Home | 8 ஆம் வகுப்பு | 8வது கணிதம் | பாடச்சுருக்கம்

எண்கள் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு கணக்கு - பாடச்சுருக்கம் | 8th Maths : Chapter 1 : Numbers

   Posted On :  19.10.2023 07:36 am

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : எண்கள்

பாடச்சுருக்கம்

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : எண்கள் : பாடச்சுருக்கம்

பாடச்சுருக்கம்


* என்ற வடிவில் எழுதக்கூடிய ஒரு எண்ணானது விகிதமுறு எண் எனப்படும். இங்கு a மற்றும் b முழுக்களாகும் மற்றும் b 0.  

* அனைத்து இயல் எண்கள், முழு எண்கள், முழுக்கள் மற்றும் பின்னங்கள் ஆகியவை விகிதமுறு எண்களாகும்

* ஒவ்வொரு விகிதமுறு எண்ணையும் எண்கோட்டில் குறிக்கலாம்

* 0 ஆனது மிகை விகிதமுறு எண்ணுமல்ல குறை விகிதமுறு எண்ணுமல்ல

* ஒரு விகிதமுறு எண் இல், பகுதி b ஆனது மிகை முழுவாகவும், (a,b) இன் மீ.பொ. = 1 எனவும் இருந்தால், அது திட்ட வடிவில் உள்ளது.

* இரு விகிதமுறு எண்களுக்கிடையில், எண்ணற்ற விகிதமுறு எண்கள் உள்ளன

* இரு விகிதமுறு எண்களின் கழித்தல் என்பது முதல் விகிதமுறு எண்ணோடு, இரண்டாவது விகிதமுறு எண்ணின் கூட்டல் நேர்மாறைக் கூட்டுவதற்குச் சமமாகும்.

* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விகிதமுறு எண்களின் பெருக்கலானது, தொகுதிகளின் பெருக்கல் பலனைத் தொகுதியாகவும், பகுதிகளின் பெருக்கல் பலனைப் பகுதியாகவும் எழுதக் கிடைக்கும் ஒரு விகிதமுறு எண்ணாகும்

* இரு விகிதமுறு எண்களின் வகுத்தல் என்பது, முதல் விகிதமுறு எண்ணோடு இரண்டாவது விகிதமுறு எண்ணின் தலைகீழியைப் பெருக்குவதாகும்

* விகிதமுறு எண்களுக்கான பண்புகளின் அட்டவணை கீழே உள்ளது


* விகிதமுறு எண்களுக்கு , 0 மற்றும் 1 ஆனது முறையே கூட்டல் மற்றும் பெருக்கல் சமனிகள் ஆகும்

* இன் கூட்டல் நேர்மாறு இதன் மறுதலையும் உண்மையாகும்.

* என்ற விகிதமுறு எண்ணின் பெருக்கல் தலைகீழி அல்லது பெருக்கல் நேர்மாறு . ஏனெனில், × ஆகும்.

* நம்மால் ஓர் இயல் எண் n , மற்றொரு இயல் எண் m ஐக் கொண்டு n = m2 என்றிருக்குமாறு காண இயலும் எனில், n ஆனது ஒரு வர்க்க எண் எனப்படும்

* ஏதேனும் ஒரு n என்ற எண்ணை, இரு ஒரே எண்களின் பெருக்கல்பலன் வழங்கினால் அந்த எண்ணானது n இன் வர்க்கமூலம் எனப்படும். இதனை n அல்லது n1/2 எனக் குறிக்கலாம்

* ஓர் எண்ணின் வர்க்கத்தில் உள்ள பகாக் காரணிகளின் எண்ணிக்கையானது அந்த எண்ணின் பகாக் காரணிகளின் எண்ணிக்கையைப் போன்று இரு மடங்காகும்

* ஏதேனும் இரு மிகை எண்கள் a மற்றும் b இக்கு 

(i) [ab] =  a ×  b மற்றும் (ii) ஆகும்.

