மாதிரிகள் / புகைப்படங்கள் / விளக்கப்படங்கள் - தாவரவியல் செய்முறைகள் - சூலின் வகைகள் | 12th Botany : Practicals
மாதிரிகள் / புகைப்படங்கள் / விளக்கப்படங்கள்
சோதனை எண் 9: சூலின் வகைகள்
நோக்கம்: பூக்கும்
தாவரங்களில் காணப்படும் பல்வேறு வகையான சூல்களை அடையாளம் காணுதல்.
கொள்கை
:
நோக்குநிலை, வடிவம் மற்றும் சூல்காம்பு, சலாசா மற்றும் சூல்துளையின் அமைவிடத்தைப் பொறுத்துச்
சூல்களை இனங்காணுதல்.
தேவையானவை : பலவகை சூல்களின் மாதிரிகள் / புகைப்படங்கள் / விளக்கப்படங்கள்
அ. அனாடிராபஸ் சூல் (தழைகீழ்ச் சூல்)
•சூலின் உடல் பகுதி முழுவதுமாகத் தலைகீழாக
அமைந்துள்ளது. ஆதலால் சூல்துளையும் சூல் காம்பும் அருகருகே நெருங்கி அமைந்துள்ளது.
•சூல்துளை மற்றும் சலாசா ஒரே நேர்க்கோட்டில்
அமைந்துள்ளன. எடுத்துக்காட்டு: ஆஸ்டரேசி குடும்பத் தாவரச் சூல்கள்.
ஆ. ஆர்த்தோடிராபஸ் சூல் (நேர்சூல்)
• சூல்துளை இணைப்புப் பகுதியிலிருந்து தொலைவில்
அமைந்துள்ளது.
• சூல் நிமிர்ந்தது அல்லது நேரானது. ஆதலால்,
சூலக்காம்பு, சலாசா மற்றும் சூலகதுளை ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டு:
பைப்பரேசி, பாலிகோனேசி குடும்பத் தாவரச் சூல்கள்.
இ.கம்பைலோடிராபஸ் சூல்
• சூலின் உடல் பகுதி சூலகத்துளைப் பகுதியில்
வளைந்து ஏறத்தாழ அவரை விதை வடிவில் அமைந்துள்ளது.
• கருப்பையும் சற்று வளைந்துள்ளது.
• சூலகக்காம்பு, சூலகத்துளை மற்றும் சலாசா
ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று அருகமைந்து, சூலகத்துளை சூல்ஒட்டுத்திசுவை நோக்கி அமைந்துள்ளது.
எடுத்துக்காட்டு: லெகுமினோசே