கேள்வி பதில்கள், தீர்வுகள் | எண்கள் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.7 | 8th Maths : Chapter 1 : Numbers
பயிற்சி 1.7
பல்வகைத் திறனறிப் பயிற்சிக் கணக்குகள்
1. ஒரு பெட்டியிலுள்ள பங்கு ஆப்பிள்களின் எடையானது 3 கி.கி 225 கிராம் எனில், ஒரு முழுப்பெட்டி ஆப்பிள்களின் எடை என்னவாக இருக்கும்?
2. மங்களம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தண்ணீர்க் குடுவையையும், அதைப்போன்று மடங்கு அதிகக் கொள்ளளவு கொண்ட மற்றொரு குடுவையையும் வாங்குகிறாள் எனில், பெரிய குடுவை எவ்வளவு லிட்டர் தண்ணீரைக் கொள்ளும்?
3. இரவி மற்றும் ஆகிய எண்களைப் பெருக்கி, இந்த பெருக்கலின் எளிய வடிவமானது எனக் கூறுகிறான். சந்துரு எளிய வடிவில் விடையானது என கூறுகிறான். யார் கூறுவது சரி? (அல்லது) இருவரும் கூறுவது சரியா? விளக்குக.
4. ஒரு அறையின் பரப்பு ச.மீ மற்றும் அதன் அகலம் மீ எனில், அதன் நீளம் என்ன?
5. 4489 செ.மீ2. பரப்பளவு கொண்ட ஒரு தலைவரின் உருவப்படமானது சதுர வடிவில் உள்ளது. மேலும் படத்தைச் சுற்றிலும் 2 செ.மீ அளவு கொண்ட மரச்சட்டம் உள்ளது எனில், மரச்சட்டத்தின் பரப்பளவு என்ன?
6. ஒரு வாழ்த்து அட்டையின் பரப்பளவு 90 செ.மீ2. எந்த இரு முழு எண்களுக்கிடையே அதன் பக்க அளவின் நீளம் இருக்கும்?
7. ஒரு சதுர டெசி மீட்டர் பரப்பு கொண்ட 225 சதுர வடிவிலான நிறத்திட்டு ஓடுகள் முறையே ஒரு சதுர வடிவிலான தாழ்வாரத்தை முழுவதுமாக நிரப்புகின்றன எனில், சதுர வடிவிலான தாழ்வாரத்தின் பக்கம் ஒவ்வொன்றின் நீளமும் என்னவாக இருக்கும்?
8. 3√ 1906624 × √ x = 3100 எனில், x ஐக் காண்க.
9. 2(m −1) + 2(m + 1) = 640 எனில், m ஐக் காண்க.
10. அறிவியல் குறியீட்டில் விடையை எழுதவும்.
ஒரு மனித இதயமானது சராசரியாக வினாடிக்கு 80 முறைத் துடிக்கிறது எனில், அது
i) ஒரு மணி நேரத்தில்
ii) ஒரு நாளில்
iii) ஓர் ஆண்டில்
iv) 100 ஆண்டுகளில் எத்தனை முறைத் துடிக்கும்?
மேற்சிந்தனைக் கணக்குகள்
11. ஒரு வரைபடத்தில், ஒரு அங்குலமானது 120 கி.மீ ஐக் குறிக்கும். நகரம் A ஆனது, B மற்றும் C ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது. மேலும், நகரம் A இலிருந்து B மற்றும் C ஆகிய இரு நகரங்கள் முறையே அங்குலம் மற்றும் அங்குலம் தொலைவுகளில் உள்ளன எனில், அவற்றுக்கிடையே உள்ள உண்மையான தொலைவினைக் காண்க.
12. பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றையும் ஓர் எடுத்துக்காட்டுடன் சரிபார்.
(i) பூச்சியமற்ற விகிதமுறு எண்களின் தொகுப்பிற்கு வகுத்தலானது அடைவுப் பண்பை நிறைவு செய்யும்.
(ii) விகிதமுறு எண்களுக்கு கழித்தலானது பரிமாற்றுப் பண்பினை நிறைவு செய்யாது.
(iii) விகிதமுறு எண்களுக்கு வகுத்தலானது சேர்ப்புப் பண்பினை நிறைவு செய்யாது.
(iv) விகிதமுறு எண்களுக்கு கழித்தலின் மீதான பெருக்கலின் பங்கீட்டு விதி உண்மையாகும். அதாவது, a (b−c) = ab − ac.
(v) இரு விகிதமுறு எண்களின் சராசரியானது அவற்றிற்கிடையில் அமையும் ஒரு விகிதமுறு எண்ணாகும்.
13. பங்கு கேழ்வரகு அடையின் எடை 120 கிராம் எனில், அதே கேழ்வரகு அடையின் பங்கின் எடை என்ன?
14. p + 2q = 18 மற்றும் pq = 40 எனில், மதிப்பைக் காண்க.
15. = 21 எனில், x ஐக் காண்க.
16. ஐக் காட்டிலும் எவ்வளவு அதிகம்?
17. 1536 படைப் பயிற்சி மாணவர்கள் சதுர வடிவில் அணிவகுப்பு செய்ய விரும்பினர். இது சாத்தியமாகுமா? சாத்தியமில்லை எனில், மேலும் எத்தனை படைப் பயிற்சி மாணவர்கள் கூடுதலாகத் தேவை?
18. √286225 இன் மதிப்பு காண்க. அதனைப் பயன்படுத்தி √2862.25 + √28.6225 ஐ கணக்கிடுக.
19. சுருக்குக: (3.769 × 105) + (4.21 × 105)
20. சிறியதிலிருந்து பெரியது என வரிசைப்படுத்துக: 1625, 8100, 3500, 4400, 2600