சோதனைகள் - தாவரவியல் செய்முறைகள் - கண்ணாடித் தகட்டின் மீது மகரந்தத்துகள் முளைத்தலைக் கண்டறிதல் | 12th Botany : Practicals
சோதனைகள்
சோதனை எண்20: கண்ணாடித் தகட்டின் மீது மகரந்தத்துகள் முளைத்தலைக் கண்டறிதல்
குறிப்பு: குரோட்டலேரியா, ஹைபிஸ்கஸ்,
பைசம் போன்ற மலர்களின் மகரந்தத்துகள்களை 10% சர்க்கரைக் கரைசல் அல்லது இளநீர் அல்லது
ஏதாவது ஊட்ட ஊடகம் கொண்ட கண்ணாடித் தகட்டில் தூவி மகரந்தத்துகள் முளைத்தலைக் காணலாம்.
10 - 15 நிமிடங்களுக்குப் பிறகு குறைந்த உருப்பெருக்கும் திறன் கொண்ட நுண்ணோக்கியில்
வைத்து உற்று நோக்கினால் மகரந்தத்துகள்களிலிருந்து மகரந்தக்குழாய் வளர்வதைக் காணலாம்.
கண்ணாடித் தகட்டின் மீது மகரந்தத்துகள் வளர்ச்சியடைதலைக்
காணுதல்.
அந்தந்தப் பருவத்தில் கிடைக்கக்கூடிய புதிதாக
மலர்ந்த மலர்கள், குழித்தகடு, கண்ணாடி வில்லை, நுண்ணோக்கி, சுக்ரோஸ், போரிக் அமிலம்,
வாலை வடிநீர் , முகவை / குவளை முதலியன.
1. 1 கிராம் சுக்ரோஸ் / 1 கிராம் போரிக் அமிலத்தை
100 மி.லி. வாலைவடிநீரில் கரைத்து ஊட்ட ஊடகத்தைத் தயாரிக்கவும்.
2 தூய குழிக்கண்ணாடித் தகட்டை எடுத்து அதில்
சில துளிகள் ஊட்ட ஊடகத்தைச் சேர்க்கவும்.
3. அதில் முதிர்ந்த மலரின் மகரந்தத்தாளிலிருந்து
மகரந்தத்துகள்களை உதிர்க்கவும்.
4.5 நிமிடத்திற்குப் பிறகு கண்ணாடித் தகட்டை
நுண்ணோக்கியில் வைத்து அடுத்த அரைமணி நேரத்திற்குக் குறிப்பிட்ட இடைவெளியில் உற்றுநோக்கவும்.
ஊட்ட ஊடகத்தில் மகரந்தத்துகள் முளைக்கின்றன.
குழாய் பெரிதாகி குழாய் உட்கரு மகரந்தத்துகளின் வளர்துளை வழியாக மகரந்தக்குழாயாக வளர்கிறது.
குழாய் செல்லின் உட்கரு கீழிறங்கி மகரந்தக்குழாயின் நுனியை அடைகிறது. உருவாக்கிச் செல்
மகரந்தக்குழாயினுள் செல்கிறது. இது இரு ஆண் கேமீட்களாக பகுப்படைகிறது.
முளைக்கும் மகரந்தத்துகள்களின் பல்வேறு நிலைகளைக்
காணலாம். சில மகரந்தத்துகள் முளைக்க ஆர்ம்பித்திருக்கும் போது மற்றவை (குழல் உட்கரு
மற்றும் இரு ஆண் கேமீட்கள் கொண்டு) நீண்ட மகரந்தக்குழலைக் கொண்டிருக்கும்.
1. மலர்கள் புதிதாகப் பறிக்கப்பட்டவையாக இருக்க
வேண்டும்.
2. மகரந்தத்துகள்களை உற்று நோக்கத் தூய குழிக்கண்ணாடித்
தகட்டைப் பயன்படுத்தவும்.
3.கண்ணாடித் தகட்டை எவ்வித இடையூறுமின்றி வைக்கவும்
இல்லையெனில் மகரந்தத்துகள்களின் அமைவிடம் மாறிவிடும்.