Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | சூழியல் பிரமிட்களின் வகைகள்

மாதிரிகள் / புகைப்படங்கள் / விளக்கப்படங்கள் - தாவரவியல் செய்முறைகள் - சூழியல் பிரமிட்களின் வகைகள் | 12th Botany : Practicals

12 வது தாவரவியல் : செய்முறைகள்

சூழியல் பிரமிட்களின் வகைகள்

நோக்கம்: பல்வேறு வகையான சூழியல் பிரமிட்களைக் கண்டறிதல்.

மாதிரிகள் / புகைப்படங்கள் / விளக்கப்படங்கள்


சோதனை எண் 12: சூழியல் பிரமிட்களின் வகைகள்

நோக்கம்: பல்வேறு வகையான சூழியல் பிரமிட்களைக் கண்டறிதல்.

கொள்கை: சூழல்மண்டலத்தின் பல்வேறு மட்டங்களுக்கு இடையேயுள்ள தொடர்புகளை வரைப்பட உருவமைப்பாகக் காட்டுவது சூழியல் பிரமிட்கள் ஆகும். இந்தச் சூழியல் பிரமிட்களில் அடுத்தடுத்த அடுக்குகள், நுனி வரையுள்ள ஊட்ட மட்டத்தைக் குறிக்கும். பிரமிட்டின் அடிப்பகுதியில் உற்பத்தியாளர்களும், அதற்கு மேலே தாவர உண்ணிகளும், மேலுள்ள அடுக்குகளில் ஊண் உண்ணிகளும் காணப்படுகின்றன. இறுதி மட்டம் மூன்றாம் நிலை அல்லது இறுதிநிலை நுகர்வோர்களைக் குறிக்கிறது.

தேவையானவை: பலவகையான சூழியல் பிரமிட்களின் மாதிரிகள் / புகைப்படங்கள் / விளக்கப்படங்கள்


அ. எண்ணிக்கை பிரமிட்

கண்டறியும் பண்புகள்

• ஒரு புல்வெளி சூழல்மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட் அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் காணப்படும் உயிரினங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும்.

• உற்பத்தியாளர்களில் தொடங்கி முதல் நிலை நுகர்வோர்கள், இரண்டாம் நிலை நுகர்வோர்கள் மற்றும் இறுதியாக மூன்றாம் நிலை நுகர்வோர்கள் வரை ஒவ்வொரு ஊட்ட மட்டத்திலும் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

•எனவே புல்வெளி சூழல்மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட் எப்பொழுதும் நேரானது.

T1 - உற்பத்தியாளர்கள் | T2 - தாவர உண்ணிகள் | T3 - இரண்டாம் நிலை நுகர்வோர்கள் / T4 - மூன்றாம் நிலை நுகர்வோர்கள்



ஆ. உயிரித்திரள் பிரமிட்

கண்டறியும் பண்புகள்

• ஓர் குறிப்பிட்ட காலத்தில் அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் காணப்படும் உயிரினங்களின் மொத்த உயிரித்திரள் அல்லது நிலை உயிரித் தொகுப்பை (உலர் எடை) குறிப்பதே உயிரித்திரள் பிரமிட் ஆகும்.

• நீர் சூழல் மண்டலத்தில் பிரமிட்டின் அடிப்பகுதியிலுள்ள உற்பத்தியாளர்கள் சிறிய உயிரினங்களான பாசிகள் மற்றும் தாவர மிதவை உயிரிகள், குறைவான உயிரித்திரளைக் கொண்டுள்ளது. மேலும் உயிரித்திரள் மதிப்பு பிரமிட்டின் இறுதிவரை படிப்படியாக அதிகரிக்கிறது.

• எனவே, நீர் சூழல்மண்டலத்தின் உயிரித்திரள் பிரமிட் எப்பொழுதும் தலைகீழானது.

T1 - உற்பத்தியாளர்கள் | T2 - தாவர உண்ணிகள் | T3 - இரண்டாம் நிலை நுகர்வோர்கள்


இ. ஆற்றல் பிரமிட்

கண்டறியும் பண்புகள்

• ஆற்றல் பிரமிட் ஒவ்வொரு அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் ஆற்றல் (ஜூல்கள்) ஓட்டத்தைக் குறிக்கும்.

• ஆற்றல் பிரமிட்டின் அடிப்பகுதியிலுள்ள உற்பத்தியாளர்கள் முதல் ஒளி இறுதி மட்டம் வரையுள்ள அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் ஆற்றல் கடத்தல் படிப்படியாகக் குறைகிறது.

• எனவே ஆற்றல் பிரமிட் எப்பொழுதும் நேரானது.


Tags : Models / Photographs / Pictures | Botany Practicals மாதிரிகள் / புகைப்படங்கள் / விளக்கப்படங்கள் - தாவரவியல் செய்முறைகள்.
12th Botany : Practicals : Types of ecological pyramid Models / Photographs / Pictures | Botany Practicals in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : செய்முறைகள் : சூழியல் பிரமிட்களின் வகைகள் - மாதிரிகள் / புகைப்படங்கள் / விளக்கப்படங்கள் - தாவரவியல் செய்முறைகள் : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : செய்முறைகள்