அலகு 1 | 8 ஆம் வகுப்பு கணக்கு - ஓர் எண்கோட்டின் மீது விகிதமுறு எண்கள் | 8th Maths : Chapter 1 : Numbers
1. ஓர் எண்கோட்டின் மீது விகிதமுறு எண்கள்
ஓர் எண்கோட்டின் மீது விகிதமுறு எண்களைக் காண்பது என்பது ஒரு முக்கியமான செயல்திறன் ஆகும். எடுத்துக்காட்டாக, என்ற எண்ணை, எண்கோட்டின் மீது குறிக்கவேண்டும் எனில், ஆனது குறை எண் என்பதால், அதனை 0 இக்கு இடதுபுறமாக 0 மற்றும் −1 இக்கு இடையில் குறிக்கவேண்டும். 1 மற்றும் −1 ஆகிய முழுக்கள் 0 இலிருந்து சம தொலைவில் இருக்கின்றன என்பது நமக்கு தெரியும். இவ்வாறே 2, −2 மற்றும் 3, −3 ஆகியவை 0 இலிருந்து சம தொலைவில் இருக்கின்றன. இந்த கருத்தானது விகிதமுறு எண்களுக்கும் பொருந்தும். இப்போது, பூச்சியத்திற்கு வலதுபுறமாக, 0 மற்றும் 1 இக்கு இடையில் 4 இல் 3 பகுதியை என நாம் குறிப்பது போன்று, பூச்சியத்திற்கு இடதுபுறமாக, 0 மற்றும் −1 இக்கு இடையில் 4 இல் 3 பகுதியை எனக் கீழே காட்டியுள்ளவாறு நாம் குறிப்போம்.
இதேபோல், என்பதால் ஆனது −1 மற்றும் −2 இக்கு இடையில் உள்ளது என்பதை எளிதாகக் காண இயலும்.
இப்போது, பின்வரும் எண்கோட்டின் மீது A மற்றும் B ஆகிய எழுத்துக்கள் எந்த விகிதமுறு எண்களைக் குறிப்பிடுகின்றன?
இப்போது உங்களால் மேலே காட்டியுள்ளவாறு எண்கோட்டின் மீது A மற்றும் B ஆல் குறிக்கப்பட்டுள்ள விகிதமுறு எண்களை எளிதாகக் கூற முடிகிறது அல்லவா?
இங்கு, A ஆனது என்ற விகிதமுறு எண்ணையும், B ஆனது என்ற விகிதமுறு எண்ணையும் குறிக்கின்றன.