பயன்கள்,தோற்றம் மற்றும் விளையுமிடம், தாவரவியல் பெயர் - உணவு தாவரங்கள் - காய்கறிகள் | 12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany
காய்கறிகள்
காய்கறிகள் நிறைந்த ஒரு சந்தையில் நடந்து செல்லும்போது
அடுக்கிய வெண்டைக்காய்கள், மலைபோல் குவிந்திருக்கும் உருளைக்கிழங்குகள், கூம்பாகக்
குவித்திருக்கும் கத்திரிக்காய், தக்காளி, வெள்ளரி போன்றவற்றைக் காண்பீர்கள். பழக்கவழக்கங்கள்,
குடும்பச் சுவைக்கேற்றவற்றைப் புதிய சத்தான, மென்மையான, பழுத்தவற்றை அனுபவம் மற்றும்
பாரரம்பரிய பழக்கத்தின் மூலம் தெரிவு செய்கின்றோம். நாம் ஏன் காய்கறிகளைச் சாப்பிட
வேண்டும்? அவை நமக்கு என்ன தருகின்றன?
காய்கறிகளுக்கு ஆரோக்கியமான உணவில் பங்கு உள்ளது. பொட்டாசியம், நார்சத்துக்கள், ஃபோலிக் அமிலம், வைட்டமின் A, E மற்றும் C போன்ற பல ஊட்டச்சத்துக்களைக் காய்கறிகள் வழங்குகின்றன. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் நமது ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு மிகவும் அவசியம்.
தாவரவியல்
பெயர்: சொலானம் டியூபரோசம்
குடும்பம்: சொலானேசி
தோற்றம் மற்றும் விளையுமிடம்
பெருமற்றும் பொலிவியாவின் உயர்மலைப்பகுதிகளில்
உருளைக்கிழங்கு தோன்றியது. இந்தியாவில் உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் போன்ற
மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது. தென்னிந்திய மலைப்பகுதியில் (Southern
Hills) உள்ள நீலகிரி மற்றும் பழனி மலைத் தொடர்கள் உருளைக்கிழங்கு விளைச்சலில் முக்கியப்
பங்கு வகிக்கின்றது.
உருளைக்கிழங்கு வேகவைத்தோ (Steamed), வறுத்தோ , அடுமனையிலிட்டோ, சூப்புகளாகவோ, மசித்தோ அல்லது அப்பமாகவோ பயன்படுத்தப்படுகின்றது. வறுசீவல்கள் (Chips) மற்றும் மதுபான (Brewery) தொழிற்சாலைகளில் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. நுண்ணுயிரியல் மற்றும் மருத்துவப் பயன்பாடுகளுக்கான பொருட்களின் உற்பத்தியிலும் முக்கிய இடுப்பொருளாக உள்ளது.
தாவரவியல்
பெயர்: எபெல்மாஸ்கஸ் எஸ்குலெண்டஸ்
குடும்பம்: மால்வேசி
தோற்றம் மற்றும் விளையுமிடம்
வெண்டை வெப்பமண்டல ஆப்பரிக்காவை பூர்வீகமாகக்
கொண்டது. அசாம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.
தமிழகத்தில் கோயம்பத்தூர், தர்மபுரி, வேலூர் ஆகிய பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.
முற்றாத பசுமையான இளம் காய்கள் காய்கறிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. வெட்டப்பட்டு உலரவைக்கப் பட்ட (dehydrated) வெண்டை பின்பயன்பாட்டிற்காக பாதுகாக்கப்படுகிறது. இது மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
தாவரவியல்
பெயர் : குக்குமிஸ் சடிவஸ்
குடும்பம்: குக்கர்பிட்டேசி
குக்கர்பிட் என்பது குக்கர்பிட்டேசி குடும்பத்தைச்
சார்ந்த கொடியின தாவரங்களான வெள்ளரி, ஸ்குவாஷ் (squash), பூசணி, முலாம் போன்றவை இவ்வினம்
சார்ந்த காய்கறிகளைக் குறிக்கும் சொல்லாகும். தோற்றம் மற்றும் விளையுமிடம் இந்தியா
முழுவதிலும் பரவலாக வெள்ளரி பயிரிடப்படுகிறது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும்
வெள்ளரி ஒரு முக்கியக் கோடைக்காலக் காய்கறியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இந்தியாவில்
தோன்றிய இவ்வினம், 3,000 ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வருகின்றது.
வகையைப் பொறுத்து இளம் அல்லது முதிர்ந்த பழங்களை
நேரடியாகவோ அல்லது சமைத்தோ உண்ண ப்படுகிறது. சாலட் (salad) மற்றும் ஊறுகாய் தயாரிக்கப்படுகிறது.
வெள்ளரி விதைகளிலிருந்து பெறப்பட்ட எண்ணெய் மூளை மற்றும் உடலுக்குச் சிறந்தது, மேலும்
அதன் விதைப்பருப்பு பல்வேறு இனிப்பு தயாரிப்புகளில் பயன்படுகின்றது.