சோதனைகள் - தாவரவியல் செய்முறைகள் - தாவரச் செல்லிலிருந்து DNAவை பிரித்தெடுத்தல் | 12th Botany : Practicals
சோதனைகள்
சோதனை எண் 23: தாவரச் செல்லிலிருந்து DNAவை பிரித்தெடுத்தல்
DNA உயிரி அமைப்புகளில் காணப்படும் ஒரு நியூக்ளிக் அமிலமாகும்.
பொதுவாக எல்லா உயிரினங்களிலும் DNA மரபணுப் பொருளாகக் காணப்படுகிறது. கொள்கை : மறுகூட்டிணைவு
DNA தொழில்நுட்பம் பயிர் பெருக்கத்தில் DNAவை பாக்டீரியங்கள், ஈஸ்ட்கள், தாவரங்கள்
மற்றும் விலங்குகள் போன்ற பிற உயிரினங்களினுள் செலுத்தித் தாவரங்களில் மரபணு மாற்றத்தை
நிகழத்த உதவுகிறது. இத்தகைய உயிரினங்கள் மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் (GMOS) எனப்படும்.
இவ்வாறு rDNA தொழில்நுட்பம் பல்வகை மூலங்களிலிருந்து DNA வை தனிமைப்படுத்தலையும்,
DNAவின் புதிய சேர்க்கை உருவாக்கத்தையும் உள்ளடக்கியது..
பசலைக்கீரை இலை, புதிய பச்சைப்பட்டாணி விதை,
பப்பாளி இலை போன்ற தாவரப் பொருள்களிலிருந்து DNA வை பிரித்தெடுத்தல்.
தாவரப் பொருட்கள், கல்வம் மற்றும் குழவி, முகவை,
சோதைக்குழாய்கள், எத்தனால் குளோரைட், வடிதாள்.
சிறிதளவு தாவரப் பொருட்களை எடுத்துக்கொண்டு
நீர் மற்றும் சோடியம் குளோரைட் சேர்த்து அரைக்கவும். இதனைக் கரைசலாக்கி வடிகட்டவும்.
இந்த வடிதிரவத்துடன் நீர்மச் சோப்புக் கரைசல் அல்லது ஏதேனும் சோப்புக் கரைசலைச் சேர்த்துக்
கண்ணாடி குச்சி கொண்டு கலக்க வேண்டும். பின்னர்க் குளிர்ந்த எத்தனாலைச் சேர்த்துச்
சோதனைக் குழாய் தாங்கியில் சிறிது சாய்வாக வைக்க வேண்டும். அரைமணி நேரம் கழித்து நாம்
DNA நுண்ணிழைகள் வீழ்ப்படிவாகி இருப்பதைக் காணலாம். சுழற்சியின் மூலம் DNAவை பிரித்தெடுக்கலாம்.
DNA மிக மெல்லிய நுண்ணிய இழைகளாகக் காணப்படுகிறது.
இவ்வாறு தொழில்நுட்ப முறை மூலம் தாவரச் செல்
உட்கருவிலிருந்து DNA பிரித்தெடுக்கப்படுகிறது.
1.அனைத்துக் கண்ணாடிக் கலன்களும் நன்கு கழுவி,
உலர வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
2.சோதனைக்குப் பயன்படுத்தப்படும் வேதி பொருட்கள்
தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.
3.சாதாரணமான எத்தனாலைப் பயன்படுத்தும்போது, DNA வீழ்படிவு கிடைக்கும் காலம் நீட்டிப்படைகிறது.