Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | இருவிதையிலை விதை

பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் - தாவரவியல் செய்முறைகள் - இருவிதையிலை விதை | 12th Botany : Practicals

   Posted On :  10.08.2022 02:06 am

12 வது தாவரவியல் : செய்முறைகள்

இருவிதையிலை விதை

நோக்கம் : இருவிதையிலைத் தாவர விதையைக் கண்டறிதல்.

பதப்படுத்தப்பட்ட மாதிரிகள்


சோதனை எண் 6: இருவிதையிலை விதை

நோக்கம் : இருவிதையிலைத் தாவர விதையைக் கண்டறிதல்.

கொள்கை: கருவுற்ற சூல் விதை என்றழைக்கப்படும். இது கரு, கருவூண்திசு மற்றும் பாதுகாப்பு உறையைக் கொண்டுள்ளது. விதைகள் கருவூண்திசு கொண்டவையாகவோ அல்லது கருவூண்திசு அற்றவையாகவோ இருக்கலாம்.

தேவையானவை: கொண்டைக்கடலை, நீர்.

கொண்டைக்கடலை விதைகள் அல்லது பயறு விதைகளை 2 - 3 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். நீரை வடித்துவிட்டு ஈரமான பருத்தித் துணியில் 2 - 3 நாட்கள் விதைகளைப் பரப்பி வைக்கவும். முளைப்பதை உற்று நோக்கவும். முளைத்த சில விதைகளைத் தேர்ந்தெடுத்து எளிய நுண்ணோக்கியில் வைத்து உற்று நோக்கி, விதையின் பாகங்களைப் பதிவு செய்யவும்.


கண்டறியும் பண்புகள்

• கொண்டைக்கடலை பயறின் விதை இரண்டு விதையிலைகளையும் ஒரு கரு அச்சினையும் கொண்டுள்ளது.

• ஒவ்வொரு விதையும் விதை வெளியுறை (டெஸ்டா) மற்றும் விதை உள்ளுறை (டெக்மன்) எனும் இரண்டு விதையுறைகளால் சூழப்பட்டுள்ளது.

• கரு அச்சு முளை வேரையும், முளைக் குருத்தையும் கொண்டுள்ளது.

• விதையிலை குருத்து விதையிலைப் பகுதிக்கு மேலுள்ள கரு அச்சுப் பகுதி விதையிலை மேற்தண்டு என அழைக்கப்படும். இது முளைக் குருத்தில் முடிவடையும்.

• விதையிலைப் பகுதிக்குக் கீழுள்ள கரு அச்சுப் பகுதி விதையிலைக் கீழ்தண்டு என்றழைக்கப்படும். இது வேரடுன அலலது முளைவேரில் முடிவடையும்.

Tags : Fresh or Preserved Specimens - Botany Practicals பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் - தாவரவியல் செய்முறைகள்.
12th Botany : Practicals : Dicot seed Fresh or Preserved Specimens - Botany Practicals in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : செய்முறைகள் : இருவிதையிலை விதை - பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் - தாவரவியல் செய்முறைகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : செய்முறைகள்