* ஓர் எண்ணை அதே எண்ணால் பெருக்கி மீண்டுமொருமுறை அதே எண்ணால் பெருக்கினால் கிடைப்பது கன எண் ஆகும். அதாவது, மூன்று ஒரே சம எண்களின் பெருக்கல்பலனே அந்த எண்ணின் கன எண் ஆகும்

* ஒரு மதிப்பின் கனமானது அசல் எண்ணைத் தரும் எனில், அந்த மதிப்பானது அசல் எண்ணின் கன மூலம் எனப்படும்

* ஒரே காரணியின் தொடர் பெருக்கலைக் குறிக்கும் ஒரு கோவையை நாம் படி என்கிறோம்

* அடுக்கு என்பது ஒரு அடிமான எண்ணானது எத்தனைக் முறை காரணியாக பயன்படுத்தப்படுகிறது என்பதை குறிப்பதாகும்.

* அடுக்கு விதிகள்


* மற்ற முடிவுகள்:


* அறிவியல் குறியீட்டில் எழுத S × 10a என்ற வடிவைப் பின்பற்ற வேண்டும். இங்கு S ஆனது 1 இக்கும் 10 இக்கும் (முழுக்கள் அல்லது தசம எண்கள்) இடையே உள்ள ஓர் எண்ணாகும். அது 10 ஆக இருக்கக்கூடாது. மேலும், a ஆனது ஒரு மிகை அல்லது குறை முழு ஆகும்.



இணையச் செயல்பாடு

எண்கள்

இந்த செயல்பாடுகள் மூலம் விகிதமுறு எண்கள் செயல்பாடுகள் மற்றும் அதன் அடிப்படைப் பண்புகளை நன்கு அறியலாம்.


படி − 1 கூகுள் தேடுபொறியில் www.Geogebra.com தட்டச்சு செய்யவும் () விரைவுக் குறியீட்டினை (QR CODE) பயன்படுத்தவும் 

படி − 2 தேடு பகுதியில் RationalNumbers எனத் தட்டச்சு செய்யவும் 

படி− 3 எண்கோட்டில் வெவ்வேறு விகிதமுறு எண்களின் பகுதி மற்றும் தொகுதியை நகர்த்தி ஒருமாதிரி எண்கோட்டினைப் பார்க்கலாம்.

இணைய உரலி: விகிதமுறு எண்கள்

https://www.geogebra.org/m/n92AKzBF#material/ca5D7VbZ 

படங்கள் அடையாளங்களை மட்டுமே குறிக்கும்

இந்த பக்கத்தை பார்க்க தேடுபொறி தேவையென்றால் Flash Player அல்லது Java Script அனுமதிக்கவும்.


இணையச் செயல்பாடு

படி − 1 உலாவியைத் திறந்து பின்வரும் உரலித் தொடர்பை தட்டச்சு செய்யவும் (அல்லது) விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்யவும். 8ஆம் வகுப்பு பருவம் III என்ற பணிப்புத்தகம் ஜியோஜீப்ராவில் திறக்கும். அதில் 'Square root_prime factors’ என்ற பணித்தாள் மீது சொடுக்கவும்

படி − 2 "NEW PROBLEM" ஐக் கிளிக் செய்க. கணக்கீட்டைச் சரிபார்த்து நீங்களே வேலை செய்யுங்கள்.


இந்த தொடர்பில் உலாவவும் 

எண்கள்: https://www.geogebra.org/m/xmm5kj9r or விரைவுத் தகவல் குறியீட்டை நுட்பமாய் சோதிக்கவும்.


Tags : Numbers | Chapter 1 | 8th Maths எண்கள் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு கணக்கு.
8th Maths : Chapter 1 : Numbers : Summary Numbers | Chapter 1 | 8th Maths in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : எண்கள் : பாடச்சுருக்கம் - எண்கள் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு கணக்கு : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 1 : எண்கள்