வகைப்பாட்டு நிலை, பொதுப் பண்புகள், மலர் சூத்திரம், பொருளாதார முக்கியத்துவம் - குடும்பம்: சொலானேசி (உருளைக்கிழங்கு குடும்பம் / நைட்ஷேட் குடும்பம்) | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany
குடும்பம்:
சொலானேசி (உருளைக்கிழங்கு குடும்பம் / நைட்ஷேட் குடும்பம்)
வகைப்பாட்டு
நிலை
பொதுப் பண்புகள்
பரவல்: சொலானேசி
குடும்பத்தில் 88 பேரினங்களும் 2,650-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் உள்ளன. சொலானம்
இக்குடும்பத்தின் பெரிய பேரினம் ஆகும். இது ஏறத்தாழ 1500 சிற்றினங்களை உள்ளடக்கியது.
இத்தாவரங்கள் உலக அளவில் பரவி இருந்தாலும் தென் அமெரிக்காவில் அதிக அளவில் காணப்படுகின்றன.
வளரியல்பு: பெரும்பாலும் ஒருபருவச் சிறுசெடிகள், புதர்ச்செடிகள்,
சிறிய மரங்கள் (சொலானம் வயலேசியம்) சிலவற்றில்
முட்களைக் கொண்ட வன்கொடிகளாகவும் (சொலானம் டிரைலொபேட்டம்)
காணப்படுகின்றன.
வேர்: கிளைத்த ஆணிவேர்த்தொகுப்பு
தண்டு: மென்மையானது அல்லது கட்டைத்தன்மை கொண்டது. நிமிர்ந்தது,
பின்னுக்கொடிகள் அல்லது ஊடுருவி வளர்பவை, கிழங்காக உருமாற்றமடைந்த தண்டு (சொலானம் டியூப்ரோசம்) முட்கள் மூடப்பட்டிருக்கும்
(சொலானம் சாந்தோகார்ப்பம்)
இலை: மாற்றிலையடுக்கமைவு, தனிஇலை, அரிதாக இறகுவடிவ கூட்டிலைகள்
(சொலானம் டீயூபரோசம் மற்றும் லைக்கோபெர்சிகான் எஸ்குலெண்டம்), இலையடிச்
செதிலற்றது எதிரிலையடுக்கமைவு, மேல் பகுதியில் துணைஎதிரிலையடுக்கமைவு காணப்படுகின்றது.
ஒரு நடுநரம்புடன் வலைப்பின்னல் நரம்பமைப்புடையது. சொலானம் சாந்தோகார்ப்பத்தில் மஞ்சள்
நிற நரம்பமைவு காணப்படுகின்றது.
மஞ்சரி: இலைக்கோண அல்லது நுனி சைம்கள் (சொலானம்) அல்லது தனிமலர் (டாட்டூரா ஸ்ட்ராமோனியம்), கோணம் விலகிய தேளுரு
(ஸ்கார்பியாய்டு) சைமோஸ் மஞ்சரியான ரைபிடியம்
(சொலானம் அமெரிக்கானம்), தனித்த இலைக்கோண
சைமோஸ் (டாட்டூரா மற்றும் நிக்கோட்டியானா), அம்பெல்லேட் சைம் (வைத்தானியா சாம்னிஃபெரா)
மலர்: பூவடிச்செதிலுடையது பூவடிச் செதிலற்றது, பூக்காம்புடையது,
இருபால் மலர், இரு பூவிதழ் அடுக்கமுடையது, ஐந்தங்கமலர் ஆரச்சீருடையது. நலிந்த இருபக்கச்சீருடையதாக
இருக்கும் ஏனென்றால் சூலக இலைகள் அச்சிற்கு நேர்க்கோட்டில் அமையாமல் சற்றுச் சாய்வாகக்
காணப்படும். சூலக மேல் மலர்.
புல்லி வட்டம்
: புல்லிகள் 5, அரிதாகப் புல்லிகள் 4 அல்லது 6, இணைந்த
புல்லிகள் தொடு இதழமைவிலுள்ளன. நிலைத்த புல்லிவட்டம் சொலானம் மெலான்ஜீனா சில சமயம்
கனி வளர்புல்லி (பைசாலிஸ்).
அல்லிவட்டம்
: அல்லிகள் 5, இணைந்த அல்லிகள் சுழல் இதழமைவு (அ) சக்கர
வடிவம் (சொலானம்), மணி வடிவம் (அட்ரோபா) அல்லது புனல் வடிவம் (பெட்டுனியா) பொதுவாகப் புல்லிவட்டத்திற்கு
எதிராக அமைந்துள்ளது. அரிதாக ஈருதடுடையது, இருபக்கச் சீருடையது (ஷைசாந்தஸ்) பொதுவாகத் தொடு இதழ் அமைவு , சில
சமயம் திருகு இதழமைவு (டாட்டூரா).
