தாவரவியல - ரிஸினஸ் கம்யூனிஸ் (ஆமணக்கு) கலைச்சொற்களால் விளக்கம். | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany
ரிஸினஸ் கம்யூனிஸ் (ஆமணக்கு) கலைச்சொற்களால் விளக்கம்.
வளரியல்பு: உயரமான பல பருவப் புதர்ச் செடி.
வேர்: கிளைத்த ஆணிவேர்த் தொகுப்பு.
தண்டு: தரைமேல் தண்டு, நிமிர்ந்தது, உருளையானது, கிளைகள் உள்ளீடற்றவை. அடித்தண்டு கடினத் தன்மையுடையது வழவழப்பானது.
இலை: தனி இலை, இலைக்காம்புடையது, இலையடிச் செதிலற்றது. மாற்றிலைடுக்கமைவு, அகலமானது, அங்கைவடிவ மடல்களையுடையது, பொதுவாக 7 முதல் 9 மடல்களையுடையது. பற்கள் போன்ற விளிம்புடையது. அங்கைவடிவ விரி வலைப்பின்னல் நரம்பமைவு உடையது.
மஞ்சரி: நுனியில் காணப்படும் கூட்டு ரசீம் வகை.
ஆண் மலர்: பூவடிச்செதிலுடையவை, பூக்காம்புச் செதிலற்றவை, பூக்காம்புடையவை, ஆரச்சீருடையவை, முழுமையற்றவை.
பூவிதழ் வட்டம்: பூவிதழ்கள் 5, தனித்தவை, ஒரு வரிசையில் அமைந்துள்ளன. பசுமையானது, தொடு இதழ் அமைவில் இணைந்த இதழ்கள், ஒற்றைப் பூவிதழ் மலரின் அச்சுநோக்கிக் காணப்படும்.
மகரந்தத்தாள் வட்டம்: மகரந்தத்தாள்கள் எண்ணற்றவை மகரந்தத்தாள்கள் பல கிளைகளுற்று காணப்படுகின்றன. கோளவடிவ, கீழிணைந்த மகரந்தப்பைகள்.
சூலக வட்டம்: பொதுவாக இனப்பெருக்கத் தன்மையற்ற சூலகம் காணப்படும்.
பெண் மலர்: பூவடிச் செதில் உடையவை, பூக்காம்புச் செதிலற்றவை, பூக்காம்புடையவை, பெண்மலர்கள் (14 நாட்கள் மலர்ந்திருக்கும்) மஞ்சரியின் நுனிப்பகுதியில் அமைந்துள்ளன. ஆரச்சீருடையவை, முழுமையற்றவை, மேல்மட்டச் சூலகப்பையுடையவை.
பூவிதழ் வட்டம்: பூவிதழ்கள் 3, தனித்த பூவிதழ்கள் பசுமையானவை, தொடு இதழ் அமைவுடையவை.
மகரந்தத்தாள் வட்டம்: இனப்பெருக்கத் தன்மையற்ற மகரந்தத்தாள் (Staminode) காணப்படும்.
சூலக வட்டம்: மூன்று சூலக இலைகள் உள்ளன. இணைந்த சூலக இலைகள், மேல்மட்டச் சூலகப்பையுடையவை, தெளிவான மூன்று மடல்களையுடையது, மூன்று சூலறைகளையுடையது. சூலகத்தைச் சுற்றிலும் முள்போன்ற வளரிகள் காணப்படுகிறது. ஒவ்வொரு சூலறையிலும் ஒரு சூல் வீதம் அச்சு சூல் ஒட்டுமுறையில் சூல்கள் அமைந்துள்ளன. சூலகத் தண்டு 3, சூலக முடி இருகிளைகளுடன் தூவிகளையுடையது.
கனி: மூவறை பிரிகனி, முள்போன்ற வளரிகளையுடையது, கனி பிளவுற்று ஒற்றை விதையைக் கொண்டமூன்று காக்கஸ்களாகப் பிரியும்.
விதை: கருவூண் உடையது. ரிஸினஸ் விதையில் விதைத்துளை குமிழ்போன்ற விதைமுண்டு ஒன்றை உருவாக்கி, தற்காலிகமாக நீரை உறிஞ்சி வைத்துக் கொண்டு விதைமுளைத்தலுக்கு உதவுகின்றன.
மலர் வாய்ப்பாடு
ஆண்மலர்:
பெண்மலர்: