கணிதச் செயல்பாடு - தாவரவியல் செய்முறைகள் - மரபணு பிணைப்பு வரைபடங்கள் | 12th Botany : Practicals
கணிதச் செயல்பாடு
சோதனை எண் 18: மரபணு பிணைப்பு
வரைபடங்கள்
ஒரே குரோமோசோமிலுள்ள மரபணு இணைகளுக்கிடையேயான
மறுசேர்க்கை நிகழ்விரைவினைப் புரிந்து கொள்ளுதல்.
குரோமோசோமிலுள்ள வெவ்வேறு மரபணுகளுக்கு இடையேயான
ஒப்பு தொலைவை ஆய்வு செய்து அவற்றின் நிலையினை வரைபடமாகக் குறிப்பது மரபணு பிணைப்பு
வரைபடம் என்றழைக்கப்படும்.
வெவ்வேறு வகையான மரபணு பிணைப்பு / பிணைப்பிற்கான
வரைபடங்களை மரபணுக்களுக்கிடையே உள்ள ஒப்பு தொலைவை வைத்து உருவாக்க இயலும் மரபணுக்களுக்கிடையே
உள்ள தொலைவு, அமைவிடம் மற்றும் வரிசையை வரைபடம் மூலம் காண்பித்தல்.
கணிதச் செயல்பாடு
ஒரு குரோமோசோமில் மூன்று இணைப்பு மரபணுக்கள்
A, B மற்றும் C உள்ளன. A மற்றும் பிக்கு இடையேயான குறுக்கேற்ற விழுக்காடு (மறுசேர்க்கை
நிகழ்விரைவு) 20, B மற்றும் Cக்கு 28, A மற்றும் Cக்கு 8. பிணைப்பு வரைபடத்தில் மரபணுக்களின்
வரிசை என்ன?
கொடுக்கப்பட்டது : மூன்று பிணைப்பு மரபணுக்களுக்கு
இடையேயான குறுக்கேற்ற விழுக்காடு A - B = 20%, B - C = 28% மற்றும் A - C = 8%.
1.குறுக்கேற்ற நிகழ்விரைவு குரோமோசோமிலுள்ள
மரபணுக்களுக்கு இடையேயுள்ள ஒப்பு தொலைவிற்கு நேர்விகிதத்தில் உள்ளது.
2 அதிகக் குறுக்கேற்றம் = இரண்டு மரபணுக்களுக்கு
இடையே அதிகத் தொலைவு மற்றும் குறைந்த குறுக்கேற்றம் = இரண்டு மரபணுக்களுக்கு இடையே
குறைந்த தொலைவு மேற்கூறிய கணிதச் செயல்பாட்டில், மரபு வரைபடத்தில் மரபணுக்களின் வரிசை
B, A, C ஆகும்.
குறிப்பு: குரோமோசோமில் உள்ள பிணைப்பு மரபணுக்களின் வேறுபட்ட குறுக்கேற்ற
விழுக்காட்டின் அடிப்படையில் பிணைப்பு வரைபடம் வடிவமைக்கும் பொருட்டு மாணவர்களுக்குக்
கணக்கீடுகள் வழங்க வேண்டும். மரபணுக்களின் தொலைவைக் குறிக்கும் திறனை ஆசிரியர் செய்முறை
மூலம் செய்துக் காட்ட வேண்டும். புறத்தேர்வாளரும் இதுபோல் வேறுபட்ட தொலைவு விழுக்காடு
எண்ணிக்கை வருமாறு செயல்பாடுகளைப் பொதுத் தேர்வில் தருதல் வேண்டும்.