தாவரவியல் - வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் - முக்கியமான கேள்விகள் | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany
வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்
மதிப்பீடு
1. மரபுவழி வகைப்பாடு எதனைப் பிரதிபலிப்பதால் மிகவும்
விரும்பத்தக்க வகைப்பாடாக உள்ளது.
(அ) ஒப்பீட்டு உள்ளமைப்பியல்
(ஆ) உற்பத்தி செய்யப்பட்ட பூக்களின் எண்ணிக்கையை
(இ) ஒப்பீட்டு செல்லியல்
(ஈ) பரிணாம உறவுமுறை
2. பல்வேறு வகைப்பட்ட தாவர நோயெதிர்ப்பு மண்டலத்தின்
ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் அடங்கிய வகைப்பாடு.
(அ) வேதிய வகைப்பாடு
(ஆ) மூலக்கூறு வகைப்பாட்டு அமைப்புமுறை
(இ) ஊநீர்சார்
வகைப்பாடு
(ஈ) எண்ணியல் வகைப்பாடு
3. பின்வரும் எந்தத் தாவரத்தின் வேர் முண்டுகளில் நைட்ரஜனை
நிலைநிறுத்தும் இழை நுண்ணுயிரிர்கள் உள்ளன
(அ) குரோட்டலேரியா
ஜன்சியா
(ஆ) சைகஸ் ரெவலூட்டா
(இ) சைசர் அரிட்டினம்
(ஈ) கேசியுவரைனா
ஈகுசிடிஃபோலியா
4. இருபக்கச்சீர் கொண்ட மலர்கள்
(அ) சீரோ ஃபிஜியா
(ஆ) தெவிஷியா
(இ) டட்டுரா
(ஈ) சொலானம்
5. உயிரியப் பல்வகைமையைப் பாதுகாப்பதில் தேசியப் பூங்காக்களின்
பங்கினை விவரி.
6. இருவிதையிலைகளையும் கோப்பை வடிவப் பூத்தளத்தையும்
கொண்ட தாவரங்களை எவ்வாறு வகைப்படுத்துவாய்?
7. கிளைட்டோரியா
டெர்னேஷியாவின் மலர் பண்புகளை விளக்குக.
8. லில்லியேசி குடும்பத் தாவரங்களை, சொலானேசி குடும்பத்
தாவரங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவாய்?