தாவரவியல் - இனப்பரிணாம வழி வகைப்பாட்டு முறை - வகைப்பாட்டியல் | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany
இனப்பரிணாம வழி வகைப்பாட்டு முறை: (Phylogenetic system of classification)
சார்லஸ் டார்வின் 1859-ல் வெளியிட்ட ”சிற்றினங்களின் தோற்றம்” எனும் நூல் இனப் பரிணாம உறவுவின் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்த ஒரு தூண்டுதலாக அமைந்தது.
I. அடால்ஃப் எங்ளர் மற்றும் கார்ல் A பிரான்டில் வகைப்பாடு
ஆரம்பகால முழுத் தாவர உலகின் பரிணாம வகைப்பாடு இரண்டு
ஜெர்மனிய தாவரவியலாளர்களாகிய அடால்ஃப் எங்ளர்
(1844 - 1930) மற்றும் கார்ல் ஏ பிரான்டில்
(1849 – 1893) ஆகியோரால் "டி நேச்சர்லிக்கன்
ஃபிளான்ஸன் ஃபேமிலியன்"
(1887 - 1915) எனும் நூலில் 23 வகுப்பு தொகுதிகளாக வெளியிடப்பட்டது.
இந்த வகைப்பாட்டில் தாவர உலகம் 13 இருந்தது. உலகின்
சில உலர்தாவர சேமிப்பு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் 11 பிரிவுகளில்
தாலோஃபைட்டுகளும், 12-வது பிரிவில் எம்பிரியோபைட்டா
ஏசைபனோகேமாவும் (கருக்கள் கொண்ட, மகரந்தக் குழல்கள் அற்ற தாவரங்கள், பிரையோஃபைட்டுகள்
மற்றும் டெரிடோஃபைட்டுகள்), 13வது பிரிவில் எம்பிரியோஃபைட்டா
சைபனோகேமாவும் (கருக்கள், மகரந்தக் குழல்கள்
கொண்ட தாவரங்கள்) நுண்ணிய நேரடி ஆய்விற்கு உட்படுத்தி வகைப்படுத்தப்பட்டிருந்தன.
II. ஆர்தர் கிரான்கிவிஸ்ட் வகைப்பாட்டு முறை
ஆர்தர் கிரான்கிவிஸ்ட் (1919 - 1992) ஒரு சிறந்த அமெரிக்க வகைப்பாட்டியலாளர். இவர் உள்ளமைப்பியல், பரிணாம முக்கியத்துவம் வாய்ந்த தாவர வேதிப்பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையிலான பூக்கும் தாவரங்களின் பரிணாம வகைப்பாட்டு முறையை முன்மொழிந்தார். 1968-ம் ஆண்டில் "பூக்கும் தாவரங்களின் பரிணாமம் மற்றும் வகைப்பாடு" என்ற தலைப்பிலமைந்த புத்தகத்தில் அவர் தனது வகைப்பாட்டை அளித்தார். அவரது வகைப்பாடு சமகால வகைப்பாட்டியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பரிணாமக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது.
கிரான்கிவிஸ்ட் பூக்கும் தாவரங்களை இரண்டு முக்கிய
வகுப்புகளாக மேக்னோலியாப்சிடா (= இருவிதையிலைத்
தாவரங்கள்) மற்றும் லிலியாப்சிடா (= ஒருவிதையிலை
தாவரங்கள்) என வகைப்படுத்தியுள்ளார். மக்னோலியாப்சிடா 6 துணை வகுப்புகள், 64 துறைகள்,
320 குடும்பங்கள், 1,65,000 சிற்றினங்கள் கொண்டது. லிலியாப்ஸிடா 5 துணை வகுப்புகள்,
19 துறைகள், 66 குடும்பங்கள் மற்றும் சுமார் 50,000 சிற்றினங்கள் கொண்டது.
கிரான்கிவிஸ்ட் வகைப்பாடு நீண்டகாலம் தொடர்ந்து நிலைத்திருக்க முடியவில்லை. ஏனென்றால் அதன் இனப்பரிணாம உறவுமுறை அடிப்படை காரணமாகத்தாவரங்களை அடையாளம் காண்பதற்கும், உலர்தாவர நிலையங்களில் பின்பற்றுவதற்கும் பயனுள்ளதாக இல்லை.