மகரந்தத்தாள்
வட்டம் : மகரந்தத்தாள் 5, அல்லி ஒட்டியவை
பொதுவாகச் சமநீளமற்ற மகரந்தக் கம்பிகளையுடையவை. ஷைசாந்தஸ் என்ற தாவரத்தில் இரண்டு இனப்பெருக்கத்தன்மையுடைய
மகரந்தத்தாள்களும் மற்ற மூன்று இனப்பெருக்கத்தன்மையற்ற மகரந்தத்தாள்களும் உள்ளன. மகரந்தப்பைகள்
இரு அறைகளையுடையவை. நீள்வாக்கில் அல்லது நுனித்துளை வழி வெடிப்பவை.
சூலக வட்டம்: இரு சூலக இலைகளுடையது, இணைந்த சூலக இலைகள். இரு சூலக
அறைகளையுடையது, சூலக இலைகள் அச்சிற்கு நேர்க்கோட்டில் அமையாமல் சற்றுச் சாய்வாகக் காணப்படும்.
மேல்மட்டச் சூலகப்பை இரு சூலக அறைகள் போலியான குறுக்குச் சுவர் உற்பத்தியாவதால் நான்கு
சூலக அறைகளைக் கொண்டு காணப்படும். ஒவ்வொரு அறையிலும் பல சூல்கள் அச்சு சூல் ஒட்டு முறையில்
காணப்படுகின்றன.
கனி : வெடிகனி (பெட்டுனியா)
அல்லது சதைக்கனி (லைக்கோபெர்சிகான் எஸ்குலண்டம்,
காப்ஸிகம், டாட்டூரா).
விதை : கருவூண் உடையது.
டாட்டூரா மெட்டல் கலைச்சொற்களால் விளக்கம்.
வளரியல்பு: பெரிய நிமிர்ந்த, பருமனான சிறு செடி
வேர்: கிளைத்த ஆணிவேர்த்தொகுப்பு
தண்டு: உள்ளீடற்றது, பசுமையானது, மென்மையானது மற்றும் மிகுந்த
மணமுடையது.
இலை : தனி இலை, மாற்றிலையமைவு, இலைக்காம்புடையது, முழுமையானது
அல்லது மடல்களையுடையது, வழவழப்பானது, இலையடிச்செதிலற்றது, ஒரு நடுநரம்புடன் வலைப்பின்னல்
நரம்பமைப்புடையது.
மஞ்சரி: தனித்த இலைக்கோண சைம்.
மலர்: மலர்கள் பெரியவை, பசுமை கலந்த வெண்மை நிறமுடையவை,
பூவடிச்செதிலுடையவை, பூக்காம்புச் செதிலற்றவை, பூக்காம்புடையவை, முழுமையானவை, இரு பூவிதழ்
வட்டங்களுடையவை, ஐந்தங்க மலர், முழுமையான மலர், ஆரச்சீருடையவை, இருபால் தன்மை உடையவை
மற்றும் சூலக மேல் மலர்.
புல்லி வட்டம்: புல்லிகள் 5, பசுமையானது தொடு இதழ் அமைவில் இணைந்த
புல்லிகள் பெரும்பான்மையான தாவரங்களில் புல்லிகள் நிலைத்த தன்மையுடையவை மற்றும் தனித்தப்புல்லி
அச்சு நோக்கிக் காணப்படுகிறது.
அல்லி வட்டம்: அல்லிகள் 5, பசுமை கலந்த வெண்மை நிறமுடையவை இணைந்த
அல்லிகள், ப்ளிகேட் (கைவிசிறி போன்ற மடிப்புடையது), திருகு இதழமைவில் இணைந்த அல்லிகள்
10 மடல்களுடன் கூடிய அகன்ற வாயினையுடையன புனல் வடிவமானவை.
மகரந்தத்தாள்
வட்டம் : மகரந்தத்தாள்கள் 5, ஒன்றுக்கொன்று
தனித்தவை, அல்லி ஒட்டியவை, அல்லி இதழ்களுக்கு இடையே அமைந்தவை, மகரந்தக் கம்பிகள் அல்லி
குழலின் மையப்பகுதியில் ஒட்டிக் காணப்படும். மகரந்தப்பை இருமடல்களையுடையவை, அடி இணைந்தவை,
நீண்ட மகரந்தக் கம்பிகள், மகரந்தப்பைகள் உட்புறமாக நீளவாக்கில் வெடிக்கக் கூடியவை.
சூலக வட்டம்: இணைந்த இரு சூலிலைகள் மேல் மட்டச் சூலகப்பை, இரு சூலக
அறைகள் போலியான அறைகுறுக்குச் சுவர் உற்பத்தியாவதால் நான்கு சூலக அறைகளைக் கொண்டு காணப்படுகின்றது.
சூலக இலைகள் அச்சிற்கு நேர்க்கோட்டில் அமையாமல் சற்றுச் சாய்வாகக் காணப்படும். சூல்கள்
பருத்த சூல் ஒட்டுத் திசுவில் அச்சு சூல் ஒட்டுமுறையிலுள்ளது.
கனி : நிலைத்த புல்லிவட்டத்துடன், நான்கு வால்வுகளுடன் வெடிக்கக்கூடிய
முட்கள் போன்ற புறவளரிகளுடன் கூடிய வெடிகனி.
விதை: கருவூண் உடையது.
மலர் சூத்திரம்:
சொலானேசி குடும்பத்தின்
பொருளாதார முக்கியத்துவம்