண்டலத்தின் ஆற்றல் ஓட்டம் எப்பொழுதும் ஒரு திசைசார் ஓட்டம் என்பதையும் ஆற்றல் 10 விழுக்காடு கடத்தப்படுவதையும் புரிந்து கொள்ளுதல்.

கொள்கை:

உணவுச்சங்கிலியில் ஆற்றல் ஓட்டம் மற்றும் 10 விழுக்காடு ஆற்றல் மட்டுமே ஒவ்வொரு ஊட்ட மட்டத்திற்கும் கடத்தப்படுவதோடு மீதமுள்ள 90 விழுக்காடு ஆற்றல் இழக்கப்படுகிறது என்பதை மாணவர்கள் அறிவர். 


தேவையானவை:

மாறுபட்ட ஆற்றல் மதிப்புகளைக் கொண்ட பல்வேறு வகையான உணவுசங்கிலிகள்.


ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வேறுபட்ட ஆற்றல் மதிப்புகள் கொண்ட பல்வேறு வகையான உணவுச் சங்கிலிகளைக் கொடுத்துத் தயார்படுத்த வேண்டும்.

கணக்கீடு

கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுசங்கிலியை ஆராய்ந்து மூன்றாம் நிலை ஊட்ட மட்டத்திலுள்ள உயிரினங்கள் பெறும் ஆற்றலின் அளவைக் கண்டுபிடி


T1 - புற்கள் (உற்பத்தியாளர்கள் ) = 30,000 ஜூல் ஆற்றல்

T2 - முயல் (முதல் நிலை நுகர்வோர்கள்) =?

T3 - பாம்பு (இரண்டாம் நிலை நுகர்வோர்கள்) = ?

10 விழுக்காடு விதியின்படி, ஆற்றல் மாற்றத்தின் போது 10 விழுக்காடு ஆற்றல் மட்டுமே ஒரு ஊட்ட மட்டத்திலிருந்து மற்றொன்றிற்குக் கடத்தப்படுகிறது. ஆகவே 10 விழுக்காடு ஆற்றல் மட்டும் வவிலிருந்து க்கு கடத்தப்படுகிறது.

ஆகவே T2, - முயல் (முதல்நிலை நுகர்வோர்கள்) பெறுவது ( 30000 X 10 / 100 = 3000 J )

அதேபோல், 10 விழுக்காடு ஆற்றல் மட்டும் T1, விலிருந்து T2, க்கு கடத்தப்படுகிறது.

ஆகவே T3, - பாம்பு (இரண்டாம்நிலை நுகர்வோர்கள்) பெறுவது ( 30000 X 10 / 100 = 300 J )

விடை:

1. மூன்றாம்நிலை ஊட்டமட்டம் T3, - (பாம்பு) பெறுவது 300 ஜூல்கள் ஆற்றல் ஆகும்.

Tags : Solving the Problems | Botany Practicals கணிதச் செயல்பாடு - தாவரவியல் செய்முறைகள்.
12th Botany : Practicals : Flow of energy and Ten percent law Solving the Problems | Botany Practicals in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : செய்முறைகள் : ஆற்றல் ஓட்டம் மற்றும் பத்து விழுக்காடு விதி - கணிதச் செயல்பாடு - தாவரவியல் செய்முறைகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : செய்முறைகள்