Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு)

பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு) | 12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany

   Posted On :  09.08.2022 06:21 pm

12 வது தாவரவியல் : அலகு 10 : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு)

தாவரவியல் : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் : உயிரியல் தாவரவியல் குழு புத்தக வினாக்கள் மற்றும் முக்கியமான கேள்விகள் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

தாவரவியல் - பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு)

மதிப்பீடு


1. பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியானவற்றை தேர்ந்தெடு 

i) தானியங்கள் புல் குடும்ப உறுப்பினர்கள் 

ii) பெரும்பான்மையான உணவுத் தானியங்கள் ஒரு விதையிலைத் தாவரத் தொகுதியைச் சார்ந்தவை 

அ) (i) சரியானது மற்றும் (ii) தவறானது 

ஆ) (i) மற்றும் (ii) இரண்டும் சரியானவை 

இ) (i) தவறானது மற்றும் (ii) சரியானது 

ஈ) (i) மற்றும் (ii) இரண்டும் தவறானது.

விடை : ஆ) (i) மற்றும் (ii) இரண்டும் சரியானவை 

 

2. கூற்று : காய்கறிகள் ஆரோக்கியமான உணவின் முக்கிய அங்கமாகும் 

காரணம் : காய்கறிகள் சதைப்பற்றான இனிய வாசனை மற்றும் சுவைகள் கொண்ட தாவரப் பகுதிகள் ஆகும். 

அ) கூற்று சரி காரணம் தவறு 

ஆ) கூற்று தவறு காரணம் சரியானது 

இ) இரண்டும் சரியானவை மற்றும் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் ஆகும். 

ஈ) இரண்டும் சரியானவை மற்றும் காரணம் கூற்றுக் கான சரியான விளக்கமல்ல

விடை : அ) கூற்று சரி காரணம் தவறு 

 

3. வேர்கடலையின் பிறப்பிடம்

அ) பிலிப்பைன்ஸ் 

ஆ) இந்தியா 

இ) வட அமெரிக்கா 

ஈ) பிரேசில்

விடை : ஈ) பிரேசில் 

 

4. கூற்று I : காஃபி காஃபின் கொண்டது 

காரணம் II : காஃபி பருகுவதால் புற்றுநோய் வளர்க்கும் 

அ) கூற்று I சரி. கூற்று II தவறு 

ஆ) கூற்று I, II - இரண்டும் சரி 

இ) கூற்று I தவறு, கூற்று II சரி 

ஈ) கூற்று I, , II இரண்டும் தவறு

விடை : அ) கூற்று I சரி. கூற்று II தவறு 

 

5. டெக்டோனா கிராண்டிஸ் என்பது இந்தக் குடும்பத்தின் தாவரம் 

அ) லேமியேசி

ஆ) ஃபேபேசி 

இ) டிப்டீரோகார்பேசி 

ஈ) எபினேசி

விடை : அ) லேமியேசி 

 

6. டாமெரிடைஸ் இண்டிகாவின் பிறப்பிடம் ; 

அ) ஆப்பிரிக்க வெப்பமண்டலப் பகுதி 

ஆ) தென்னிந்தியா, ஸ்ரீலங்கா 

இ) தென் அமெரிக்கா, கீரிஸ் 

ஈ) இந்தியா மட்டும்

விடை : அ) ஆப்பிரிக்க வெப்ப மண்டலப் பகுதி 

 

7. பருத்தியின் புது உலகச் சிற்றினங்கள் 

அ) காஸிப்பியம் ஆர்போரிடம் 

ஆ) கா. ஹெர்பேசியம் 

இ) அ மற்றும் ஆ இரண்டும் 

ஈ) கா. பார்படென்ஸ் 

விடை : ஈ) கா. பார்படென்ஸ் 

 

8. கூற்று : மஞ்சள் பல்பேறு புற்றுநோய்களை எதிர்க்கிறது. 

காரணம் : மஞ்சளில் குர்குமின் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது. 

