கணிதச் செயல்பாடு - தாவரவியல் செய்முறைகள் - மெண்டலின் ஒருபண்புக் கலப்பை மெய்ப்பித்தல் | 12th Botany : Practicals
கணிதச் செயல்பாடு
சோதனை எண் 13: மெண்டலின் ஒருபண்புக் கலப்பை மெய்ப்பித்தல்.
குறிப்பு: மாணவர்கள்
இணைகளாகச் சேர்ந்து இச்சோதனை ஐ நடத்தி ஆய்வு விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
இந்த ஒருபண்புக் கலப்பு செய்முறையைப்
பொதுத்தேர்வுக்குக் கருத்தில் கொள்ளத் தேவையில்லை.
மெண்டலின் ஒரு பண்புக் கலப்பினைச் சரி பார்த்தல்.
ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புக்கூறுகளைக்
கொண்ட இரு தூயகால்வழி பெற்றோர்களைக் கலப்பு செய்யும் போது முதல் மகவுச்சந்ததிகள் அனைத்தும்
ஒரே புறத்தோற்றப் பண்பினைக் கொண்டிருக்கும். அதாவது இரு பெற்றோர்களில் ஏதேனும் ஒரு
பெற்றோரின் பண்பு. இதில் வெளிப்படும் புறத்தோற்றப் பண்பினை ஓங்கு பண்பு என்றும், வெளிப்படாத
பண்பு ஒடுங்கு பண்பு என்றும் அழைக்கப்படுகிறது. முதலாம் மகவுச் சந்ததிக்குள் கலப்பு
செய்யும் போது உருவாகும் இரண்டாம் மகவுச் சந்ததியில் 3:1 என்ற விகிதத்தில் ஓங்குபண்பு
மற்றும் ஒடுங்குபண்பு வெளிப்படுகிறது (3/4 : 1/4 of 75% : 25%) ஒடுங்கு புறத்தோற்றப்
பண்பு இரண்டாம் மரபுச்சந்ததியில் மீண்டும் தோற்றுவிக்கப்படுவதன் மூலம் மெண்டலின் ஒரு
பண்புக் கலப்பைச் சரிபார்க்கலாம்.
தேவையானவை:
64 மஞ்சள் மற்றும் 64 பச்சை பாசி மணிகள். அனைத்தும்
ஒரே மாதியான அளவு மற்றும் வடிவத்தைக் கொண்டவையாக இருக்க வேண்டும். (பாசி மணிகள் கிடைக்காத
பட்சத்தில் பட்டாணி விதைகளை நிறமேற்றி உபயோகிக்கலாம்), குவளைகள், பெட்ரித் தட்டு, கைக்குட்டை
செய்முறை:
மாணவர்கள் இணையாகச் சேர்ந்து இவ்வாய்வை மேற்கொள்ளல்
வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள படிநிலைகளைக் கவனமாகப் பின்பற்றவும் :
1. ஆண், பெண் இனச்செல்களைக் குறிக்கும் வகையில்
64 மஞ்சள் பாசி மணிகளை (Y) ஒரு குவளையிலும், 64 பச்சை பாசிமணிகளை (y) மற்றொரு குவளையிலும்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. ஒவ்வொரு குவளையிலிருந்தும் ஒரு பாசிமணியை
எடுத்து உனக்கு முன்னர் விரிக்கப்பட்டுள்ள கைக்குட்டையில் ஒன்றாகச் சேர்த்து வைக்கவும்
(இது கருவுறுதலைக் குறிக்கிறது)
3. முன்னர்ச் செய்ததைப் போன்றே தொடர்ந்து பாசிமணிகளை
எடுத்து இணை சேர்த்து வைக்கவும். இதன்மூலம் 64 இணை பாசி மணிகள் பெறப்பட்டு 64 மாற்று
பண்பிணைவைக் கொண்ட முதலாம் மகவுச்சந்ததிகள் கிடைக்கின்றன.
4. 32 முதலாம் மகவுச்சந்ததி பாசிமணிகளை ஒரு
குவளையிலும், மீதி 32 முதலாம் மகவுச்சந்ததி பாசிமணிகளை மற்றொரு குவளையிலும் இட வேண்டும்
(முதலாம் மகவுச்சந்ததியின் ஆண் மற்றும் பெண் ஆகும்)
5. இரண்டாம் மகவுச்சந்ததிகளைப் பெற மாணவர்கள்
கண்களை மூடிக்கொண்டு ஆண், பெண் எனக் குறிப்பிடப்பட்ட குவளையிலுள்ள பாசிமணிகளை ஒவ்வொன்றாக
எடுத்து இணை சேர்க்க வேண்டும். இச்செயல்முறையில் 64 இரண்டாம் மகவுச்சந்ததிகள் கிடைக்கும்
வரை தொடரவும்.
6. ஒவ்வொரு இணையின் மரபணுவகையத்தை
(YYorYyor yy) அதற்கான புறத்தோற்ற வகையத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும்.
7. அனைத்துத் தரவுகளையும் கணக்கிட்டு மரபணு
வகையம் மற்றும் புறத்தோற்ற வகைய விகிதங்களைக் கண்டறியவும்.
காண்பன:
முதலாம் மகவுச்சந்ததி கலப்புற்று இரண்டாம் மகவுச்சந்ததிகளை ஒருங்கே பெற்று ஒவ்வோர் முதலாம் மகவுச்சந்ததியும் இருவகை கேமீட்களை 50% ஓங்கு அல்லீல்கள் மற்றும் 50% ஒடுங்கு அல்லீல்களை உற்பத்தி செய்யும். இவ்வகை இனச்செல்கள் இயைபிலாக் கருவுறுதலின் போது இரண்டாம் மகவுச்சந்ததிகளை உருவாக்கும். கேமீட்களின் கலப்பு வாய்ப்புகளால் புறத்தோற்றத்தைக் கீழ்கண்டவாறு வெளிப்படுத்தும். இவற்றின் விகிதாச்சாரம் ஓங்குதன்மை புறத்தோற்ற வகையம் YY+Yy = மஞ்சள் மற்றும் ஒடுங்கிய புறத்தோற்ற வகையம் yy = பச்சை . இது 3 : 1 அல்லது 75% : 25% விகிதமாகும்
. 3 : 1 என்ற விகிதம் இரண்டாம்
மகவுச்சந்ததியின் கலப்புயிரிகள் அல்லது மாற்றுப்பண்பிணைவு முதல் மகவுச்சந்ததியின் இரு
மாறுபட்ட காரணிகள் அல்லது ஓங்கு மற்றும் ஒடுங்கு அல்லீல் வகையினதாகும். இக்காரணிகள்
நீண்ட நாட்களாக ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும். ஆனால் ஒன்றோடொன்று கலப்புறுவதில்லை.
அவை இனச்செல்லாக்கத்தின் போது தனித்துப்பிரிந்து ஒரே ஒரு அல்லீலை மட்டும் பெற்றுள்ளன.
அது ஓங்குதன்மையாகவோ அல்லது ஒடுங்குதன்மையாகவோ இருக்கலாம்.
1. பிழைகளைத் தவிர்க்க அதிக எண்ணிக்கையிலான
விதைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
2. வேறுபட்ட பண்புகள் கூறுகளை கவனமாக உற்று
நோக்க வேண்டும்.