மரக்கூழ்
பேப்பர் என்ற சொல் பேப்பைரஸ் என்ற வார்த்தையிலிருந்து
வந்தது. அது ஒரு தாவரம் (சைபெரஸ் பேப்பரைஸ்). எகிப்தியர்களால் பேப்பர் மாதிரியான பொருளைத்
தயாரிக்கப் பயன்பட்டது. காகித உற்பத்தியானது ஒரு சீனக்கண்டுபிடிப்பு. சீனர்கள் 105
பொ.ஆ.பி.ல் காகித மல்பெரி உள்மரப்பட்டையிலிருந்து காகிதத்தைக் கண்டு பிடித்தனர் அராபியர்கள்
காகிதம் தயாரிக்கும் கலையைக் கற்று 750 பொ. ஆ. பி. வாக்கில் மேம்படுத்தும் வரை நீண்ட
காலமாக அது சீனர்களின் பிரத்யேக உரிமையாக இருந்தது. அச்சுப்பதித்தல் கண்டறிந்த பின்பு
காகிதத்திற்கான தேவை அதிகரித்தது.
மரக்கூழ் தயாரிப்பு: கட்டையானது கூழாக எந்திர
மற்றும் வேதிமுறைகளால் கூழாக மாற்றப்படுகிறது. காகிதக்கூழ் தயாரிக்க மீலியா அசடிரக்டா
(மலை வேம்பு), நியோலாமார்கியா சைனென்சிஸ் (வெண்கடம்பு), கேசுவரைனா (சவுக்கு ) ஆகிவற்றின்
கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ரேயான் அல்லது செயற்கைப்பட்டு,
துணிகள், ஒளி ஊடுருவும் பிலிம்கள் (செல்லோபேன், செல்லுலோஸ் அசிட்டேட் பிலிம்கள்) நெகிழிகள்
தயாரிப்பிற்கான அடிப்படைப் பொருளாகச் சுத்திகரிக்கப்பட்ட கரையும் கூழ் உபயோகப்படுத்தப்படுகிறது.
விஸ்கோஸ் செயல்முறையில் ரேயான் தயாரிப்பது ஒரு மிகப்பொதுவான செயல்முறையாகும்.