மாதிரிகள் / புகைப்படங்கள் / விளக்கப்படங்கள் - தாவரவியல் செய்முறைகள் - தாவரத் திசு வளர்ப்பு - நாற்றுருக்களுடன் கூடிய கேலஸ் | 12th Botany : Practicals
மாதிரிகள் / புகைப்படங்கள் / விளக்கப்படங்கள்
சோதனை எண் 11: தாவரத் திசு வளர்ப்பு - நாற்றுருக்களுடன் கூடிய கேலஸ்
நோக்கம்: நாற்றுருக்களுடன்
கூடிய கேலஸை இனங்கண்டறிதல்
கொள்கை: தாவரச்
செல்கள், திசுக்கள் அல்லது உறுப்புகளைக் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் செயற்கையான வளர்ப்பு
ஊடகத்தில் வளர்த்தல் தாவரத் திசு வளர்ப்பு எனப்படும். விலங்குகளைக் காட்டிலும் தாவரங்களின்
திசு வளர்ப்பு தொழில்நுட்ப முறை எளிமையானது. பெரும்பாலான தாவரச் செல்களில் முழுஆக்குத்திறன்
காணப்படுகிறது. அதாவது செல்களிலிருந்து மீளுருவாக்கம் செய்யும் திறன்.
தேவையானவை: நாற்றுருக்களுடன்
கூடிய கேலஸ், மாதிரி / புகைப்படம் / விளக்கப்படங்கள்.
• கேலஸ் என்பது ஒழுங்கற்ற திரட்சியான வேறுபாடுறாத
திசு.
• செல் நீட்சியை ஆக்சினும், செல் பிரிதலைச்
சைட்டோகைனும் தூண்டுவதன் விளைவால் திரட்சியான செல்கள் தோற்றுவிக்கப்பட்டுக் கேலஸ் உருவாகிறது.
• கேலஸிலிருந்து வேர் மற்றும் தண்டு வேறுபடுத்தப்படுகிறது.