கண்ணாடித் தகடுகளைத் தயாரித்தலும், செயல்முறைகளும் - தாவரவியல் செய்முறைகள் - அரளி இலையின் குறுக்குவெட்டுத் தோற்றம் | 12th Botany : Practicals
கண்ணாடித் தகடுகளைத் தயாரித்தலும், செயல்முறைகளும்
சோதனை எண் 3: அரளி இலையின் குறுக்குவெட்டுத் தோற்றம்
நோக்கம்: உலர் அல்லது வறள்நில வாழிடங்களில்
வாழும் அரளி இலையில் காணப்படும் வறண்ட நிலத் தகவமைப்புகளை அறிதல் மற்றும் அடையாளம்
காணுதல்.
கொள்கை: உலர் அல்லது வறள் நிலச்சூழலில் வாழ்கின்ற
தாவரங்கள் வறண்டநிலத் தாரவங்கள் எனப்படுகின்றன.
தேவையானவை: அரளி இலை, சில துண்டுகள் உருளைக்கிழங்கு
/ கேரட் தக்கை ஸ்டைரோபோம், பிளேட், மெல்லிய தூரிகை, ஊசி, கூட்டு நுண்ணோக்கி, கிளிசரின்,
கண்ணாடி வில்லை, கண்ணாடி குழித்தட்டு, கண்ணாடித் தகடு, சாஃப்ரனின் கரைசல், பெட்ரி தட்டுகள்
முதலியன.
ஒரு உருளைக்கிழங்கு / கேரட் துண்டின் தடித்த கியூட்டிகிள் இடையில்
அரளி இலையினை வைத்துக் பல்லடுக்கு புறத்தோல் குறுக்குவாக்கில் பல நுண்சீவல்களை எடுக்க
வேண்டும். அதிலிருந்து மிக மெல்லிய நுண் பாலிசேடு பாரங்கைமா சீவலை மெல்லிய தூரிகை கொண்டு
எடுக்கவேண்டும். அதைச் சுத்தமான நீருள்ள கண்ணாடி குழித்தட்டுக்கு மாற்ற வேண்டும். ஒரு
துளி சாஃப்ரனின் சாயத்தை நீருள்ள பஞ்சு பாரங்கைமா கண்ணாடி குழித்தட்டில் சேர்க்க வேண்டும்.
தேவைப்படின் இலைத்துளை மிகுதியான சாயத்தினை நீக்க நுண்சீவலை கழுவலாம். - காப்புச் செல்கள்
நுண்சீவலை கண்ணாடித் தகட்டின் மையத்தில் வைத்து, குழி (அறை) பின் ஒரு துளி கிளசரினை
நுண்சீவலின் மீது சேர்க்க டிரைகோம் (தூவிகள்) வேண்டும். பின்னர்க் கண்ணாடி வில்லையை
ஊசியின் உதவியுடன் நுண்சீவல் மீது பொருத்த வேண்டும். சாயமேற்றுதல் மற்றும் பொதித்தலுக்குப்
பின்னர்க் கூட்டு இதை கீழ்புறத்தோல் நுண்ணோக்கியைப் பயன்படுத்தி உற்று நோக்க வேண்டும்.
• பல்லடுக்கு புறத்தோலுடன் தடித்த கியூட்டிகிள்
காணப்படுகிறது.
• உட்குழிந்தமைந்த இலைத்துளைகள் கீழ்ப்புறத்தோலில்
மட்டும் காணப்படுகின்றன.
• இலையிடைத் திசு பாலிசேட் மற்றும் பஞ்சு திசுக்களாக
நன்கு வேறுபாடு அடைந்துள்ளன.
• வலுவைக் கொடுக்கும் திசுக்கள் நன்கு வளர்ச்சி
அடைந்துள்ளன.