அ) கூற்று சரி, காரணம் தவறு 

ஆ) கூற்று தவறு, காரணம் சரி 

இ) கூற்று, காரணம் - இரண்டும் சரி 

ஈ) கூற்று, காரணம் - இரண்டும் தவறு

விடை : இ) கூற்று, காரணம் - இரண்டும் சரி 

 

9. சரியான இணையைக் கண்டறிக 

அ) இரப்பர் - ஷோரியா ரொபஸ்டா 

ஆ) சாயம் - இண்டிகோஃபெரா அன்னக்டா 

இ) கட்டை - சைப்ரஸ் பாப்பைரஸ் 

ஈ) மரக்கூழ் - ஹீவியா பிரேசிலியன்ஸிஸ் 

விடை : ஆ) சாயம் – இண்டிகோஃபெரா அன்னக்டா 

 

10. பின்வரும் கூற்றுகளை கவனித்து அவற்றிலிருந்து சரியானவற்றை தேர்வு செய்யவும் 

கூற்று 1 : மணமூட்டிகள் அத்தியாவசிய எண்ணெயி லிருந்து உற்பத்திச் செய்யப்படுகின்றன. 

காரணம் II : அத்தியாவசிய எண்ணெய்கள், தாவரங்களின் பல்வேறு பகுதிகளில் உருவாக்குகின்றன. 

அ) கூற்று 1 சரியானது 

ஆ) கூற்று II சரியானது 

இ) இரண்டு கூற்றுகளும் சரியானவை 

ஈ) இரண்டும் கூற்றுகளும் தவறானவை

விடை : இ) இரண்டு கூற்றுகளும் சரியானவை 

 

11. கீழ்கண்ட கூற்றுகளை கவனித்து, பின் வருவனவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும் 

கூற்று I : சித்த மருத்துவத்தின் மருந்து ஆதாரமாக மூலிகைகள், விலங்குகளின் பாகங்கள், தாதுக்கள், தனிமங்கள் போன்றவைகள் உள்ளன. 

காரணம் II : நீண்ட நாட்கள் கெடாத மருந்துகள் தயாரிக்க கனிமங்கள் பயன்படுத்தப் படுகின்றன. 

அ) கூற்று I சரியானது 

ஆ) கூற்று II சரியானது

இ) கூற்றுகள் இரண்டும் சரியானவை 

ஈ) கூற்றுகள் இரண்டுமே தவறானவை

விடை : இ) கூற்றுகள் இரண்டும் சரியானவை 

 

12. செயலாக்க மூலமருந்து டிரான்ஸ்-டெட்ரா ஹைட்ரோகென்னாபினா எதிலுள்ளது? 

அ) அபின்

ஆ) மஞ்சள் 

இ) கஞ்சாச்செடி 

ஈ) நிலவேம்பு

விடை : இ) கஞ்சாச்செடி

 

13. பின்வருவனவற்றுள் பொருத்தமான இணை எது? 

அ) பனை மரம் - பிரேசிலைப் பிறப்பிடமாகக் கொண்டது. 

ஆ) கரும்பு - கன்னியாகுமரியில் அதிகளவில் உள்ளது. 

இ) ஸ்டீவியா - இயற்கை இனிப்பு. 

ஈ) பதனீர் - எத்தனாலுக்காக நொதிக்க வைக்கப்படுகிறது.

விடை : இ) ஸ்டீவியா - இயற்கை இனிப்பு.

 

14. புதிய உலகிலிருந்து உருவானதும், வளர்க்கப்பட்டதுமான ஒரே தானியம்? 

அ) ஒரைசா சட்டைவா 

ஆ) டிரிட்டிக்கம் ஏஸ்டிவம் 

இ) டிரிட்டிக்கம் டியூரம் 

ஈ) ஜியா மேய்ஸ்

விடை : ஈ) ஜியா மேய்ஸ்

Tags : Economically Useful Plants and Entrepreneurial Botany பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்.
12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany : Choose the Correct Answers (Pure Science Group) Economically Useful Plants and Entrepreneurial Botany in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 10 : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு) - பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 10 : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்