எண்கள் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு கணக்கு - மிகை மற்றும் குறை விகிதமுறு எண்கள் | 8th Maths : Chapter 1 : Numbers
3. மிகை மற்றும் குறை விகிதமுறு எண்கள்
விகிதமுறு எண்களை மிகை மற்றும் குறை விகிதமுறு எண்கள் என வகைப்படுத்தலாம்.
ஒரு விகிதமுறு எண்ணைக் குறிக்கும் பின்னத்தின் தொகுதி மற்றும் பகுதி ஆகிய இரண்டும் ஒரே குறியில் இருந்தால், அந்த விகிதமுறு எண்ணானது மிகை ஆகும்.
எடுத்துக்காட்டாக, ஆகியன மிகை விகிதமுறு எண்கள் ஆகும்.
ஒரு விகிதமுறு எண்ணைக் குறிக்கும் பின்னத்தின் தொகுதி அல்லது பகுதி ஆகிய ஏதேனும் ஒன்று மட்டும் குறையாக இருந்தால், அந்த விகிதமுறு எண்ணானது குறை ஆகும்.
எடுத்துக்காட்டாக, ஆகியன குறை விகிதமுறு எண்கள் ஆகும்.
குறிப்பு
• 0 ஆனது மிகையும் அல்லாத குறையும் அல்லாத ஒரு விகிதமுறு எண்ணாகும்.
• − என்பதை நினைவில் கொள்க.