பயன்கள்,தோற்றம் மற்றும் விளையுமிடம்,தாவரவியல் பெயர் - உணவு தாவரங்கள் - பானங்கள் | 12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany
பானங்கள்
நாம் எப்போதும் நமது விருந்தினர்களை ஒரு கோப்பை
தேனீர் அல்லது காஃபி சாப்பிடுகிறீர்களா?" என்ற உபசரிப்பின் மூலமே வரவேற்கிறோம்.
அதுபோலக் குழந்தைகள் தம் பிறந்த நாளில் சாக்லேட்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.
ஆல்கலாய்டு உள்ளதால் எல்லா ஆல்கஹால் அற்ற பானங்களும் மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டுபவையாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் உள்ளன. இந்த அத்தியாயத்தின் பாகத்தில் தேனீர், காஃபி, கோக்கோ என்ற மூன்று பிரபலமான ஆல்கஹால் அற்ற பானங்களைப் பற்றி கற்கலாம்.
தாவரவியல்
பெயர்: கேமெல்லியா சைனென்சிஸ்
குடும்பம்: தியேசி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
தேயிலையின் பிறப்பிடம் சைனா ஆகும். இந்தியாவில்
அஸ்ஸாமுக்கு அடுத்துக் கேரளாவும், தமிழ்நாடும் மிகுந்த தேயிலை உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்.
தேயிலை இந்தியாவின் அனைத்துப்பிரிவு மக்களின் மிகச்சிறந்த பிரபலமான புத்துணர்வு பானமாகும். பசுமைத்தேயிலையை தினமும் குடித்தால் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது.
தாவரவியல்
பெயர்: காஃபியா அராபிகா
குடும்பம்: ரூபியேசி
இரவில் கண்விழித்துப் படிக்கும் மாணவர்களோ,
வண்டி ஓட்டும் ஒட்டுனர்களோ தேனீர் அல்லது காஃபி அருந்துவது ஏன்?
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
காஃபியா அராபிகா வணிகக் காஃபியின் தலையாய மூலப்பொருட்களாகும்.
இது வெப்பமண்டல எத்தியோப்பியாவைப் பூர்விகமாகக் கொண்டது. ஒரு இந்திய இஸ்லாமியத் துறவி
பாபா புதான் என்பவர் காஃபியை ஏமனிலிருந்து மைசூர் பகுதிக்கு அறிமுகப்படுத்தினார். இந்தியாவில்
கர்நாடகா காஃபியின் மிகப்பெரிய உற்பத்தி மாநிலமாகும். அடுத்துத் தமிழ்நாடும், கேரளாவும்
உள்ளன. தமிழ்நாடு இந்தியாவில் காஃபியின் மிகப்பெரிய நுகர்வோர் மாநிலமாக உள்ளது.
அளவாகக் காஃபி குடிப்பது கீழ்கண்ட ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. காஃபெயின் அசிட்டைல் கோலைன் எனும் , நரம்பிடைக் கடத்தியைச் சுரக்கச் செய்கிறது. இது செயல்திறனை அதிகரிக்கிறது. கொழுப்படைத்த கல்லீரல் நோய், சிர்ரோசிஸ் (கல்லீரல் இழைநார் நோய்), புற்றுநோய்களைக் குறைக்கப் பயன்படுகிறது. இரண்டாம் வகை சர்க்கரை நோய்க்கான ஆபத்தைக் குறைக்கிறது.
தாவரவியல்
பெயர்: தியொபுரோமா கொகொ
குடும்பம்: மால்வேசி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
கோகோ வெப்பமண்டல அமெரிக்கப்பகுதியை பூர்விகமாகக்
கொண்டது. தியொபுரொமா என்ற சொல் (தியொஸ் என்றால் கடவுள், புரொமா என்றால் உணவு) கடவுள்களின்
உணவு எனும் பொருள் தரும். இந்தியாவில் கேரளா மிகப்பெரிய உற்பத்தி மாநிலமாகவும், அதை
அடுத்துக் கர்நாடகாவும் உள்ளன.
மிட்டாய் தொழிற்சாலைகளில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது
மற்றும் சத்து பானங்களின் முக்கியமான கலவைப் பொருளாகவும் இருக்கிறது. கோகோ தயாரிப்புகள்
நார்சத்து, கனிமங்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் நிறைந்து இருப்பதால் புற்றுநோய், இதயத்தமனி
நோய்கள். முன் முதிர்வு வராமலும் தடுக்கிறது.