வடிவியல் | அலகு 5 | 8 ஆம் வகுப்பு கணக்கு - சர்வசம மற்றும் வடிவொத்த வடிவங்கள் | 8th Maths : Chapter 5 : Geometry
சர்வசம மற்றும் வடிவொத்த வடிவங்கள்
சர்வசம உருவங்கள் என்பன வடிவிலும் அளவிலும் மிகச் சரியாக அமையும் உருவங்கள் ஆகும். மாறாக, இரு வடிவங்கள் ஒன்றின் மீது ஒன்று மிகச் சரியாகப் பொருந்தினால், அவை சர்வசமம் எனப்படும்.
எடுத்துக்காட்டுகள்
வடிவொத்த உருவங்கள் கணித ரீதியாக ஒரே வடிவங்களையும், ஆனால் மாறுபட்ட அளவுகளையும் பெற்றிருக்கும். இரு வடிவியல் உருவங்கள் வடிவொத்தவை (~) எனில், ஒரு உருவத்தின் அளவுகள் மற்றொரு உருவத்தின் ஒத்த அளவுகளுடன் ஏற்படுத்தும் விகிதம் மாறாது. உதாரணமாக, புகைப்பட விரிவாக்கத்தின் ஒவ்வொரு பகுதியும் அசலின் ஒத்தப் பகுதிக்கு வடிவொத்தவையாக இருக்கும்.
எடுத்துக்காட்டுகள்
இவற்றை முயல்க
வடிவொத்த மற்றும் சர்வசம உருவங்களின் சோடிகளை அடையாளம் கண்டு, அவற்றின் எழுத்துச் சோடிகளை எழுதுக.