வகைப்பாட்டு நிலை, பொதுப்பண்புகள், மலர் சூத்திரம், பொருளாதார முக்கியத்துவம், - குடும்பம் அபோசினேசி (பால் களைச்செடி குடும்பம்) | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany
குடும்பம்
அபோசினேசி (பால் களைச்செடி குடும்பம்) (குறிப்பு: APG
வகைப்பாட்டடின்படி ஆஸ்கிளபியடேசி குடும்பம் அபோசினேசி குடும்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)
வகைப்பாட்டு
நிலை
பொதுப்பண்புகள்:
பரவல்: இக்குடும்பம் 345 பேரினங்களையும் 4675 சிற்றினங்களையும்
கொண்டது. பெரும்பாலும் வெப்ப, மித வெப்பப் பகுதிகளில் மிகுதியாகக் காணப்படுகின்றன.
ஒரு சில சிற்றினங்கள் மிக வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன.
வளரியல்பு: சிறுசெடி (கேதரான்தஸ்)
புதர்ச்செடி (நீரியம்), மரம் (அல்ஸ்டோனியா),
கட்டைத்தன்மையுடைய பின்னுக்கொடி (அலமாண்டா),
சதைப்பற்றுள்ளவை (அடினியம்), பெரும்பாலும்
பால் போன்ற திரவத்தினைக் கொண்ட புதர்ச்செடி.
வேர்: கிளைத்த ஆணி வேர்த்தொகுப்பு
தண்டு: சில பேரினங்களில் தண்டு சதைப்பற்றுள்ளது. (ஸ்டெபிலியா கராலுமா spp), பொதுவாகத் தண்டு
நிமிர்ந்தது, திடமானது, கிளைத்தது, வழவழப்பானது. அரிதாகக் குழாய் வடிவம் போன்றது, தடித்தது.
இலைகள்: இலையடிச்செதில் அற்றவை, குறுக்கு மறுக்கு எதிரிலையடுக்கமைவு
(கலோட்ரோபிஸ்) மாற்றிலையடுக்கமைவு (தெவிஷியா) அல்லது மூவிலைடுக்கமைவு (நீரியம்), முழுமையானது, அரிதாக இலையடிச்செதில்
உள்ளது (டேபர்னே மான்டனா).
மஞ்சரி: கிளைத்த ரெசீம் (பானிக்கிள்), இருபாதகிளைத்த சைம் (டைக்கேஷியம்), அம்பெல் (ஆஸ்கிளிபியாஸ்),
ரெசிம் அல்லது இலைக்கோணத்தில் இரு மலர்கள் கொண்ட கொத்துகளாகக்
காணப்படும் (கேத்தராந்தஸ்).
மலர்கள்: பூவடிச் செதிலுடையது, பூக்காம்புச்
செதிலுடையது, மலர்க்காம்புடையது, முழுமையானது, இருபால்தன்மைக் கொண்டது, ஆரச்சீருடையது
அல்லது இருபக்கச்சீருடையது
(செரோபீஜியா)
இரு பூவிதழ் அடுக்குடையது,
ஐந்தங்க மலர், சூலக மேல் மலர் ஆனால் அரிதாகச் சூலகஞ்சூழ்
மலர் (பெரிகைனஸ்) அல்லது சூலகக் கீழ்மலர்.
புல்லி வட்டம்: புல்லிகள் 5, இணைந்த புல்லிகள்
கூடிய மடல்களையுடையது, தொடுஇதழ் அல்லது குவின்கன்ஷியல் இதழமைவு கொண்டது (தெவிஷியா), தனிப் புல்லி மலரின் அச்சுநோக்கிக்
காணப்படுகிறது.
அல்லி வட்டம்: அல்லிகள் 5, இணைந்த அல்லிகள்,
குழாய் போன்றோ, அல்லது புனல் வடிவத்திலோ காணப்படும். திருகிதழமைவு, அரிதாகத்
தொடு இதழமைவு. அல்லிக் குழலின் உட்புறத்திலோ அல்லது வாய்ப்பகுதியிலோ பல உரோமவளரிகள்
காணப்படுகின்றன. இவற்றிற்கு ’கரோனா’ என்று பெயர்.
மகரந்தத்தாள்
வட்டம்: மகரந்தத்தாள்கள் 5,
அல்லி இதழ்களுக்கு இடையில் அமைந்தவை, ஆஸ்கிளபியாஸ் தாவரத்தில் மகரந்தத்தாள் சூல்தண்டுடன் ஒட்டி வளர்கிறது.
இது பெண்- ஆணக காம்பிணைவு
எனப்படும். ஒவ்வொரு மகரந்த அறையிலும் உள்ள மகரந்தத்துகள்கள் ஒன்றோடொன்று மெழுகு போன்ற பொருளால் இணைந்து பெருந்திரளாக மாறுகிறது. இதற்கு மகரந்தத்திரள் என்று பெயர். ஒவ்வொரு மகரந்தப்பையின் வலதுப் பக்கம் உள்ள பொலினியம் இடது பக்கப் பொலினியத்தின் அருகில்
உள்ள மகரந்தப்பையுடள் வளரி
போன்ற ஏதுவாக்கி
உதவியால் இணைந்துள்ளது. ஏதுவாக்கிக் கிளை ஒரு வகை சுரப்பியுடன் கூடிய இணைப்பமைவுடன்
இணைந்துள்ளது. மகரந்தப்பை
இருமடல்களையுடையது. அடி இணைந்தவை அம்பு வடிவம்
கொண்டவை, உள்நோக்கியவை, நீள்வாக்கில் வெடிப்பவை, சிலசமயம்
முடிபோன்ற வளரிகள் (நீரியம்) மகரந்தப்பையின் அறைகளின் மேல் காணப்படுகின்றது.
சூலகவட்டம்: இரு சூலக இலைகளையுடையது சூலிலைகள்
மேல்பகுதியில் இணைந்துள்ளன. மேல்மட்டச் சூலகப்பை ஒன்று அல்லது இரண்டு சூலறைகளில்
இரண்டு முதல் பல சூல்கள் ஒவ்வொறு அறையிலும் விளிம்பு சூல் ஒட்டு முறையில் அமைந்துள்ளது.
சூல்தண்டு ஒன்று, தனித்தது. சூல்முடி தடித்து, பெருத்த இரு மடல்களுடன் காணப்படுகிறது.
சூலகத்தின் அடிப்பகுதியைச்
சுற்றித் தட்டுவடிவில் தேன்சுரப்பிகள் காணப்படுகின்றன
(கேதரான்தஸ்).
கனி: பலவகைக் கனிகள் காணப்படுகின்றன. சதைக்கனி
(லேண்டோல்ஃபியா) உள்ஒட்டுசதைக்கனி (செர்பிரா), ஒருபுறவெடிகனி (ஆஸ்கிளிபியாஸ்), வெடிகனி
(அலமாண்டா)
விதை: கருவூண் உடையது, கிரீடம் போன்ற அமைப்பு
கொண்ட வளரிகளைக் கொண்டுள்ளது.
கேத்தராந்தஸ்
ரோசியஸ் கலைச்சொற்களால் விளக்கம்
வளரியல்பு: பால்போன்ற லேட்டக்ஸ் கொண்ட சிறுசெடி.
வேர்: கிளைத்த ஆணிவேர்த் தொகுப்பு.
தண்டு: நிலத்தின் மேல் காணப்படும், நிமிர்ந்தது,
உருண்டையானது, சிவந்த பச்சை நிறமுடையது, வழவழப்பானது மற்றும் கிளைத்த தொகுப்பாகக்
காணப்படுகிறது.
இலைகள்: தனித்தவை, குறுக்கு மறுக்கு மாற்றிலையமைவு,
இலையடிச் செதில்களற்றது, சிறுகாம்புடையது அல்லது காம்புடையது. நீள்வட்ட வடிவம்-முட்டை
வடிவம், கூர்நுனி கொண்ட இலைகள், முழுமையானது, ஒரு நடுநரம்புடன் வலைப்பின்னல்
நரம்பமைப்புடையது.
மஞ்சரி: கோணத்தில் இருமலர்களை ஜோடியாகக்
கொண்ட சைமோஸ் மஞ்சரி.
மலர்: பூவடிச்செதிலற்றது, பூக்காம்புச் செதிலற்றது,
சிறுகாம்புடையது, முழுமையானது, இருபால்தன்மை கொண்டது. இரு பூவிதழ் அடுக்குடையது,
ஆரச்சீருடையது. சூலக மேல் மலர், ஐந்தங்கமலர், ரோஜா நிற ஊதா, வெண்மை அல்லது இளஞ்சிவப்பு
நிறத்தில் காணப்படுகிறது.
புல்லி வட்டம்: புல்லிகள் 5, இலேசாக இணைந்த புல்லிகள்,
பசுமையானது, தொடுஇதழமைவுடையது.
அல்லிவட்டம்: அல்லிகள் 5, இணைந்த அல்லிகள்,
அல்லிக்குழலின் தொண்டைப் பகுதியில் பல உரோமவளரிகள் காணப்படுகின்றன.
இதற்குக் கரோனா என்று பெயர். திருகிதழமைவில் உள்ளது.
மகரந்தத்தாள்
வட்டம்: மகரந்தத்தாள்கள் 5, தனித்தவை,
அல்லிஒட்டியவை, மகரந்தக்கம்பிகள் அல்லி குழலின் வாய்ப்பகுதியில் ஒட்டிக்காணப்படுகிறது.
மகரந்தக்கம்பி இழை போன்றது, குட்டையானது, மகரந்தப்பை அம்பு முனை
போன்றது, இரு மடல்களுடையது, மேற்புறம் இணைந்தது. உள்நோக்கியது.
சூலகவட்டம்: இருசூலிலைகளுடையது. இணையாத
சூலிலைகள், மேற்மட்ட சூலகப்பை, ஒரு சூலக அறையுடையது, பல
சூல்கள் விளிம்புசூல் ஒட்டு முறையில் அமைந்துள்ளன. தனித்த சூலகத் தண்டு மற்றும்
சூலக முடி, இரண்டு செதில் போன்ற மது சுரப்பிகள் சூலகத்தின்
மேற்புறமும் கீழ்ப்புறமும்
பக்கத்திற்கு ஒன்றாக அமைந்து காணப்படுகிறது.
கனி: ஓர் இணை நீண்ட ஒருபுறவெடிகனி.
மலர் சூத்திரம்:
அப்போசினேசி குடும்பத்தின்
பொருளாதார முக்கியத்துவம்