தாவரவியல் - வகைப்பாட்டியலும் குழுமப்பரிணாம வகைப்பாட்டியலும் | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany
வகைப்பாட்டியலும்
குழுமப்பரிணாம வகைப்பாட்டியலும்
வகைப்பாட்டியல் என்ற சொல், இரண்டு கிரேக்கச் சொற்களான
"டாக்ஸிஸ்" (வரிசைப்படுத்துதல்),
"நாமோஸ்" (விதிகள்) என்ற சொற்களிலிருந்து
தருவிக்கப்பட்டது. டேவிசும் ஹேவுட்டும் (1963) கூறியபடி , வகைப்பாட்டியல் என்பது அடிப்படை
கொள்கைகள், விதிகள், செய்முறைகள் அடங்கிய ஒரு வகைப்படுத்தும் அறிவியல் ஆகும்.
குழுமப்பரிணாம வகைப்பாட்டியல் என்ற சொல் பழங்காலங்களில்
பயன்படுத்தப்பட்ட போதிலும், 20ஆம் நூற்றாண்டின் கடைசியில் தான் ஒரு முறையான பிரிவாக
அறியப்பட்டது. 1961-ஆம் ஆண்டு சிம்ப்சன் என்ற அறிஞர் குழுமப்பரிணாம்
வகைப்பாட்டியல் என்பது பல்வேறு வகையான உயிரினங்களையும் அவற்றிற்கு இடையேயான உறவுமுறைகளையும்
படித்தறியும் அறிவியல் பிரிவு என்று கூறினார். எனவே வகைப்பாட்டியலும், குழுமப்பரிணாம
வகைப்பாட்டியலும் மாற்றுச்சொற்களாகப் பயன்படுத்திய போதிலும் அவை இரண்டிற்கும் அடிப்படையில்
சில வேறுபாடுகள் உள்ளன.