Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | கிளைட்டோரியா டெர்னேஷியா கலைச்சொற்களால் விளக்கம்
   Posted On :  21.03.2022 11:47 pm

11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்

கிளைட்டோரியா டெர்னேஷியா கலைச்சொற்களால் விளக்கம்

மஞ்சரி: கோண மலர்.


கிளைட்டோரியா டெர்னேஷியா

கலைச்சொற்களால் விளக்கம்

வளரியல்பு: பின்னுக்கொடி.

வேர்: ஆணிவேர்த் தொகுப்பு கிளைத்தது மற்றும் வேர்முண்டுகளுடன் கூடியது.

தண்டு : நிலத்தின் மேல் காணப்படும் நலிந்த தண்டுடைய பின்னுக்கொடி.

இலை : ஒற்றைப்படை ஒருமடிக்கூட்டிலை, மாற்றிலையடுக்கமைவு, இலையடிச் செதிலுடையது,

வலைப்பின்னல் நரம்பமைப்புடையது. சிற்றிலைகள் காம்புடையவை. இலைக்காம்பும் சிற்றிலைக்காம்பும்

அதைப்புடையன.

மஞ்சரி: கோண மலர்.

மலர்: பூவடிச் செதிலுடையது, பூக்காம்புச் செதிலுடையது. பூக்காம்புச் செதில்கள் அளவில் பெரியது. மலர்க்காம்புடையது, இரு பூவிதழடுக்குடையது, முழுமையானது, இருபால் மலர், ஐந்தங்கமலர், இருபக்கச்சீருடையது மற்றும் மேல்மட்டச் சூலகப்பையுடையது.

புல்லிவட்டம் : புல்லிகள் 5, இணைந்த புல்லிகள் பசுமையானது, தொடு இதழமைவில் அமைந்துள்ளது. தனிப்புல்லி மலரின் அச்சு நோக்கிக் காணப்படும்.

அல்லிவட்டம்: அல்லிகள் 5, வெண்மை அல்லது நீல நிறத்தாலானது. தனித்தது, ஒழுங்கற்றவை, வண்ணத்துப்பூச்சிவடிவில் அமைந்தவை, இறங்குதழுவு இதழமைவில் உள்ளன.

மகரந்தத்தாள் வட்டம் : மகரந்தத்தாள்கள் 10, இருகற்றைகளில் அமைந்தது (9) +1, ஒன்பது மகரந்தக் கம்பிகள் இணைந்து ஒரு கற்றையாகவும், 10-வது மகரந்தக்கம்பி தனித்து ஒரு கற்றையாகவும் உள்ளன. மகரந்தப்பை ஈரறையுடையது, தாள் அடி இணைந்தவை, நீளவாக்கில் உட்புறமாக வெடிப்பவை.

சூலக வட்டம்: ஒற்றைச் சூலக இலையாலானது மேல்மட்ட சூலகம், ஒரு சூலக அறை. சூல்கள் பல விளிம்பு சூல் ஒட்டு முறையில் அமைந்துள்ளன. சூலகத்தண்டு தனித்தது உள்நோக்கி வளைந்தது, சூலக முடி தூவிகளுடையது.

கனி : இருபுறவெடிகனி (legume)

விதை: சிறுநீரக வடிவிலானது, கருவூண் அற்றது. மலர் சூத்திரம்: 

11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany : Botanical description of Clitoria ternatea (Sangu pushpam) in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் : கிளைட்டோரியா டெர்னேஷியா கலைச்சொற்களால் விளக்கம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்