பயன்கள்,தோற்றம் மற்றும் விளையுமிடம்,தாவரவியல் பெயர் - உணவு தாவரங்கள் - மரப்பால்: இரப்பர் | 12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany
மரப்பால்
தாவரவியல் பெயர் : ஹீவியா பிரேசிலியன்ஸிஸ்
குடும்பம்: யூஃபோர்பியேசி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
பிரேசிலைப் பூர்விகமாகக் கொண்ட இது காலனிக்
காலத்தில் பிற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு முக்கிய பணப்பயிராகவும் ஆனது. உலக
உற்பத்தியில் ஆசியாவின் பங்கு 90% ஆகும். இந்தியாவில் கேரளாவிற்கு அடுத்துத் தமிழ்நாடு
மிகப்பெரிய உற்பத்தி மாநிலமாக உள்ளது.
டயர் மற்றும் மற்ற வாகனப்பாகங்கள் உற்பத்தி
தொழிற்சாலைகள் 70% இரப்பர் உற்பத்தியைப் பயன்படுத்திக் கொள்கின்றன. காலனி , கம்பி மற்றும்
கேபிள் சுற்றியுள்ள கடத்தாப்பொருள், மழைக்கோட்டுகள், வீடு மற்றும் மருத்துவமனைப் பொருள்கள்,
அதிர்வு தாங்கிகள், பெல்ட்கள், விளையாட்டுப் பொருள்கள், அழிப்பான்கள், பசைகள், இரப்பர்
பட்டைகள் போன்றவற்றின் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படுகிறது. கடின இரப்பர் மின் மற்றும்
வானொலி பொறியியல் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது. அடர் மரப்பால் கையுறைகள், பலூன்கள்
மற்றும் கருத்தடைச் சாதனத் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. நுரையூட்டிய மரப்பால்
மெத்தைகள், தலையணைகள் மற்றும் உயிர் பாதுகாப்பு பட்டைகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
இரப்பர் - வல்கனைசேசன்
சார்லஸ் குட் இயர் 1839-ல் வல்கனைசேசனைக்
கண்டுபிடித்தார். இரப்பர் பொருட்களில் உள்ள குறைகளை அதை 150°C-ல் சல்பருடன் அழுத்தத்தில்
சூடாக்குவதன் மூலம் சரியாக்க முடியும் எனக் கண்டறிந்தார். இந்தச் செயல்முறை வல்கனைசேசன்
எனப்பட்டது. இந்தப் பெயர் ரோம நெருப்புக்கடவுள் வல்கன் -இல் இருந்து கொடுக்கப்பட்டது.
இந்த முறையால் முதன்முறையாக 1867-ல் திட இரப்பர் டயர்கள் பயன்படுத்தப்பட்டன. அதனால்
தான் நாம் சாலைகளில் அதிர்வின்றிப் பயணம் செய்கிறோம்.