தாவரவியல் - மியூஸா பாரடிஸியாகா கலைச்சொற்களால் விளக்கம் | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany
மியூஸா பாரடிஸியாகா
கலைச்சொற்களால் விளக்கம்
வளரியல்பு: ஒரு காய்ப்பு பல பருவச்செடி.
வேர்: வேற்றிட சல்லி வேர்த்தொகுப்பு காணப்படுகிறது.
தண்டு: உண்மையான தண்டு தரையில் காணப்படும்.
தரைக்கு மேல் காணப்படும் கிளையற்ற, நிமிர்ந்த தண்டு போன்ற பகுதி பொய்த்தண்டாகும்.
இது நீண்ட கடினமான மற்றும் அகன்ற உறைபோன்ற பல இலையடிப் பகுதிகள்
ஒன்றையொன்று தழுவி உருவான
பொய்த்தண்டாகும். பொய்த்தண்டுக்குள்ளாக அடிப்பகுதியில்
மறைந்து காணப்படும் மைய அச்சு 'வாழைத்தண்டு' எனப்படும். மலர் உருவாகும் பருவத்தில்
இவ்வாழைத் தண்டு நீட்சியடைந்து, பொய்த்தண்டினைத் துளைத்துக் கொண்டு நுனிப்பகுதியில்
மஞ்சரியை உற்பத்தி செய்கிறது.
இலை: தனி இலை, நீண்ட உறுதியான இலைக்
காம்புடன் பெரிய இலைத்தாளையுடையது. இலைத்தாள் வட்ட நுனி
உடையது. இலையடி உறையுடையது. இலையடி செதிலற்றது. விளிம்பு வரை
நீட்சியடைந்துள்ள சிறகு இணைப்போக்கு நரம்பமைப்பு உடையது.
சுழல் இலையடுக்கமைவு கொண்டது.
மஞ்சரி: கூட்டு மடல்கதிர் மஞ்சரி. மஞ்சரியின் மலர்கள்
பெரிய, கவரும் வண்ணமுடைய,
சுழல் முறையில் அமைந்துள்ள, படகு போன்ற பூவடிச்செதில்களால்
பாதுகாக்கப்படுகின்றன. இப்பூவடிச் செதில் மடல் எனப்படும். மலர்கள் முதிர்ந்த
பின், இம்மடல்கள் பின்நோக்கிச் சுருண்டு இறுதியாக உதிர்ந்துவிடுகின்றன.
மலர்கள்: பூவடிச் செதிலுடையவை, பூக்காம்புச் செதிலற்றவை, காம்பற்றவை, மூவங்க மலர்கள் ஒருபால் அல்லது இருபால் தன்மையுடையவை. மலர்கள் இருபக்கச்சீர் உடையவை, சூலகக் கீழ் மலர்கள்.
பூவிதழ் வட்டம்: பூவிதழ் 6, அடுக்கிற்கு 3 வீதம் இரு அடுக்குகளில் (3+3) அமைந்துள்ளன. ஒத்த அடுக்குகளையுடையது, இணைந்த பூவிதழ்கள். வெளிஅடுக்கின் மூன்று பூவிதழ்களும் உள் அடுக்கில் இரு பக்கவாட்டுப் பூவிதழ்கள் தொடு இதழ் அமைவில் இணைந்து 5 பற்களை உடைய குழல் போன்ற அமைப்பு உருவாகிறது. இது கீழ் உதடு எனப்படும் உள் அடுக்கின் மேல் பக்கப் பூவிதழ் தனித்துக் காணப்படுகிறது. இது பெரிதாகவும் மற்றும் மென்மையான சவ்வு போன்றும் உள்ளது. இது சிற்றுதடு (Labellum) என அழைக்கப்படுகிறது.
மகரந்தத்தாள்
வட்டம்: மகரந்தத்தாள்கள் 6, அடுக்கிற்கு
3 வீதம் இரு அடுக்குகளில் பூவிதழ்களுக்கு எதிராக அமைந்துள்ளன.
5 மகரந்தத்தாள்கள் மட்டுமே
இனப்பெருக்கத் தன்மையுடையவை. உள் அடுக்கில் அச்சு நோக்கி
மலட்டு மகரந்தத்தாள் காணப்படுகிறது அல்லது முற்றிலும்
இல்லாமல் இருக்கும். மகரந்தப்பைகள் இரு அறைகளையுடையவை, நீள்வாக்கில்
வெடிப்பவை, மகரந்தக்கம்பி இழை போன்றது. சில ஆண் மலர்களில் மலட்டுச் சூலகம் காணப்படும்.
சூலக வட்டம்: மூன்று சூலக இலைகளையுடையவை, இணைந்தவை, நடு
சூலகம் அச்சு விலகி அமைந்துள்ளது. மூன்று சூலறைகளையுடையவை,
கீழ்மட்டச் சூலகப்பையுடையவை, பல சூல்கள் அச்சு சூல் ஒட்டு முறையில்
அமைந்துள்ளன. சூலகத் தண்டு இழை போன்றது. சூலக முடி மூன்று மடல்களை உடையது தடுப்புச்சுவர்.
கனி: நீண்ட சதைக்கனி, சாகுபடி செய்யப்படும் பெரும்பாலான வாழைகளில் விதைகள் இல்லை.
மலர் சூத்திரம்: