பயன்கள்,தோற்றம் மற்றும் விளையுமிடம்,தாவரவியல் பெயர் - உணவு தாவரங்கள் - கொட்டைகள் | 12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany
கொட்டைகள் (Nuts)
கொட்டைகள் கடினமான ஓட்டுக்குள் உண்ணக்கூடிய பருப்பைக் கொண்ட எளிய உலர் கனியாகும். அவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எதிர் ஆக்ஜினனேற்றிகள் (antioxidants) அதிகளவு நிறைந்துள்ளன. இப்பாடத்தில் சில முக்கியமான கொட்டைகள் குறித்துக் கீழே விளக்கப்படுகின்றன.
தாவரவியல்
பெயர்: அனகார்டியம் ஆக்ஸிடெண்டேல்
குடும்பம்: அனகார்டியேசி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
முந்திரி பிரேசிலைப் பிறப்பிடமாகக் கொண்டது.
16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய மாலுமிகள் மூலமாக இந்தியாவிற்குள் நுழைந்தது. கேரளா,
கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ஒடிசாவில் அதிகமாக வளர்க்கப்படுகிறது.
பயன்கள்
முந்திரி பொதுவாக இனிப்புகள் மற்றும் பிற பண்டங்களை
அலங்கரிக்க பயன்படுகிறது. அரைத்துக் கிடைக்கப்பெறும் பசை (paste), சில குழம்பு வகைகளுக்கும்
இனிப்பு வகைகளுக்கும் மூலப்பொருளாக உள்ளது. வறுத்த முந்திரிப்பருப்பு தின்பண்டமாகப்
பயன்படுத்தப்படுகிறது.
தாவரவியல்
பெயர்: ப்ரூனஸ் டல்சிஸ்
குடும்பம்: ரோசேசி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
பாதாம் மத்தியத் தரைக்கடல் பகுதியின் மத்தியக்
கிழக்கு பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டது. காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசத்தில்
பாதாம் விளைவிக்கப்படுகின்றது. பயன்கள் பாதாம் பருப்பு பெரும்பாலும் நேரடியாகவோ அல்லது
வறுத்தோ உண்ணப்படுகின்றது. மேலும் அவை முழுமையாகவோ, சீவல்களாகவோ, மாவாகவோ கிடைக்கப்
பெறுகின்றன. பாதாம், பாதம் வெண்ணெய், பாதாம் பால் மற்றும் பாதம் எண்ணையாக மாற்றப்பட்டு,
இனிப்பு மற்றும் காரத் தின்பண்டங்கள் செய்யவும், ஒப்பனைப்பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
பாதாம் உயர் அடர்வு கொழுப்புகள் (HDL) உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகின்றது.