தாவரங்களின் பொருளாதார முக்கியத்துவம் - தாவரவியல் செய்முறைகள் - பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள் மற்றும் அதன் பயன்கள் | 12th Botany : Practicals
தாவரங்களின் பொருளாதார முக்கியத்துவம்
சோதனை எண் 24: பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள் மற்றும்
அதன் பயன்கள்
1.
கோதுமை
தாவரவியல் பெயர்: டிரிட்டிக்கம் எஸ்டிவம்
பயன்படும் பகுதி: முழுத் தானியம்
பயன்கள்
1. கோதுமை மாவு ரொட்டி மற்றும் அடுமனைப் பொருட்கள் தயாரிக்க உகந்தது
2. முளைகட்டிய கோதுமை மதுபானம், ஊட்டச்சத்து பானங்கள் போன்றவை உற்பத்தி செய்வதற்கான முக்கிய மூலப்பொருளாகும்.
2.
மிளகு
தாவரவியல் பெயர்: பைப்பர் நைக்ரம்
பயன்படும் பகுதி: விதைகள்
பயன்கள்
1.
நறுமணத் தூண்டியாக, உமிழ்நீர், வயிற்றுச் சுரப்புகளை அதிகப்படுத்தப் பயன்படுகிறது.
2.
மருந்துகளின் உயிர்ப்பு உறிஞ்சுதலை அதிகரிக்கிறது.
3.
பருத்தி
தாவரவியல் பெயர்: காஸிபியம் பார்படென்ஸ
பயன்படும் பகுதி: விதையுறை நார்கள்
பயன்கள்
1.
பலதரப்பட்ட துணிகள், உள்ளாடைகள், பொம்மைகள் தயாரிப்பிலும், மருத்துவமனைகளிலும் பயன்படுகிறது.
2.
தலையணைகள், மெத்தைகளை நிரப்பவும் பயன்படுகிறது
4.
கீழாநெல்லி
தாவரவியல் பெயர்: பில்லாந்தஸ் அமாரஸ்
பயன்படும் பகுதி: தண்டுப்பகுதி முழுவதும்
பயன்கள்
இத்தாவரத்திலிருந்து
பிரித்தெடுக்கப்பட்ட சாறு மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது
5.
பச்சைப்பயறு
தாவரவியல் பெயர்: விக்னா ரேடியேட்டா
பயன்படும் பகுதி: விதைகள்
பயன்கள்
1.
இதை வறுத்தோ, சமைத்தோ, முளைக்க வைதோ பயன்படுத்தலாம்.
2.
வறுத்துத் தோல் நீக்கப்பட்ட, உடைத்த அல்லது முழுப் பயறு பிரபலமான சிற்றுண்டியாகப் பயன்படுத்தப்படுகிறது
6.
வாழை
தாவரவியல் பெயர்: மியூசா X பாரடிசியாகா
பயன்படும் பகுதி: பழங்கள்
பயன்கள்
1.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் இன்றியமையா வைட்டமின்கள் செறிந்துள்ளன. இது நேரடியாகவோ
அல்லது சமைத்தோ உண்ண ப்படுகிறது.
2. வாழைப்பழம் பதப்படுத்தப்பட்டு, மாவாக்கி, நொதிக்கவைக்கப்பட்ட பானங்களான வாழைப்பழச்சாறு, பீர், வினிகர், பழரசம் (vine), போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது