Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | தாவரவியல் தோட்டங்கள்

தாவரவியல் - தாவரவியல் தோட்டங்கள் | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany

   Posted On :  06.07.2022 07:22 am

11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்

தாவரவியல் தோட்டங்கள்

உண்மையில் அனைத்துத்தோட்டங்களும் தாவரவியல் தோட்டங்களாகாது. தாவரங்கள் பல நிலைகளில் பல வகைகளில் அமைந்த இடத்தைக் குறிப்பது தாவரயியல் தோட்டம் ஆகும்.

தாவரவியல் தோட்டங்கள் (Botanical Gardens)

உண்மையில் அனைத்துத்தோட்டங்களும் தாவரவியல் தோட்டங்களாகாது. தாவரங்கள் பல நிலைகளில் பல வகைகளில் அமைந்த இடத்தைக் குறிப்பது தாவரயியல் தோட்டம் ஆகும். தோட்டங்களில் அலங்காரத் தாவரங்கள் அழகு, வாசனை, மதம் மற்றும் கௌரவத்திற்காக வளர்க்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக மொசப்படோமியாவில் உள்ள புகழ்மிக்க "பாபிலோன்" தொங்கும் தோட்டம் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். ஏத்தன்ஸ் நகரில் தியோபிராஸ்டஸ் அவர்கள் முதன் முதலில் அறிவியல் மற்றும் கல்வி பயிலத் தன் பொது விரிவுரையாற்றும் கூடத்தில் தோட்டத்தை அமைத்தார்.

1544 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டிலுள்ள பைசா என்னும் இடத்தில் தாவரவியல் பேராசியராகப் பணிபுரிந்த லூகா கினி (Luca Ghini - 1490-1556) என்பவர் முதல் நவீன தாவரவியல் தோட்டத்தை நிறுவினார். கள்ளி வகைகள், சதைப்பற்றுள்ள தாவரங்கள், பசுமை இல்லம், நிழலகம், வெப்ப மண்டல, குளிர் மற்றும் அயல்நாட்டு தாவரவகைகள் எனச் சிறப்புத்தன்மை பெற்ற தாவரங்கள், தாவரத் தோட்டங்களில் அமைந்துள்ளன. உலகலளவில் 1800 - க்கும் மேற்பட்ட தாவரதோட்டங்களும், மரத்தோட்டங்களும் காணப்படுகின்றன.



தாவரத் தோட்டங்களின் பங்களிப்பு (Role of Botanical Garden): தாவரப் தோட்டங்கள் கீழ்க்கண்ட விதங்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

1. தாவரத் தோட்டங்களில் உள்ள அலங்கார மற்றும் அழகு மிகைத்தாவரங்கள் பெருமளவில் பார்வையாளர்களைக் கவர்ந்து ஈர்க்கின்றன. எடுத்துக்காட்டு கொல்கத்தாவின் இந்தியத் தாவரவியல் தோட்டத்திலுள்ள புகழ்பெற்ற பெரிய ஆலமரம் (பைகஸ் பெங்காலென்சிஸ் - Ficus benghalensis).

2. தாவரத் தோட்டங்களில் பெருமளவில் காணப்படும் தாவரச் சிற்றினங்கள். தாவரவியல் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

3. சுய-வழிகற்பதற்கும் செயல்முறை ஆராய்ச்சிக்கு உதவுவதற்கும் தாவரத் தோட்டங்களில் உள்ள பல்வகைத்தாவரங்கள் பயன்படுகின்றன.

4. தாவர உள்ளமைப்பியல், கருவியல், தாவர வேதியியல், செல்லியல், வாழ்வியல், சூழ்நிலை உயிரியல் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒருங்கிணைத்துப் பயில ஆதாரமாகத் தோட்டங்கள் விளங்குகின்றன.

5. உயிரி பன்மத் தன்மை பற்றி மட்டுமின்றி அரிதான மற்றும் அழியும், நிலையிலுள்ள தாவரங்களைப் பாதுகாக்கும் மையமாகத் தாவரத் தோட்டங்கள் விளங்குகின்றன.

6. ஆண்டு முழுவதும் கிடைக்கக் கூடிய தாவரச் சிற்றினங்கள் மற்றும் இலவச விதை பரிமாற்றம் தொடர்பான அறிக்கையை அளிக்க உதவுகின்றன.

7. தாவரங்களின் இனப்பெருக்க முறைகள், பொது மக்களுக்கு விற்கப்படும் தாவரங்கள் பற்றிய தகவல்களைத் தாவரத் தோட்டங்கள் வழங்குகின்றன.


அரச (அ) ராயல் தாவரவியல் தோட்டம் - கியூ - இங்கிலாந்து

உலகிலேயே மிகப் பெரிய தாவரவியல் தோட்டம் இங்கிலாந்து நாட்டில் கியூ என்னுமிடத்தில் அமைந்துள்ள அரச (அ) ராயல் தாவரவியல் தோட்டமாகும். இது 1760ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமாக 1841ல் திறக்கப்பட்டது. நீர் வாழ் தாவரத்தோட்டம், 1400 ஆர்போரிய (பெருமரத்தொகுப்பு) மரங்கள், போன்சாய் (Bonsai) தொகுப்பு, கள்ளி வகைகளின் தொகுப்பு. கார்னிவோரஸ் தாவரத் தொகுப்பு (ஊன் உண்ணிதாவரத்தொகுப்புக்களையும் கொண்டுள்ளன. 



Tags : Botany தாவரவியல்.
11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany : Botanical Gardens Botany in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் : தாவரவியல் தோட்டங்கள் - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்