பயன்கள்,தோற்றம் மற்றும் விளையுமிடம்,தாவரவியல் பெயர் - உணவு தாவரங்கள் - எண்ணெய் விதைகள் | 12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany
எண்ணெய் விதைகள்
வறுத்த உணவு ஏன் அவித்த உணவைவிடச் சுவையாக
உள்ளது?
எண்ணெய்கள் இரண்டு வகைப்படும். இவை அத்தியாவசியமான
எண்ணெய்கள் மற்றும் கொழுப்பு எண்ணெய்கள் (தாவர எண்ணெய்) அத்தியாவசியமான எண்ணெய்கள்
அல்லது எளிதில் ஆவியாகக்கூடிய நறுமணம் கொண்ட எண்ணெய்கள் காற்றுடன் கலக்கும் போது ஆவியாகின்றன.
அத்தியாவசியமான எண்ணெய்க்கு ஒரு தாவரத்தின் எந்தப் பகுதியும் மூல ஆதாரமாக இருக்கலாம்.
எடுத்துக்காட்டு: பூக்கள் (ரோஜா), கனிகள் (ஆரஞ்சு), தரைகீழ்த்தண்டு (இஞ்சி). தாவர எண்ணெய்கள்
அல்லது ஆவியாகாத எண்ணெய்கள் அல்லது நிலைத்த எண்ணெய்கள் ஆவியாவதில்லை. முழுவிதை அல்லது
கருவூண்திசு தாவர எண்ணெய்க்கு மூல ஆதாரமாக உள்ளது.
ஒருசில எண்ணெய் விதைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
வேர்க்கடலை
தாவரவியல்
பெயர்: அராகிஸ் ஹைபோஜியா
குடும்பம்: பேபேசி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
வேர்க்கடலையின் பிறப்பிடம் பிரேசில். போர்ச்சுகீசியர்கள் ஆப்பிரிக்காவிற்கு
நிலக்கடலையை அறிமுகப்படுத்தினர். ஸ்பெயின் நாட்டவர்கள் பிலிப்பைன்ஸ் வழியாகத் தென்கிழக்கு
ஆசியாவிற்கும் இந்தியாவிற்கும் எடுத்துச் சென்றனர். இந்தியாவில் குஜராத், ஆந்திராபிரதேசம்,
ராஜஸ்தான் ஆகியவை மிகுந்த உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்.
நிலக்கடலை 45% எண்ணெய்யைக் கொண்டுள்ளது. நிலக்கடலைப் பருப்பு அதிக அளவில் பாஸ்பரஸ், வைட்டமின்கள் குறிப்பாகத் தயாமின், ரைபோபிளேவின் மற்றும் நயாசின்னைக் கொண்டுள்ளது. இது ஒரு உயர் மதிப்புமிக்க சமையல் எண்ணெய் ஏனெனில் இதை உயர் வெப்பத்திற்குச் சூடேற்றும்போது புகையை வெளிவிடுவதில்லை மலிவுத்தர எண்ணெய் சோப் மற்றும் உயவுப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
தாவரவியல்
பெயர்: செஸாமம் இண்டிகம்
குடும்பம்: பெடாலியேஸி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
செஸாமம் இண்டிகம் ஆப்பிரிக்காவைப் பூர்விகமாகக்
கொண்டது. எள் ஒரு வறண்ட நிலப்பயிராகப் பயிரிடப்படுகிறது. 2017-18ல் மேற்கு வங்காளம்,
மத்தியப்பிரதேசம் இந்தியாவின் அதிக உற்பத்தி செய்யும் மாநிலங்கள். தென்னிந்தியக் கலாசாரத்தில்
இது ஒரு ஆரோக்கியமான எண்ணெய்யாகச் சமையலிலும், மருத்துவத்துறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எள் எண்ணெய் பெரும்பாலும் சமையலில் பயன்படுகிறது. குறைந்த தரமுள்ள எண்ணெய் சோப் தயாரிப்பிலும், பெயிண்ட் தொழிற்சாலைகளில் உயவுப் பொருளாகவும், விளக்கெரிக்கவும் பயன்படுகிறது. இந்தியாவில் நறுமணப்பொருட்களில் பயன்படுத்தப்படும் நறுமண எண்ணெய்களில் இது அடிப்படை எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் எள் விதையிலான சிற்றுண்டிகள் பிரபலமாக உள்ளன.
தாவரவியல்
பெயர்: கோகோஸ் நியுசிபெரா
குடும்பம்: அரிக்கேசி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
தென்னையின் பூர்விகம் பசிபிக் தீவுப்பகுதிகள்
ஆகும். கேரளா, தமிழ்நாடு இந்தியாவின் மிகுந்த உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்.
தேங்காய் எண்ணை உண்ணக்கூடிய மற்றும் தொழில்
துறை எண்ணையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணையிலிருந்து பெறப்படும் சோப்கள்
மென் நீரிலும், கடின நீரிலும் அதிக நுரை கொடுக்கும். இரப்பர், செயற்கை ரெசின்கள், உயவுப்பொருட்கள்,
விமான நிறுத்தத்திரவங்கள், துவைக்கும் சோப் போன்றவைகளின் தயாரிப்பில் பயன்படுகிறது.
முக்கியமாகத் தலைமுடி எண்ணையாகவும், மூலிகைப்பொடிகள் கலக்க அடித்தளமாகவும் உள்ளது.