பயன்கள்,தோற்றம் மற்றும் விளையுமிடம்,தாவரவியல் பெயர் - உணவு தாவரங்கள் - சாயங்கள் | 12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany
சாயங்கள்
நிறத்தை உணரக்கூடிய திறமை கண்களுக்கு இருப்பது
ஒரு ஆச்சரியப்பட வைக்கும் நிலை. சாயங்கள் நாம் உபயோகிக்கும் பொருட்களில் நிறத்தைச்
சேர்க்கின்றன. அவை பண்டைய காலங்களிலிருந்து உபயோகத்திலுள்ளன.
பண்டைய எகிப்தின் கல்லறை ஓவியங்களில் சாயங்கள்
இருப்பதற்கான நம்பக்கூடிய பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவுரி, குங்குமப்பூ
போன்றவற்றின் சாயங்கள் மம்மியைச் சுற்றிய சிமெண்ட்களில் காணப்படுகின்றன. இச்சாயம் இந்தியாவில்
பாறை ஓவியங்களிலும் காணப்படுகிறது.
தாவரவியல்
பெயர்: இண்டிகோபெரா
குடும்பம்: பேபேசி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
இண்டிகோபெரா டின்க்டோரியா இந்தியாவைப் பிறப்பிடமாகக்
கொண்டது. இந்தியாவின் பல மாநிலங்களில் முன்பு வளர்க்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு,
ஆந்திரப் பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் மட்டும் வளர்க்கப்படுகிறது.
இண்டிகோபெராவின் பல சிற்றினங்களின் இலைகளிலிருந்து
பெற்ற சாறுதான் பளபளப்பான அடர் நீலச் சாயம் இண்டிகோவாகும். ஆசியாவின் மக்கள் குறிப்பாக
இந்தியர்களுக்கு 4000 ஆண்டுகளுக்கு மேல் இந்தச் சாயம் தெரியும். இண்டிகோபெரா தென் இந்தியாவின்
கோவில் கலைகளிலும், கலம்காரி எனப்படும் நாட்டுப்புறக் கலைகளிலும் நீண்டகாலமாக உபயோகத்திலுள்ளது.
பருத்தி, ரேயான் மற்றும் கம்பளிகளைச் சாயமேற்றவும் அச்சேற்றவும் பயன்படுகிறது.
தாவரவியல்
பெயர்: லாசோனியா இனெர்மிஸ்
குடும்பம்: லைத்ரேசி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
இது வட ஆப்பிரிக்கா மற்றும் தென்மேற்கு ஆசியாவைச்
சேர்ந்தது. இது பெரும்பாலும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது குறிப்பாக ராஜஸ்தான்,
குஜராத், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.
சம்பாரண் சத்தியாகிரகம் ஆங்கிலேயர் இந்தியாவில் பயிர் செய்தவற்றில் அவுரிதான் மிக முக்கியமான பணப்பயிர்.
உணவுப் பயிர்களுக்குப் பதிலாக அவுரியைப் பயிரிட விவசாயிகள் கட்டாயப் படுத்தப்பட்டார்கள்.
காந்தி பீகாரைச் சேர்ந்த சம்பாரணில் விவசாயிகளுக்கு ஆதரவாகச் சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார்.
காந்தியால் இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் சத்தியாகிரகம் இதுதான். அரசு 'சம்பாரண் விவசாயிகள்
மசோதா வை ஏற்றுக்கொண்டது.
லாசோனியா இனெர்மிஸ் இளம் தண்டுத்தொகுப்பு மற்றும்
இலைகளிலிருந்து 'ஹென்னா' என்கிற ஆரஞ்சு சாயம் பெறப்படுகிறது. இலைகளின் முக்கிய சாயப்பொருளான
லாகோசோன் தீங்கற்றது, தோலில் எரிச்சல் கொடுக்காதது. இந்தச் சாயம் பல காலமாகத் தோல்,
முடி மற்றும் நகங்களுக்குச் சாயமிடப் பயன்படுகிறது. தோல், குதிரைவால்களுக்குச் சாயமிடவும்,
தலைமுடி சாயங்களிலும் பயன்படுகிறது.